Wednesday, March 4, 2020

THAMANDAI VANTHA BAALARAI

தம்மண்டை வந்த பாலரை 

1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.

2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.

THAAVEETHIN THIRAVUGOLAI UDAIYAVARE

தாவீதின் திறவுகோலை உடையவரே 

என் முன்னே செல்பவரே 
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசல் திறந்த வாசலானீர்


நன்றி நன்றி இயேசு ராஜா 
சமாதானபலியானீரே x(3)


தைரியமாக கிருபாசனதண்டை 
நடனமாடி பிரவேசிக்கின்றேன் x(2)
உன் சமூகத்தில் ஆனந்தமே
நன்றி சொல்லி துதித்திடுவேன் x(2)


நன்றி நன்றி இயேசு ராஜா 
சமாதானபலியானீரே x(3)


ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவோம்
இரத்தத்தினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன்

THUNBAM UNNAI SOOLNTHALAI

துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
பல்லவி
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி

1. கவலைச் சுமை நீ சுமக்கும் போது
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி

2. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி

2. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்

DEVANA EN NANBANE

தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே (2)

சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன் (2)

1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என்நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே

2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே

3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே

DEVA PRASANNAM ENNAI MOODUM

தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்
என் வாழ்வில் ஆனந்தமே

வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம்
மணவாளனின் பிரசன்னமே

நான் தனிமையில் நிற்கும் போது
உம் பிரசன்னம் துணையானதே
நான் சோர்புற்ற வேளைகளில்
உம் பிரசன்னம் பெலனானதே

நான் கலங்கின காலங்களில்
உம் பிரசன்னம் களிப்பானதே
என் துக்கத்தின் நேரங்களில்
உம் பிரசன்னம் பேரின்பமே

THEDI VANTHA THEIVAM

தேடி வந்த தெய்வம் இயேசு - என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழ வைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு

பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம் அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்

இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்

THUYA THUYA EM YESU NATHA

துயா துயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்துப் பெருக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்குத் தந்தோம்

விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மா பெரும் அன்பல்லவோ
பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம்

சாவை வென்றீர் உயிர்த்தெழுந்தீர்
சாத்தானை தோற்கடித்தீர்
நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம்

மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம்

THIRUPAADHAM NAMBI VANTHEN

திருப்பாதம் நம்பி வந்தேன்

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே 

சரணங்கள்

1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்

2. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

3. மனம் மாற மாந்தன் நீரல்ல
மனவேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பலன் ஈந்திடுமே

5. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

6. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

THAAKAMULLAVAN MAEL THANNEERAI

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர்
ஊற்றும் ஐயா உம் வல்லமையை 
தாகத்தோடு காத்திருக்கிறேன் – நான்

1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே

2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே

3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல
நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும்

4. புதிய கூர்மையான கருவியாகணும்
பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும்

5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்

6. வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும்
வயல்வெளி அடர்ந்த காடாகணும்

7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும் வளரவேண்டுமே

8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
ஏல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்

THANTHEN YENNAI YESUVE

தந்தேன் என்னை இயேசுவே

பல்லவி

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே 

அனுபல்லவி

உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் --- தந்தேன் 

சரணங்கள்

1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து --- தந்தேன்


2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் --- தந்தேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் --- தந்தேன்

4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் --- தந்தேன்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் --- தந்தேன்

JEPATHTHIN AAVALAI

1. ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
தெய்வாவீ, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.

2. பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.

3. எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.

4. தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு, என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.

JEEVA KRISTHU UYIRTHELUNTHAR

ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
தேவ குமாரன் மரித்தெழுந்தார்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார்
அல்லேலூயா கல்லறைக் காட்சி
அற்புத சாட்சியே -ஆண்டவர்
இயேசு உயிர்த்தெழுந்தார்

பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
வேதாள கூட்டம் நடுங்கிடவே
அன்றதிகாலை மா இருள் வேளை
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்

நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
சாவை ஜெயித்து காட்சி அளித்து
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்

பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
என் மன ஜோதி தம் அருள் ஆவி
என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார்

நல் விசுவாசம் தந்திடுவார்
நம்பிடுவோரை எழுப்பிடுவார்
எக்காள சத்தம் கேட்டிட நாமும்
ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே

SORAATHAE EN MANAMAE

1. சோராதே என் மனமே
சோர்ந்து போகாதே என் உள்ளமே
மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்
பாராதவர் போல தான் – உன்னை

2. பொன்னை புடமிடுவார்
அதின் மண்ணை அகற்றிடுவார்
உன்னை நேசிப்பதால் இந்த பணி செய்வார்
உனக்கேற்ற கிரீடம் செய்வார் – இயேசு

3. வடியாதே கண்ணீர் இன்று
மனம் மடிவடையாதே நின்று
இடி மேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும்
நடுப்பகல் கதிர் வீசிடும் – உனக்கு