Monday, December 9, 2019

KONDADUVOM NAAM KONDADUVOM

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யேகோவா தேவனைக் கொண்டாடுவோம்

பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்
பாடிக் கொண்டாடுவோம்
தீயவன் நடுவில் வருவதில்லை
கர்த்தரோ ஜெயம் எடுத்தார் -நம்

அகமகிழ்வோம் அகக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம்

நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்
என்று நாம் உயர்த்திடுவோம்
கர்த்தரின் மகிமை மேகம் போல
இறங்கட்டும் இந்நாளிலே

அசைக்க முடியா கூடாரமாவோம்
அமைதியின் இல்லமாவோம்
நோயாளி என்று சொல்வதில்லை
குற்றங்கள் நீங்கியதே

இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த
பிரமாணம் இதுதானே
எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது
கட்டளையாய் கொடுத்தார்

பழைய புளித்த மாவை அகற்றி
தூக்கி எறிந்திடுவோம்
துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம்
அசுத்தம் அகற்றிடுவோம்

எல்லாம் முடிந்தது என்று இரட்சகர்
முழங்கினார் சிலுவையிலே
சாவுக்கு அதிபதி சாத்தானை
சாவாலே வென்றுவிட்டார்

kaalam umathu karaththil deva

காலம் உமது கரத்தில் தேவா
கிருபை தாரும் – உந்தன்
சித்தம் போல் என்றும்
என்னை நடத்திடும்

1. அப்பா நான் உந்தன் சொந்த பிள்ளைதான்
தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்
என்னை நீர் மன்னித்து உம் சொந்தமாக
ஏற்றுக் கொள்ளும் மந்தை சேர்த்துக் கொள்ளும்

2. நித்தம் நானுமே உம்மை போற்றியே
புத்தம் புதிய பாடல் – என்றும் பாடிட
கிருபையின் காலம் ஆதாயம் செய்து
வருகையிலே வானில் மகிழச் செய்யும்

KALVARIYIL RATHTHAM SINDHINEER

கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே
சிலுவை பாடுகளை சகித்தீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2)

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
உன்னத தேவனுக்கே (2)

பணிந்து உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் சரணடைவேன் (2)

பாவியான என்னை கண்டு
பரலோகம் விட்டு வந்து
பலியானீரே என்னை மீட்கவே (2)
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (2)

இயேசுவே இயேசுவே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (4)

KARAM PIDITH UNNAI ENDRUM

கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை என்றும் காத்திடுவார்

கலங்கிடாதே திகைத்திடாதே - கர்த்தர்
கரம் உனக்குண்டு பயந்திடாதே

படு குழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே

ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள்
என்றும் உன்மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே

KARAM PITITHTHENNAI VALI NADATHTHUM

கரம் பிடித்தென்னை வழிநடத்தும்
கண்மணி போலக் காத்துக் கொள்ளும் – 2
கரை திரையில்லா வாழ்வளித்து – 2
பரிசுத்தப் பாதையில் நடத்திச் செல்லும் – கரம்

1. மேய்ப்பனே உம் மந்தை ஆடு நானே
மேய்த்திடும் மேய்ப்பனின் பின்னே செல்வேன் – 2
புல்வெளி மேய்ச்சல் காணச் செய்து
அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும் – 2
உம் கோலினைக் கொண்டு என் பாதை மாற்றும் – கரம்

2. ஜீவனைத் தந்து என் ஜீவன் மீட்டீர்
ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன் – 2
வானிலும் பூவிலும் நிலைநிறுத்தும்
வரங்களினாலே எனை நிரப்பும் – 2
உம் வார்த்தையைக் கொண்டு என் வாழ்வை மாற்றும் – கரம்

KARTHTHARIN VAIRAAKKIYAM NAM

கர்த்தரின் வைராக்கியம் – நம்
கர்த்தரின் வைராக்கியம்
இந்த தேசத்தை சுதந்தரிக்கும் – நம்
கர்த்தரின் வைராக்கியம்

1. வானமும் பூமியும் படைத்தவர்
வார்த்தையினால் உண்டாக்கியவர்
விண்ணையும் மண்ணையும் ஆளுபவர்
அதிகாரம் அனைத்தும் கொண்டவர்
ஓங்கி நிற்கும் அவர் வலதுகரம்
அவராலே எல்லாம் கூடும்!

2. கடலை மதிலாய் நிறுத்தியவர்
எதிரியை ஆழியில் அமிழ்த்தியவர்!
சிங்கத்தின் வாயைக் கட்டியவர்
நெருப்பில் வேகாமல் நிறுத்தியவர்!
மீந்திருக்கும் தம் ஜனத்துக்கு
கர்த்தர் நாமம் அடைக்கலமே!

3. எம்மாவவூர் சென்ற சீடருடன்
நடந்தே வேதம் போதித்தவர்!
பேதை ஊழியர் இதயத்தில்
அக்கினி ஜூவாலையை மூட்டியவர்!
உயிர்த்தெழுந்த இயேசுவோடு
இணைந்து பாடுகள் சந்திப்போம்!

4. நமக்காய் யாவையும் செய்திடுவார்!
வெற்றிக்கு நேராய் நடத்திடுவார்!
கண்மணிபோலக் காத்திடுவார்!
சபையைத் திரளாய்ப் பெருக்கிடுவார்!
யாக்கோபின் தேவனின் துணை உண்டு!
அவர்க்கெதிராய் யார்தான் உண்டு!