Sunday, November 17, 2019

SILUVAI THIRU SILUVAI

சிலுவை திரு சிலுவை 
சிலுவையின் இனிய மறைவினில் மறைத்து 
கருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய 

1. பரியாசம் பசி தாகமடைந்து 
படுகாயம் கடும் வேதனை அடைந்து 
பாவமறியா பரிசுத்தர் இயேசு (2) 
பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும் 

2. கைகள் கால்களில் ஆணி கடாவ 
கடும் முள் முடி பின்னி தலையிலே சூட 
நான்கு காயங்கள் போதாதென்று (2) 
நடு விலாவையும் பிளந்திட செய்த 

3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்க 
இரத்தத்தால் பாவ கறைகள் நீக்க 
உந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2) 
சாபத்தினின்று நீ விடுதலையடைய 

4. லோக சிற்றின்ப பாதையை நோடி 
மாளும் பாவியை சிலுவையில் தேடி 
சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து (2) 
அன்பினை ஈக்க ஐங்காயமான

SARUVA VALIMAI KIRUBAIGAL

சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா
தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா

தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த
தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா

இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்
இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா

அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று
அறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா

SINTHIKA VARIR SEYAL VEERARE

சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2
சிந்திய இரத்தம் கூப்பிடுதே -3
சபையே நீ திரும்பிப் பார்
சபையே நீ குனிந்துப் பார்
சபையே நீ நிமிர்ந்துப் பார்
முன்னேப் பார் -3

1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்
பூர்வ பாதைகளை விசாரித்து அறி
இளைப்பாறுதல் அதுவே ஆத்துமாவுக்கு
களைப்பை போக்கிடுமே போதுமதுவே

2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை
முழங்கால் முடக்கிக் குனிந்துபார்
வணங்காக் கழுத்துனக்கு வேண்டாமே
வனாந்தரத்தில் அதினால் அழிவாமே

3.வானத்தின் சத்துவங்கள் அசைவதைப்பார்
வானவரின் வருகை சமீபமே
நிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே
நிலைத்திருப்பவைகளையே நாடு நீயே

4.கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை
கண்டிப்பாய் செயல்பட வேண்டுமே
அழியும் கணிகளைப் பொறுக்காவிடில்
அழுகை தான் தங்கிடுமே வருகையிலே

SILUVAI SUMANTHA URUVAM

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே 
நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா – 2 

1. பொல்லா உலக சிற்றின்பங்கள் 
எல்லாம் அழியும் மாயை 
காணாய் நிலையான சந்தோஷம் புவியில் 
கர்த்தாவின் அன்பண்டை வா 

2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் 
ஆத்மம் நஷ்டமடைந்தால் 
லோகம் முமுவதும் ஆதாயமாக்கியும் 
லாபம் ஒன்றுமில்லையே 

3. பாவ மனித ஜாதிகளைப் 
பாசமாய் மீட்க வந்தார் 
பாவப்பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் 
பாவமெல்லாம் சுமந்தார் 

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ 
நித்திய மோட்ச வாழ்வில் 
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம் 
தேவை அதை அடைவாய் 

5. தாகமடைந்தோர் எல்லோருமே 
தாகத்தைத் தீர்க்க வாரும் 
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் 
ஜீவன் உனக்களிப்பார்