Tuesday, September 13, 2022

Kanikkai Thanthom Karthavae



காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மை இப்போதே
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே

நாங்கள் தந்த காணிக்கை எல்லாம்
இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
ஆகாயம் மாறும் இறைவனின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது

ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே
கண்ணீரைப்போல காணிக்கை இல்லை
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே

காணிக்கை தான் செலுத்த வந்தோம்
கருணை கிடைக்கட்டும்
தேவன் தந்த ஜீவன் எல்லாம்
புனிதம் அடையட்டும்
என்னண்டை வாரும் பாவங்கள் தீரும்
ஏனென்று கேளும் இறைவனின் மகனே
எம்மையே காணிக்கை தந்தோமே

Pali Beedatthil Vaithaen Ennai



பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - 2

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே - 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2
நித்தம் வழிநடத்தும் - 2

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் - 2
வாருமய்யா வந்து என்னை - 2
வல்லமையால் நிரப்பும் - 2

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க - 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2
பரிசுத்தமாக்கி விடும் - 2 

Padaippu Ellam Umakkae Sontham

Padaippu Ellam Umakkae Sontham

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே - 2

இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் - 2
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் - 2
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே - 2

இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் - 2
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே - 2
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் - 2

En Uthadu Ummai Thuthikkum


என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் -2 (சங் 63:3)
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது -2

1. நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன் -2 (சங் 63:7)
இறுதிவரை உறுதியுடன்
உம்மையே பற்றிக்கொண்டேன்
தாங்குதையா உமது கரம் -2 (சங் 63:8)

என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் -4 – உம் சமுகம்

2. என் தகப்பன் நீர்தானையா (சங் 63:1)
தேடுகிறேன் அதிகமதிகமாய் -2
ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன் -2 – என் உதடு

3. அறுசுவை உணவு உண்பதுபோல்
திருப்தி தினம் அடைகின்றேன் -2
ஆனந்த களிப்புள்ள (சங் 63:5)
உதடுகளால் துதிக்கின்றேன்
ஆனந்தம் ஆனந்தமே -2 – என் உதடு

En Uthadu Ummai Thuthikkum
Jeevanulla Natkalellam -2
Um Samugam Melaanathu
Uyirinum Melaanathu -2

1. Neer Enakku Thunayaai Iruppathaal
Um Nizhalil Agamagizhgindraen -2
Iruthivarai Uruthiyudan
Ummaiyae Patrikkondaen
Thaanguthaiyaa Umathu Karam -2

En Uthadu Ummai Thuthikkum
Jeevanulla Natkalellam -4 – Um Samugam

2. En Thagappan Neerthaanayya
Thedugiraen Athigamathigamaai -2
Jeevan Tharum Devanathi Vatraatha Neerootru
Ummil Naan Thaagam Kondaen -2 – En Uthadu

3. Arusuvai Unavu Unbathu Pol
Thirupthi Thinam Adaigindraen -2
Aanantha Kalippulla
Uthadukalaaal Thuthikkindraen
Aanantham Aaananthamae -2 – En Uthadu

Yesu En Ithaayathile Enneramuum


இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே..
இயேசு என் மனதினிலே எந்நேரமும் என்னுடனே..
சிரிப்பிலும் உம்மை
நான் பாடுவேன்..
என் துக்கத்தில் உம்மை
நான் உயர்த்துவேன் -(2)
நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லையே…
உம் அன்பினால் நான்
உயீர் வாழ்கிறேன்-(2)

இந்த உலகம் என்னை தள்ளிவிட்டும் நீர் வந்தீர்..
ஆகாதவன் என்றபோது
அன்பை காட்டினீர்..
என்றும்…

நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லையே…
உம் அன்பினால் நான்
உயீர் வாழ்கிறேன்

Parisutharae Parigariyae


பரிசுத்தரே பரிகாரியே
என் பாவங்கள் சுமந்தவரே
நீர் சொன்னால் போதும் என் தேவனே
நீர் தொட்டால் போதும் என் இயேசுவே
என் பாவம் எல்லாம் பறந்தோடுமே 

நீரே பரிசுத்தர் – 2

பரிசுத்தர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர்
இயேசுவே நீரே
நீரே.. நீர் ஒருவரே 

எனக்காகவே சிலுவையிலே
உம் ஜீவனை தந்தீரே
அளவில்லா அன்பு மேலான அன்பு
அளவில்லா அன்பு பெரிதான அன்பு
உம்மையே எனக்காய் தந்தீரே 

நீரே பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர்
இயேசுவே நீரே
நீரே.. நீர் ஒருவரே

எண்ணிலாத நன்மைகளை
என் வாழ்விலே செய்தவரே
உந்தனின் மகிமையை
எண்ணியே நான்
உந்தனின் பாதம் சரணைடைதேன்
உமது இரக்கம் பெரியது

நீரே பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர்
இயேசுவே நீரே
நீரே.. நீர் ஒருவரே

Ummai Pola Maranum

உம்மை போல மாறனும்

உம்மை போல வாழனும்
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூரனும்

உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன்
உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்
உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன்
உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே
நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே

உம்மை போல மாறனும்
உம்மை போல வாழனும்
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூரனும்

உமது சாயலை நான் பிரதிபலிப்பேன்
உந்தனின் கிருபையால் நிதம் வாழுவேன்
உமது சாயலை நான் பிரதிபலிப்பேன்
உந்தனின் கிருபையால் நிதம் வாழுவேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம்
நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம்

உம்மை போல மாறனும்
உம்மை போல வாழனும்
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூரனும்

உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன்
உமது சேவையில் நான் நிலைத்திருப்பேன்
உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன்
உமது சேவையில் நான் நிலைத்திருப்பேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் ஏக்கம்
நீர் ஒருவரே என் வாழ்வின் நோக்கம்

உம்மை போல மாறனும்
உம்மை போல வாழனும்
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூரனும்

Sathiya Saatchiyaaga Nadappathe Pothum


சத்திய சாட்சியாக நடப்பதே போதும்
நித்திய ராஜ்ஜியம் அடைவதே போதும் – 2
ஜீவனை பார்க்கிலும் கிருபையே போதும்
தேவ பக்தியாய் நானும் வாழ்வதே போதும் – 2

1. கர்த்தரை பாடி நான் துதிப்பதே போதும்
காத்திருந்தே தினம் ஜெபிப்பதே போதும் – 2
துன்புற்ற நேரம் துணை இயேசு போதும்
தம் திரு பாதத்தில் ஆறுதல் போதும் – 2 (…சத்திய)

2. கர்த்தரின் வருகையில் பறப்பதே போதும்
கர்த்தரிடம் நானும் சேர்வதே போதும் – 2
வையகம் வேண்டாம் பரலோகம் போதும்
வானவர் இயேசுவை காண்பதே போதும் – 2 (…சத்திய)

Karthar Unnai Niththamum

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார் – 2
உன் ஆத்துமாவை திருப்பதி செய்வார் (2)

தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் – 2
துதிப்போரை கைவிடமாட்டார் (2)

1. நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நிபச்சொல்லை நடு நின்று நீக்கி – 2
கிருபையென்னும் மதிலை பணிவார்
உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் (…தொடர்ந்து)

2. அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது – 2
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார் (…தொடர்ந்து)

விசுவாசியை கைவிடமாட்டார்
நம் குடும்பங்களை கைவிடமாட்டார்
நம் சபையை கைவிடமாட்டார்
உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார்
உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார்
உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்

தகப்பனே தந்தையே தலைநிமிரச் செய்பவர் நீரே

தகப்பனே தந்தையே
தலைநிமிரச் செய்பவர் நீரே – 2 (1)

கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே – 2 (2)

1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர் – 2
ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை – 2

தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர் – 2 (…கேடகம் நீரே)

2. படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் – 2
அச்சமில்லையே கலக்கமில்லையே – 2

வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே – 2 (…கேடகம் நீரே)

3. ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே – 2
நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை – 2

அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் – 2 (…கேடகம் நீரே)

உம் பாதம் ஒன்றே ஆறுதல்

உம் பாதம் ஒன்றே ஆறுதல்
தேடி வந்தேன் இயேசுவே (2) – 2

1. பாவம் என்னை சூழ்ந்தது
சாபம் என்னை தொடர்ந்தது – 2
பாருமே என் இயேசுவே (2)
கிருபையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்)

2. உலகம் என்னை வெறுத்தது
உற்றார் நண்பர் பகைத்தனர் – 2
சோர்வுதான் என் வாழ்க்கையே (2)
பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்)

3. எந்தன் பாரம் சுமந்தவர்
எந்தன் துக்கம் ஏற்றவர் – 2
கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2)
கருணையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்)


என் உள்ளம் உம் அன்பை பாடும்

என் உள்ளம் உம் அன்பை பாடும்
என் நாவு உம் நாமம் போற்றும்
என் இதயம் உம்மில் மகிழும்
எனக்கென்றும் நீர் போதும்

உம் அன்பு பெரியது
உம் நாமம் உயர்ந்தது
என் இதயம் மகிழ்ந்தது
நீர் போதும் என்றது

1. உம் நேசத்தாலே சோகமானேனே
உம் பாசத்தால் பிடிக்கப்பட்டேனே
உம் நாமத்திற்குள் சுகம் கண்டேனே
உம்மாலே இரட்சிக்கப்பட்டேனே

2. உம் கண்களில் கிருபை பெற்றேனே
உம் கரத்தால் சுமக்கப்பட்டேனே
உம் மடியில் நான் தேற்றப்பட்டேனே
உம்மாலே நான் வாழ்க்கை பெற்றேனே


உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா

 உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா

உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா

நீர் எங்கே போனாலும் நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும் நான் அங்கே இருப்பேன்

வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே
ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும்
உலகமே வெறுத்தாலும்
உந்தன் கரம் என்னை தாங்குமே

உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே
ஆழ்க்கடலின் ஆழத்துல
என்னத் தூக்கி எறிஞ்சாலும்
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்