Thursday, November 12, 2015

paathagan en vinaitheer-பாதகன் என் வினைதீர், ஐயா

பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.

அனுபல்லவி

தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. --- பாதகன்

சரணங்கள்

1. வந்துறும் எப்பாவிகளையும் - அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? --- பாதகன்

2. சிந்தின உன் உதிரம் அதே - தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே --- பாதகன்

3. அற்பவிசுவாசமுளன் ஆம் - அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. --- பாதகன்

Monday, November 9, 2015

paadi thuthi maname kon daadi thuthi diname

பாடித் துதி மனமே பரனைக் கொன் - டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்     -   பாடி

1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
    செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
   மார்கமதாகக் குமாரனைக் கொண்டு
  விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்   -     பாடி

2.  சொந்த ஜனமாக யூதர் இருந்திட
     தொலையில் கிடந்த புற சாதியாம் எமை
     மந்தையில் சேர்த்துப் பராபரண் தம்முடை
    மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்       -  பாடி

3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர் ,
    எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்
   எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
   இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் - பாடி

Saturday, November 7, 2015

AANDAVAR PADAITHA VETRIYIN NAALITHU

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்

அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும்

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்

2. எனது ஆற்றலும் எனது பாடலும்
எனது மீட்புமானார்
நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும்

3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல் ஆயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன்

4. என்றும் உள்ளது உமது பேரன்பு
என்று பறைசாற்றுவேன்
துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரையா

ARATHIPPEN NAAN ARATHIPPEN

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்

6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

ARADHIPPEN ARADHIPPEN ARADHIPPEN

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2)

பரிசுத்த கரங்களை உயர்த்தி
புதிய பாடல் பாடி ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன்

பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன்

வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன்

தேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன்

வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன்

ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன்

சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை – ஆராதிப்பேன்

ABRAGAMIN DEVANE ESAKKIN DEVANE

ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே

உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே
ஆனந்தம் அடைந்திடுவேன்

தானியேலின் தேவன் நீரே
சிங்கத்தின் வாயைக் கட்டினீரே
தேவாதி தேவனே வாழ்க
ராஜாதி ராஜாவே வாழ்க

சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவை
அவியாமல் அக்கினியிலே காத்தவரே
பாதுகாக்கும் இயேசு நாமம்
பரலோகம் சேர்த்திடும் நாமம்

பவுலும் சீலாவும் சிறையிலே
கட்டுகளை அறுத்துக் காத்தவரே
பரிசுத்த ஆவியே வாழ்க
திரியேக தேவனே வாழ்க

ANATHI SNEGATHAL ENNAI NESITHEERAIYAH

1. அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரைய்யா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

2. அனாதையாய் அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே - உங்க

3. நிலையில்லாதா உலகத்தில்
அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே
அனைத்துக் கொண்டீரே - உங்க

4. தாயின் கருவில் தோன்றுமுன்னே
தெரிந்துக் கொண்டீரே
தாயைப் போல ஆற்றி தேற்றி
அரவணைத்தீரே - உங்க

5. நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கிறேனைய்யா - உங்க

6. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே - உங்க

AANDAVAR UYIRTHAR AANANDHAME

ஆண்டவர் உயிர்த்தார் ஆனந்தமே
மரணத்தை ஜெயித்தார் ஜெயம் என்றுமே

மானிடர்க்காய் அவர் மரித்துயிர்த்தார்
ஆனந்தம் என்றுமே என்றென்றுமே

1. வானமும் பூமியும் நடுநடுங்க
வல்லவர் தாம் இதோ உயிர்த்தெழுந்தார்
வாக்கு மாறாத தேவன் இவர்
வல்லமையாய் இன்று உயிர்த்தெழுந்தார்

2. வேத வசனம் அது நிறைவேறிட
தேவ சித்தத்தின்படி உயிர்த்தெழுந்தார்
மண்ணோர்கள் யாவரும் மீட்படைய
மன்னவன் இயேசு உயிர்த்தெழுந்தார்

3. பாவத்தின் சாபம் போக்கிடவே
பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடவே
பாக்கிய சிலாக்கியம் பகிர்ந்தளித்து
பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்

ARANUM KOTAIYUMAI BELANAI KAAPPAVAR

அரணும் கோட்டையும்
பெலனாய் காப்பவர்
திடமாய் ஜெயித்திட
எனது என்றென்றும் துணையே

1. ஜீவ நம்பிக்கை நல்க
இயேசு மரித்து எழுந்தார் (2)
அழிந்திடாத உரிமை பெறவே
புது ஜீவன் அடையச் செய்தார் (2)

2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க
மகிமை நம்பிக்கை ஈந்தார் (2)
நீதிமானை செழிக்கச் செய்து
என்றென்றும் ஜெயம் நல்குவார் (2)

3. தம்மால் மதிலைத் தாண்டி
உம்மால் சேனைக்குள் பாய்வேன் (2)
எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்
என்றென்றும் துணைசெய்கின்றார் (2)

ANAITHAIYUM ARULIDUM ENAKENA THANTHIDUM

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

யெஹோவா யீரே – (4)

1. புல்லுள்ள இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும்
என் தேவனே

2. செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினைப் போல் என்னை சுமந்திடும்
என் தேவனே

3. சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேனே
என் தேவனே

4. தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதராக்குவேன்
என் தேவனே

ATHIKAALAIYIL UM THIRUMUGAM THEDI

அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்

ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

4. உமக்குகந்த தூய பலியாய் - இந்த
உடலை ஒப்புக் கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்

ALAGHANAVAR ARUMAIYAANAVAR INIMAIYANAVAR

அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர்
ம‌கிமையான‌வ‌ர் மீட்ப‌ரான‌வ‌ர்
அவ‌ர் இயேசு இயேசு இயேசு

சரணங்கள்

1. சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ந‌ம் ம‌கிமையின் இராஜா
என்றும் ந‌ம்மோடிருக்கும் இம்மானுவேல‌ன்
இம்ம‌ட்டும் இனிமேலும் எந்த‌ன் நேச‌ர்
என்னுடைய‌வ‌ர் என் ஆத்ம‌ நேச‌ரே

2. க‌ன்ம‌லையும் கோட்டையும் துணையுமான‌வ‌ர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமான‌வ‌ர்
என்றென்றும் ந‌ட‌த்திடும் எந்த‌ன் இராஜா
என்னுடைய‌வ‌ர் என் நேச‌ க‌ர்த்த‌ரே

3. க‌ல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே
நேச‌ர் இர‌த்த‌ம் சிந்தியே என்னை மீட்டார்
பாச‌த்தின் எல்லைதான் இயேசு இராஜா
என்னுடைய‌வ‌ர் என் அன்பு இர‌ட்ச‌க‌ர்

ANANTHA THUTHI OLI KETKUM

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் --- ஆ… ஆ…

1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு --- ஆ… ஆ…

2. ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் --- ஆ… ஆ…

3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் --- ஆ… ஆ…

4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் --- ஆ… ஆ…

ARATHANAIKUL VAASAM SEYUM AAVIYANAVARE

ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் - இன்று
வாசம் செய்கிறீர் (2)

அல்லேலூயா ஆராதனை (4)
ஆராதனை ஆராதனை ஆராதனை (2)

1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர் மேல் அசைந்தீர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்
உள்ளத்தில் வாசம் செய்யும்

4. மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

AASIRVATHA MALAI POLIYUM DEVA

ஆசீர்வாத மழை பொழியும் தேவா
ஆசீர்வாத மழை பொழியும் தேவா
எங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா --– ஆசீர்வாத

கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர்
வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2)
ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமே
ஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2) –-- ஆசீர்வாத

ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்
ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2)
ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும்
நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2) –-- ஆசீர்வாத

யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்
ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2)
பாவிகளுக்கும் துரோகிகளுக்கும்
நன்மை செய்பவர் என்னை ஆசீர்வதியும் (2) –-- ஆசீர்வாத

ARATHANAI DEVANE ARATHANAI YESUVE

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை

நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனை
நித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனை
உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை
மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை
பூரணமான தேவனே பூலோக ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

Friday, November 6, 2015

AATHIYUM ANTHAMUMANAVARE ALPHA

ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமெகாவுமானவரே - 2
அல்லேலுயா - 4

இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே - 2
அல்லேலுயா - 4

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - 2
அல்லேலுயா - 4

பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலியானவரே - 2
அல்லேலுயா - 4

சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே - 2
அல்லேலுயா - 4

சத்துரு வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2
அல்லேலுயா - 4

கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே - 2
அல்லேலுயா - 4

புறப்பட்டுப் போங்கள் என்றவரே
அதிகாரங்கள் யாவும் தந்தவரே - 2
அல்லேலுயா - 4

உலகின் முடிவு பரியந்தம் நான்
உங்களோடிருப்பேன் என்றவரே - 2
அல்லேலுயா - 4

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - 2
அல்லேலுயா - 4

அல்லேலுயா ஆமென் அல்லேலுயா
அல்லேலுயா ஆமென் அல்லேலுயா - 2
அல்லேலுயா - 4

ATHISAYAM SEIVAR DEVAN ARPUTHAM

1. அதிசயம் செய்வார் தேவன்
அற்புதம் செய்வார் இயேசு
ஆண்டவர் வாக்கை நம்பு
நிச்சயம் வாழ்வு உண்டு

வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

2. இழந்ததைத் திரும்ப தருவார்
தேசம் தன் பலனைக் கொடுக்கும்
கர்த்தர் நன்மை அருள்வார்
என்றும் துதித்திடுவாய் --- வெட்கப்பட்டு

3. களங்கள் தானியத்தால் நிரம்பும்
என்ணெயும் ரசமும் வழியும்
வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
தோட்டங்கள் துரவுகள் தருவார் --- வெட்கப்பட்டு

4. தேவனின் வாக்கை நம்பு
திரும்பப் பெற்றுக் கொள்வாய்
உன்னதர் உன்னோடு உண்டு
திருப்தியாக வாழ்வாய் --- வெட்கப்பட்டு

தடைகள் தகர்ந்து போகும் (4)

ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)

ALLELUJAH ALLELUJAH

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

1. யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா நிஸியே அல்லேலூயா
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா

2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

3. தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா

APPA UM KIRUBAIGALAL

அப்பா உம் கிருபைகளால்
என்னை காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் என்னை
அணைத்துக் கொண்டீரே

1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் தேவ கிருபை –-- அப்பா

2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை –-- அப்பா

3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியைத் தந்திட்ட தேவ கிருபை –-- அப்பா

ANATHI SNEGAM ENGAL YESUVIN

அநாதி ஸ்நேகம் - (3)
எங்கள் இயேசுவின் ஸ்நேகம்

பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம்
பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம்
எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் - (2)

1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம்
காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல்
ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம்
அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் --- அநாதி

2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்
நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய
யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம்
அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் --- அநாதி