Sunday, September 6, 2015

OA MANITHANE NEE ENGE POGIRAI

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?
காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலராய் வாழ்கின்றாய்

சரணங்கள்

1. மண்ணில் பிறந்த மானிடனே
மண்ணுக்கே நீ திரும்புவாய்
மரணம் உன்னை நெருங்கும் போது
எங்கே நீ ஓடுவாய்
மரணத்தின் பின்னே நடப்பது என்ன
என்பதை நீ அறிவாயோ --- ஓ

2. பாவியாய் பிறந்த மானிடனே
பாவியாய் நீ மரிக்கின்றாய்
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ
இன்றே மரணத்தை வென்றிடுவாய்
நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் --- ஓ

EENALOGATHIL YESU YEN PIRANTHAR

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்

ஆ அதிசயம் ஆ அதிசயம்
அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
அன்பரின் பிறப்பு அதிசயம்

மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே
மனு உரு எடுத்த மகிமையே

மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால்
பாவியின் சாயல் அணிந்ததால்

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
ஆகாய மகிமை ஜொலித்ததால்
ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்

ULAGOR UNNAI PAGAITHALUM

1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூருவாயோ? (2)
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயோ? (2)

பல்லவி

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)
2. உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும் (2)
உள்ளத்தினின்று கூருவாயோ?
ஊழியம் செய்ய வருவாயா (2)

3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2)

4. இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா? (2)

5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே (2)
யாரை நான் அனுப்பிடுவேன்
யார்தான் போவார் எனக்காக (2)

ULLATHIL AVARPAAL PERANBULLORELLAM

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவை பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே

1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை
தமதாக்கியவர் வாழுவார் , மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்?
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மை அவர்க்காய் அளிப்பார்

ekkala satham vaanul thonithidave

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்

சரணங்கள்

1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே

2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்

3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார்

kodakodi sthothiram yereduppom

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலுயா அல்லேலுயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம்

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலுயா அல்லேலுயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலுயா அல்லேலுயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலுயா அல்லேலுயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலுயா அல்லேலுயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
துய முகம் கண்டு கெம்பீரிப்போம்

engum pugal yesu rasanukke

எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!

அனுபல்லவி

உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும் ,
உயர்வீரரெனப் பக்தர் ஓதுகிறார் --- எங்கும்

சரணங்கள்

1. ஆயிரத் தொருவர் ஆவிரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர் ;
தாயினும் மடங்குசதம் அன்புடைய
சாமி யேசுவிக்கிதயம் தந்திடுவீர் --- எங்கும்

2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன்பட்டவர்கள் கண்திறக்கவே ;
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் --- எங்கும்

3. தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? --- எங்கும்

4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே தூயன்வீரரே ;
கர்த்தரின் பாதத்தில் காலைமாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவீர் --- எங்கும்

yenge sumandhu pogirir siluvaiyai neer

எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர் ?

சரணங்கள்

1. எங்கே சுமந்து போறீர் ? இந்தக் கானலில் உமது
அங்கம் சுமந்து நோக , ஐயா , என் ஏசுநாதா --- எங்கே

2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல் ,
தாளுந் தத்தளிக்கவே , தாப சோபம் உற , நீர்--- எங்கே

3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர --- எங்கே

4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர ,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர --- எங்கே

5. வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும் ,
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்--- எங்கே

6. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து --- எங்கே

ENNI ENNI THUTHI SEIVAI

எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமேசரணங்கள்

1. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே ,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைப்பாரே

2. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்

3. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்

4. திறந்த வாசல் முன்னே
தீவிரமாய் பிரவேசிப்போம்
ஒரு மனிதனும் பூட்ட மாட்டான்
உன் கர்த்தர் முன் செல்வார்

ENNIL ADANGA STHOTHIRAM DEVA LYRICS

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

1. பூமியில் வாழ்கின்ற யாவும்
அதின் மேல் உள்ள ஆகாயமும்
வான்தூதர் சேனைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே

2. சூரிய சந்திரரோடே
சகல நட்சத்திர கூட்டமும்
ஆகாயப் பறவைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே

3. காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுதே

4. பாவ மனுக்குலம் யாவும்
தேவா உம் அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு
ஒயா துதி பாடுதே

ennai poosi kayangal aatriye

எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே
திராட்சை ரசத்தால் என்
உள்ளம் தேற்றியே
மரண தருவாயில் என்னை
அவர் கண்டார் அன்பால்
எரிகோ நகர் வீதிதனிலே

எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை நிறைந்தார் (கவர்ந்தார்)
என்றென்றும் என் சிந்தை நிறைந்தார்

He poured in the oil and the wine
The kind that restoreth my soul
He found me bleeding and dying
On the Jericho road
And He poured in the oil and the wine

Jesus, Jesus, Jesus
I’ve got Him on my mind (3)
I have Jesus on my mind

ethanai thiral en paavam en devane

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
எளியன்மேல் இரங்கையனே

அனுபல்லவி

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே --- எத்தனை

சரணங்கள்

1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! --- எத்தனை

2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே ,
உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் , எனை ஆளும் ! --- எத்தனை

3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன் போல் ,
நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! --- எத்தனை

4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே ! --- எத்தனை

enthan anbulla aandavar yesuve naan

1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வம் நீரே

பல்லவி

ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே
2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே

3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே

4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே

5. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரே

vaana paraaparane ippo vaarum emmathiyile

1. வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே
வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா
எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா

2. பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே!
பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா
வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க

3. கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே
கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே
நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே

4. தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க
ஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே
யெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா

5. நினைத்திடா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே
ஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே
மாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே

6. வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர்
பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே
கல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே

7. ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே
அன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே
ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்

ENTHAN ULLAM PUTHUKAVIYALE PONGA LYRICS

எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
பல்லவி
அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன் – எந்தன் உள்ளம்
1. சென்ற காலம் முழுவதும் காத்தாரே – ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
2. சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
3. பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
4. களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட – என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

enthan jebavelai ummaithedi vanthen

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்

1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன்

2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே

3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா

4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீர் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே

ENTHAN NAAVIL PUTHUPAATTU LYRICS

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)

அனுபல்லவி

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் (2) --- எந்தன்

சரணங்கள்

1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் --- ஆனந்தம்

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் --- ஆனந்தம்

3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் --- ஆனந்தம்

4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் --- ஆனந்தம்

5. இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் --- ஆனந்தம்

ENNALUME THUTHIPPAI ENNATHUMAVE NEE

எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய் !

அனுபல்லவி

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ;
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது --- எந்நாளுமே

சரணங்கள்

1. பாவங்கள் எத்தனையோ - நினையா திருத்தாருன்
பாவங்கள் எத்தனையோ ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி --- எந்நாளுமே

2. எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் --- எந்நாளுமே

3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை ;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் --- எந்நாளுமே

4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும் ;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே , சத்திய மேயிது --- எந்நாளுமே

5. மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம் ;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே --- எந்நாளுமே

6. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே --- எந்நாளுமே

ENATHU KARTHARIN RAJAREEGA NAAL

எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ ?

அனுபல்லவி

மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே --- எனது

சரணங்கள்

1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,
ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே --- எனது

2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே ;
பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே --- எனது

3. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே ,
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏந்திப் பாடுமே ;
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே ;
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே --- எனது

4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே ;
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே ;
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே ;
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே --- எனது

ENAKKOTHASAI VARUM PERVATHAM NERAI

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்

சரணங்கள்

1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் --- எனக்

2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே --- எனக்

3. என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே --- எனக்

4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே ---எனக்

5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் ---எனக்

enakinbam ethennu kelu naan

1. எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன்
என் பாரம் நீங்கிற்றே
வம்பன் வந்தென்னை நோக்கி , நீங்கிற்றென்றால்
தெம்பாய் நீங்கிற்றென்பேன்

பல்லவி

அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதே
அவை வானம் பூமி போல நீங்கிற்றே
அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே
ஆமென் சுத்தமானேன்
2. அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார்
என் பாரம் நீங்கிற்றே
என் உள்ளம் பொங்கிட்டதே பிசாசோடிப் போனான்
அன்றே சுகமானேன் --- அதை

3. சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால்
சீ போ நீங்கிற்றென்பேன்
நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார்
நேசர் சுகம் தந்தார் --- அதை

4. எப்போதும் நேசருடன் என் நாளெல்லாம்
அப்போதென் பாக்கியமாம்
தப்பாது பாட்டுப்பாடி ஜெபித்துப் போற்றுவேன்
ஆஹா பேரின்பமே --- அதை

enakai jeevan vittavare

1. எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே

பல்லவி

இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே --- இயேசு

3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் --- இயேசு

4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் --- இயேசு

en arul naadha yesuve

1. என் அருள் நாதா இயேசுவே
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்

2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

3. கை , தலை , காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
முள் முடியும் ஒப்பற்றதே

4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்

5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே

ANBIN AANDAVARE AATHMA AMAITHI THANTHEER

அன்பின் ஆண்டவரே
ஆத்ம அமைதி தந்தீர்
அன்பில் இறுக்கம்
பண்பில் ஒழுக்கம்
என்றும் காத்திடுவீர் - இயேசுவே -(2)

1. சொந்தப் பிள்ளையாக
எட்டிக் காயுமான
இந்தப் பாவியையும்
பங்கம் பாசம் காட்டி

அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின்

2. வாழ்நாள் முடிவுவரை
தேவ பணிபுரிவேன்
கள்ளம் கபடு இன்றி
கர்த்தர் வழியில் செல்வேன்

அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின்

EN AATHMA NESAR YESUVAI

என் ஆத்தும நேசர் இயேசுவை
நான் அண்டிக் கொள்வேனே (4)
1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார்
நித்திய வழிக்குள் நடத்திட்டார்
விலையில்லா இரத்தம் சிந்தினார்
விந்தையாய் என்னைச் சந்தித்தார்
பரகதி வாழ்வை தந்தவர்
பரமன் இயேசு கர்த்தரே
நித்திய வழிக்குள் நடத்தியவர்
நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா -- அல்லேலூயா --- என்
2. பாவத்தை கழுவி பரிகரித்தார்
சாபத்தை நீக்கி சங்கரித்தார்
லாபம் இன்றென் ஜீவனே
தாபம் எனக்கினி அவர்தானே --- பரகதி

3. என்னையே மீட்க என் இயேசு
தன்னையே தியாகம் செய்தாரே
அன்னையாய் அப்பனாய் ஆனவர்
உன்னையும் அன்பாய் அழைக்கிறார் --- பரகதி

EN AAVI AATHMA THEGAMUM ITHO

1. என் ஆவி ஆன்மா தேகமும்
இதோ படைக்கிறேன்;
என்றும் உம் சொந்தமாகவும்
பிரதிஷ்டை செய்கிறேன்.

2. ஆ, இயேசு, வல்ல ரட்சகா
உம் நாமம் நம்புவேன்;
ரட்சிப்பீர், மா தயாபரா,
உம் வாக்கை வேண்டுவேன்.

3. எப்பாவம் நீங்க, உறுப்பு
தந்தேன் சமூலமாய்;
போராட்டம் வெற்றி சிறப்பு
படைக்கலங்களாய்.

4. நான் உம்மில் ஜீவித்தல் மகா
மேலான பாக்கியம்;
தெய்வ சுதா, என் ரட்சகா,
என் ஜீவனாயிரும்.

5. என் நாதா, திரு ரத்தத்தால்
சுத்தாங்கம் சொந்தமே;
ஆனேன்! உம் தூய ஆவியால்
பலி நான் உமக்கே.

EN YESUVE NAAN ENDRUM UNTHAN SONTHAM

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் --- என்

2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் --- என்

3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் --- என்

EN JEBAVELAI VANJIPPEN

1. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
அப்போதென் துக்கம் மறப்பேன்!
பிதாவின் பாதம் பணிவேன்
என் ஆசையாவும் சொல்லுவேன்!
என் நோவுவேளை தேற்றினார்
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்

2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்
பேர் ஆசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
ஆனந்த களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன்
என் மோட்ச வீட்டை நோக்குவேன்
இத்தேகத்தை விட்டேகுவேன்
விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
பேரின்ப வீட்டில் வசிப்பேன்
வாடாத க்ரீடம் சூடுவேன்!

IVVULAGA MAKKALILE ANBU KOLLA VANTHAR

இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்
அந்த இறைவனின் அன்பினையே
ருசித்துப் பாராயோ நீ ருசித்துப் பாராயோ
இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்

1. கடவுளின் சாயலிலே படைக்கப்பட்டான் மனிதன்
கீழ்படியாமையால் இழந்தான் கர்த்தர் சமூகந்தனை
ஆயினும் வாக்களித்தார் ரட்சகரை நமக்கே
பாருலகை மீண்டும் தம்மோடு ஒப்புரவாக்க

2. படைத்தார் இப்பாருலகை படைத்தே பராமரித்தார்
நாம் பாவமே செய்தாலும் அழித்திட துணியவில்லை
படைப்பின் நீதினிலே பரிவும் அன்பும் கொண்டார்
பாவத்தையே வெறுத்தார் பாவியையோ நேசித்தார்

3. இறைவன் நமக்களித்த வாக்குதத்தங்கள் எல்லாம்
கிறிஸ்துவாம் உலக ரட்சகர் ஆண்டவரில் ஆம் என்றும்
இறைவனுக்கு மகிமை உண்டாகும் படி நம்மில்
இயேசு கிறிஸ்துவினால் ஆமேன் ஆமேன் என்றேன்

paareer gethsamane poongavil enn nesaraiye

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

சரணங்கள்

1. தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன்
படும் பாடு எனக்காகவே --- பாரீர்

2. அப்பா என் பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
தத்தம் செய்வேன் என்றாரே --- பாரீர்

3. ரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவும் நனைந்ததே
இம்மானுவேல் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தாரே --- பாரீர்

4. மும்முறை தரைமீது
தாங்கொணா வேதனையால்
உன்னதன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகன் மீட்புறவே --- பாரீர்