Friday, May 18, 2018

YARIDAM SELVOM IRAIVAA LYRICS



யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா    (4)

அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தர வேண்டும்    (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ  (2)
ஆதரித்தே அரவணைப்பாய்    (2)

மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா  (2)
குணமதிலே மாறாட்டம்  (2)
குவலயந்தான் இணைவதெப்போ   (2)

வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல்   (2)
உலகிருக்கும் நிலை கண்டு      (2)

உனது மனம் இரங்காதோ       (2)

YESUVAE UNTHAN VARTHAIYAAL LYRICS



இயேசுவே உந்தன் வார்த்தையால்
வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்புப் பாதையில்
கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என்
உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே

தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்
வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலங்களும் இங்கு
வீழ்ந்து ஒழிந்திடுமே
நீதியும் அன்பின் மேன்மையும்
பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே.

நன்மையில் இனி நிலைபெறும் என்
சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும்
ஒன்றாகும் நிலைவருமே
இன்றெழும் புது விந்தைகள்
உன்னைப் புகழ்ந்திடுதே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுதே

ADAIKALA PARAIYANA YESUVAE LYRICS


அடைக்கலப் பாறையான இயேசுவே 
அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2)
நீரே எனது வலிமை நீரே எனது பெருமை
நீரே எனது வாழ்வு இயேசையா (2)

தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2)
பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2)
எந்தன் ஆதாரம் நீயல்லவோ -அடைக்கல

போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2)        
உயரமான இடத்திலே என்னை நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2) 
என்னை மாண்புறச் செய்கின்றீரே -அடைக்கல

MANITHANAE NEE MANNAGA IRUKKINTAI LYRICS


மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ

இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்

VALLAMAI THEVAI THEVA LYRICS



வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா 
இன்றே தேவை தேவா இப்போது தாரும் தேவா 

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை - 2 
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை - 2 

இறுதி நாளில் எல்லோர் மேலும் ஆவியை பொழிவேன் என்றீர் - 2 
மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே - 2 

பெந்தேகோஸ்தே நாளின் போது பெரிதான முழக்கத்தோடு - 2 

வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் - 2

ENGALUKKULLAE VASAM SEIYYUM AAVIYANAVARAE LYRICS


எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா   (2)

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே   (2)

எப்படி நான் ஜெபிக்கவேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே   (2)
வேத வசனம் புரிந்து கொண்டு விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே   (2)  -ஆவியானவரே 

கவலை கண்ணீர் மறக்கணும் கர்த்தரையே நோக்கணும்
கற்றுத்தாரும் ஆவியானவரே  (2)
செய்த நன்மை நினைக்கணும் நன்றியோடு துதிக்கணும்

சொல்லித் தாரும் ஆவியானவரே  (2)  -ஆவியானவரே 

AAVIYANA THEVANAE ASAIVADUMAE LYRICS


ஆவியான தேவனே அசைவாடுமே -2
அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே - 2 
வாரும் ஆவியே தூய ஆவியே 
வாரும் ஆவியே தூய ஆவியே - 2 

தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே - உம் 
திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா - 2 

ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே - என் 
சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா - 2 

தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே - என் 
துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா - 2

NAMBIKKAI THARUM SILUVAIYAE LYRICS


நம்பிக்கை தரும் சிலுவையே
நீ மரத்துட் சிறந்த மரம் ஆவாய்
உன்னைப் போன்று தழை
பூ கனியை எந்த காவும் ஈந்திடுமோ?
இனிய சுமையை இனிய ஆணியால்
இனிது தாங்கும் மரமே நீ

மாட்சி மிக்க போரின் வெற்றி
விருதை நாவே பாடுவாய்
உலக மீட்பர் பலியதாகி
வென்ற விதத்தைக் கூறியே
சிலுவைச் சின்னமதைப் புகழ்ந்து
ஜெயத்தின் கீதம் ஓதுவாய் (நம்பிக்கை)

தீமையான கனியைத் தின்று
சாவிலே விழுந்த நம்
ஆதித் தந்தைக்குற்ற தீங்கை
கண்டு நொந்த சிருஷ்டிகர்
மரத்தால் வந்த தீங்கை நீக்க
மரத்தை அன்றே குறித்தனர் (இனிய)

வஞ்சகன் செய் சூழ்ச்சி பலவும்
சூழ்ச்சியால் மேற்கொள்ளவும்
பகைவன் செய்த கேட்டினின்று
நன்மை விளையச் செய்யவும்
வேண்டுமென்று நமது மீட்பின்
ஒழுங்கில் குறித்து இருந்தது (நம்பிக்கை)

எனவே புனித கால நிறைவில்
தேவபிதா தம் மைந்தனை
விண்ணில் நின்று அனுப்பலானார்
அன்னை கன்னி வயிற்றிலே
ஊன் எடுத்து வெளிவந்தாரே
மண்ணகத்தைப் படைத்தவர் (இனிய)

இடுக்கமான முன்னட்டியிலே
கிடந்து குழந்தை அழுகிறார்
தேவ உடலைத் துகிலில் பொதிந்து
சுற்றி வைத்து கன்னித்தாய்
இறைவன் அவர்தம் கையும் காலும்
கச்சையாலே பிணைக்கின்றார் (நம்பிக்கை)

முப்பதாண்டு முடிந்த பின்னர்
உடலின் காலம் நிறைவுற
மீட்பர் தாமாய் மனமுவந்து
பாடுபடவே கையளித்தார்
சிலுவை மரத்தில் பலியாகிடவே
செம்மறி உயர்த்தப் படலானார் (இனிய)

கசந்த காடி அருந்திச் சோர்ந்து
முட்கள் ஈட்டி ஆணிகள்
மென்மை உடலை துளைத்ததாலே
செந்நீர் பெருகிப் பாயவே
விண்ணும் மண்ணும் கடலும் உலகும்
அதனால் தூய்மை ஆயின (நம்பிக்கை)

வளர்ந்த மரமே உன்கிளை தாழ்த்தி
விரைத்த உடலைத் தளர்த்துவாய்
இயற்கை உனக்கு ஈந்த வைரம்
இளகி மென்மை ஆகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின்
உயர்ந்த தணித்துத் தாங்குவாய் (இனிய)

மரமே நீயே உலகின் விலையைத்
தாங்கத் தகுதியாகிய கிளை
திருச்செம்மறியின் குருதி உன்மேல்
பாய்ந்து, தோய்த்ததாதலால்
புயலில் தவிக்கும் உலகிற்கெல்லாம்
புகலிடம் நீ, படகும் நீ (நம்பிக்கை)

பரம திருத்துவ இறைவனுக்கு
முடிவில்லாத மங்களம்
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
சரிசமப் புகழ் பெறுகவே
அவர்தம் அன்பின் அருளினாலே

நம்மைக் காத்து மீட்கின்றார் - ஆமென்.

PASCA UNAVAI ARUNTHIDA LYRICS


பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து
பந்தியிலே அமர்ந்திருந்தார்
தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி
சீடரிடம் எழுந்து வந்தார்

குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு
கழுவியே துடைத்து விட்டார் பணி வாழ்வின் பெருமை சொன்னார்

சீமோன் இராயப்பரை நாடி வந்து பாதங்களைக் கழுவிட
இயேசு வந்த நேரத்திலே
இராயப்பரோ பாதங்களை இயேசுவிடம் காட்டாது
உரிமையில் கடிந்து கொண்டார்

என்னுடைய பாதங்களை என் ஆண்டவர் கழுவுவதா
ஒருபோதும் அனுமதியேன் ஒரு காலும் சம்மதியேன்

நான் செய்வது இன்னதென்று இப்போது புரியாது
பின்னரே புரிந்து கொள்வாய்
உன் பாதம் கழுவிட அனுமதியாவிடில்
என்னோடு பங்கில்லை

ஆண்டவரே போதகரே என் கால்களை மட்டுமல்ல
என் கைகளை தலையையுமே முழுவதும் கழுவி விடும்

முழுவதும் குளித்தவன் கால் மட்டும் கழுவினால்
போதுமென்று அறியாயோ ?
நான் செய்வதன் அர்த்தம் என்னவென்று உமக்கு
இந்நேரம் புரியாதோ ?

நான் ஆண்டவர் போதகர் தான் முன் மாதிரி காட்டுகிறேன்
நீங்கள் ஒருவர் ஒருவரது பாதங்களைக் கழுவுங்கள்

இயேசு சொன்ன வார்த்தைகளை மனதில் இருத்தி
நாமும் வாழ்ந்திடுவோம்
பிறர் பணி செய்து வாழ்வதே நம் வாழ்வின் கடமை

சீடரின் தகுதியென்போம் (2) - 3  

AANDAVARAE NEERO EN PATHANGALAI LYRICS



ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது
ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?
அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

நான் செய்வது இன்னதென்று
உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்
ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?
அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்