Friday, July 17, 2015

Yethenil Aathi Manam

ஏதேனில் ஆதி மணம் – உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே

இப்போதும் பக்தியுல்லோர் – விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னா மாவார் – மும்முறை வாழ்த்துண்டாம்

ஆதாமுக்கு ஏவாளைக் – கொடுத்ஹ்ட பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைக் கொடுக்கவாருமே

இருதன்மையும் சேர்ந்த கன்னியின் மைந்தனே!
இவர்கள் இரு கையும் இணைக்க வாருமே

மெய்மணவாளனான தேவ குமாரர்க்கே
சபையாம் மனையாளை – ஜோடிக்கும் ஆவியே

நீரும் இந்நாளில் வந்து – இவ்விரு போரையும்
இணைந்து அன்பாய் வாழ்த்தி மெய்ப்பாக்கியம் ஈந்திடும்


Engalukkullae Vaasam

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே….
இந்நாளில் உம சித்தம் போல் நடத்திச் செல்லுமையா

ஆவியானவரே……. ஆவியானவரே…….
பரிசுத்த ஆவியானவரே

எப்படி நான் ஜெபிக்கவேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே……. (2)
வேத வசனம் புரிந்து கொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே….. (2)

கவலை கண்ணீர் மறக்கணும்
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே

எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழி நடத்தும் ஆவியானவரே
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்குச் செல்லாமல்
தடுத்து நிறுத்தும் ஆவியானவரே

எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் தீக்கணைகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வு அசதிகள்
பெலவீனங்கள் நீக்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே