Saturday, November 9, 2019

IRANGUM IRANGUM KARUNAIVAARI

இரங்கும் இரங்கும் கருணைவாரி, 
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!

திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் 
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்

அடியேன் பாவக் கடி விஷத்தால் 
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்

தீமை அன்றி வாய்மை செய்யத் 
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் 
பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்

EVARE PERUMAAN MATRA PER

இவரே பெருமான் மற்றப்
பேர் அலவே பூமான் - இவரே பெருமான்

கவலைக் கிடங்கொடுத் தறியார் வேறு
பவவினை யாதுமே தெரியார் இப் 
புவனமீது நமக்குரியார்

குருடர்களுக் குதவும் விழியாம் பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் தெய்வம்
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்

பலபிணி தீர்க்கும் பரிகாரி சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி எக் 
குலத்துக்கும் நல்ல உபகாரி

அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்

அலகைதனை ஜெயித்த வீரன் பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் விண்
ணுலகு வாழ் தேவ குமாரன்

பொன்னுலகந் தனில்வாழ் யோகன் அருள் 
துன்ன உலகில் நன்மைத் தேகன் நம்பால் 
தன்னை யளித்த ஓர் தியாகன்

YESU ENTHANODIRUPATHINAAL ETHUVUM ENNAI

இயேசு எந்தனோடிருப்பதால்
எதுவும் என்னை அசைப்பதில்லை
வாக்குத்தத்தம் செய்திருப்பதால்
வாழ்க்கையிலே பயமுமில்லை

இயேசுவே இயேசுவே
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

தாயின் கருவில் தோன்றும் முன்னே
தயவாலே முன் குறித்தீர்
உள்ளங்கையில் வரைந்திட்டீரே
உம் பிள்ளையாக மாற்றினீரே

துக்கத்தால் நான் கலங்கும்போது
தோல்விகளின் மத்தியிலே
தோழனாக தோல் கொடுத்தீர்
தாயைப் போல் தேற்றினீரே

சத்துருக்கள் முன்பாக
பந்தியை நீர் ஆயத்தம் செய்தீர்
என் தலையை உயர்த்தினீரே
தலைக்குனிவு எனக்கில்லையே

INRU KIRISTHU EZHUNTHAAR

1. இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர், அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா!

2. ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்,அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம், அல்லேலூயா!
அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே; அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா!

3. பாடநுபவிப்பவர், அல்லேலுலாயா!
ரட்சிப்புக்குக் காரணர்; அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார், அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா!