Tuesday, May 7, 2024

PILAUNDA MALAIYE PUGALIDAM YEEUME பிளவுண்ட மலையே புகலிடம்


1.பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் ,பாய்ந்த செந்நீர் வெள்ளமும் 
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

எந்த கிரியை செய்துமே, உந்தன் நீதி கிட்டாதே
கண்ணிர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும் ,
பாவம் நீங்க மாட்டாதே ;நீரே மீட்பர் இயேசுவே.

யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் நான் ;
உம சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே ;
தூய ஊற்றை அண்டினேன் .தூய்மையாக்கேல் மாளுவேன் .

நிழல் போன்ற வாழ்விலே , கண்ணை மூடும் சாவிலே ,
கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில் ,
பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே

DEIVA AATUKUTTIYE LOGATHARIN தெய்வ ஆட்டுக்குட்டியே லோகத்தாரின்


1.தெய்வ ஆட்டுக்குட்டியே ,
லோகத்தாரின் மீட்பரே ,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்;
நீர் என் கோட்டை தஞ்சமாம் ,
ஆர் என் வாழ்வை நீக்கலாம்?

2.உம்மைப் பற்றும் நேசத்தை ,
உம்மில் வைக்கும் பக்தியை
பேயும், கெட்ட லோகமும் 
மூர்க்கமாய் விரோதிக்கும் ;
இன்பம் துன்பம் நித்தமே
கன்னியாக நிற்குமே .

3.கர்த்தரே , என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட ,
அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
ஆவியின் நல ஈவையும் 
பூர்த்தியாக அளியும்.

4.எந்த நாழிகையிலே 
நீர் வந்தாலும், இயேசுவே,
உம்மையே நான் சந்திக்க 
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே 
நித்தம் ஏவியருளும்

ENN MEETPER RATHAM SINDHINAR என் மீட்பர் ரத்தம் சிந்தினார்


1.என் மீட்பர் ரத்தம் சிந்தினார் ;
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன் ;
இயேசுவின் நாமம் நம்புவேன் ;
நான் நிற்கும் பாதை கிறிஸ்து தான் 
வேறஸ்திபாரம் மணல் தான் .

2.கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன் ,
மாறாதவர் என்றறிவேன் ;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் ,
வேறஸ்திபாரம் மணல் தான் .

3.மரண வெள்ளம் பொங்கினும்
என் மாம்சம் சோர்ந்து போயினும்
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்
நன் நிற்கும்பாறை கிறிஸ்து தான் ,
வேறஸ்திபாரம் மணல் தான் .

4.நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே ;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்
வேறஸ்திபாரம் மணல் தான்

THOOYA THOOYA THOOYA SARVA VALLA தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா


1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா !
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே !

2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே ,
கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று ,
இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே !  

3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசா
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர் ?
நீரே தூய தூயர் , மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை ,தூய்மை ,அன்பும் நிறைந்தோர் .

4. தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா !
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்தரிக்குமே;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா! 
காருணியரே , தூய திரியேகரே!

EVVANNAMAGA KARTHARE UMMAI எவ்வண்ணமாக கர்த்தரே உம்மை வணங்குவேன்


1.எவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன் ?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென தருவேன் ?

2.அநேக காணிக்கைகளால்
உம கோபம் மாறுமோ ?
நான் புண்ணிய கிரியை செய்வதால் 
கடாட்சம் வைப்பிரோ ?

3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும் , பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.

4. நான் குற்றவாளி , ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அளித்தால் நியாயமே .

5.ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.

6.இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார் ;
உம திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார் .

7.இவ்வண்ணமாக கர்த்தரே ,
உம்மை வணங்குவேன் 
என் நீதி இயேசுகிறிஸ்துவே ,
அவரைப் பற்றினேன் 

ENGUM NIRAINTHA DEIVAME எங்கும் நிறைந்த தெய்வமே


1.எங்கும் நிறைந்த தெய்வமே
ஏழை அடியார் பணிவாய்
துங்கவன் உந்தன் பாதமே
ஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் .

2.உலக எண்ணம் நீங்கியே
உந்தனில் திட மனதாய்
நலமாய் உள்ளம் பொங்கியே
நாடித் துதிக்கச் செய் அன்பாய் .

3.கேட்டிடும் தெய்வ வாக்கியம்
கிருபையாய் மனதிலே
நாட்டிட நின் சலாக்கியம்
நாங்கள் நிறையச் செயகாலே .

தூதர்கள் கூடிப் பாடிடும்
தூயர் உம்மை மா பாவிகள்
பாதம் பணிந்து வேண்டினோம்
பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள் .