Wednesday, August 3, 2016

nirbandhamana paaviyai naan inge

1. நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், கர்த்தரே;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

2. ஆ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்;
ஆ ஸ்வாமீ, துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்,
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே, என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

4. என் நெஞ்சின் திகில் தணித்து,
என்மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

adhikaalaiyelumai theduven mulu

பல்லவி

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

அனுபல்லவி

இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! --- அதிகாலை

சரணங்கள்

1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! --- அதிகாலை

2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? --- அதிகாலை

3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! --- அதிகாலை

aadhipitha kumaran aavi thiriyegarku

பல்லவி

ஆதிப்பிதாக் குமாரன் - ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம் - திரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம்

அனுபல்லவி

நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர, 
உறைந்த நித்திய வேத குணாசர
நீடு வாரி திரை சூழு மேதினியை 
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் --- ஆதி

சரணங்கள்

1. எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்,
துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு
சோதனை செய் அதி நீதர்
பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான்,
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய்க யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனத்தையும்பண் பாய் நடத்தி, அருள் --- ஆதி

2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து,
தீதறு நரகில் தள்ளுண்டு - மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
பரன் எங்கள் மிசை தயை வைத்தனர் இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் --- ஆதி

aadhi thiruvaarthai divya arpudha

பல்லவி

ஆதித் திருவார்த்தை திவ்விய 
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம் , தாம் , தன்னரர் வன்னரர்
தீம் , தீம் , தீமையகற்றிட
சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட --- ஆதி

சரணங்கள்

1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். --- ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் --- ஆதி

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் --- ஆதி

indha naal ratchippuk ketra nul nal

பல்லவி

 இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்,

ஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள்

அனுபல்லவி

சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து

பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத

சரணங்கள்

1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் - தேவ
சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் --- இந்நாள்

2. வாடித் திகைத்துப் புலம்பாதே - உன்தன்
மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே --- இந்நாள்

3. உலகச் சிநேகம் வெகு கேடு - அதற்
குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு --- இந்நாள்

4. இன்றுன் இரட்சகரிடம் திரும்பு - அவர்
இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு --- இந்நாள்

5. இனிமேலாகட்டும் , என் றெண்ணாதே - பவ
இச்சைக் குட்பட்டால் , திரும்ப ஒண்ணாதே --- இந்நாள்

6. கிறிஸ் தேசுவை உற்றுப்பாரு - அவர்
கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு --- இந்நாள்

7. பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் - உனைப்
பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார் --- இந்நாள்

8. மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி - நித்திய
வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி --- இந்நாள்

9. ஏசுபெருமானை நீ நம்பு - அவர்
என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு --- இந்நாள்

adhi seekirathil neegividum intha

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம்   
சோர்ந்து போகாதே - நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது --- சோர்ந்து

2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே --- சோர்ந்து

3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம் --- சோர்ந்து

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே --- சோர்ந்து

5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் --- சோர்ந்து

6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார் --- சோர்ந்து

AAVIYAI ARULUME SWAMY ENAK LYRICS

பல்லவி

ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே

சரணங்கள்

1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? --- ஆவியை

2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,
தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை --- ஆவியை

3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் --- ஆவியை

amala thayabara arulkoor iyya

பல்லவி

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, - குருபரா,

சரணங்கள்

1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த

2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி,
சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி

3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,
வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத

4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,
தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப

5. சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாய,
கர்த்தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா

6. எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
சொல் அரிதாம் நிதான, துல்லிபத் தொன்றாம் மேலான

7. கருணாகரா, உப காரா, நிராகரா,
பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா

ummunne enakku neraivaana magilchi undu

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு

நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே

1. என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசைவேறுயில்லை

என்னை காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை

2. எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே

எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்தும் நீரே --- ஆராதனை

3. எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் --- ஆராதனை

4. என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே, உம்மைப் பாடுவேன்

என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது --- ஆராதனை

anbe en yesuve aaruyire

பல்லவி

அன்பே என் இயேசுவே ஆருயிரே
அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே

சரணங்கள்

1. உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்

2. வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்

3. தாயைப்போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்

4. உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு

5. இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்

unakulle irukindra un yesu

உனக்குள்ளே இருக்கின்ற உன்
இயேசு என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள் இருகின்றார்
அதிசயம் செய்வார் நீ கலங்காதே
அதிசயம் செய்வார் நீ கலங்காதே --- உனக்குள்ளே

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
வலக்கரம் தாங்குவார் கலங்காதே --- உனக்குள்ளே

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
யாவையும் செய்வார் கலங்காதே --- உனக்குள்ளே

UMAKOPPANAVAR YAAR VAANATHILUM BOOMIYILUM

பல்லவி

உமக்கொப்பானவர் யார் (4) 
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?

சரணங்கள்

1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் --- உமக்கொப்பானவர்

2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட --- உமக்கொப்பானவர்

3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
இன்னும் அற்புதம் செய்திடுவீர் --- உமக்கொப்பானவர்