Sunday, November 10, 2019

NENJE NEE KALANGUVATHENO

நெஞ்சே நீ கலங்குவதேனோ …(2)
நெஞ்சே நீ தவிப்பதேனோ …
ஒரு கணம் கூட உன் சுமை தாங்க
கருணையின் தேவன் தயங்குவதில்லை 

1. தளர்ந்திடும் போது தாங்கிடும்
தூயவர் தூய பாதை காட்டுவார்
கலங்கிடும் போது காத்திட வல்லவர்
கவலை எல்லாம் மாற்றுவார்
கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட
தேவன் கரங்களை நீட்டுவார்( 2)
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம் 

2. பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவராக
சிறந்த வழியை சொல்லுவார்
நிறைந்த அன்பால் காலம் எல்லாம்
தெளிந்த அறிவை ஊட்டுவார்
என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
இன்று புது பாதை காட்டுவார்
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

NIRAIVAANA AAVIYAANAVARAE NEER VARUMPOTHU

நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே

வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

NAAN NADANTHU VANTHA PATHAIGAL

நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள்

நடக்க முடியல டாடி நடக்க முடியல
தாங்கிக் கொள்ளுங்க - கரத்தில்
ஏந்திக்கொள்ளுங்க

என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன்
ஓட முடியல - என் மன பெலத்தால்
நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன்
சுமக்க முடியல - என் கால் பெலத்தால்
கடந்து பார்த்தேன் கடக்க முடியல

என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன்
ஆள முடியல - என் பண பெலத்தால்
படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன்
ஒன்றும் முடியல - என் வாய் பெலத்தால்
வாழப் பார்த்தேன் வாழ முடியல

NAANGA RATHANGALAI KURITHUM

நாங்க இரதங்களை குறித்தும் குதிரையை குறித்தும்
மேன்மையை பாராட்ட மாட்டோம்
எங்க சொத்து சுகம்மெல்லாம் சொல்லி நாங்க
சீனப் போட மாட்டோம்

எங்க தேவனின் நாம மகிமைக்காக வாழ்ந்திடுவோம்
எங்க வாழ்நாளெல்லாம் அவரின் புகழை பாடிடுவோம்
தேவனை பற்றி சொல்ல
தேசமெங்கிலும் செல்ல
மனம் தயங்குவதில்லை நாங்க தானியேலப் போல
மானின் கால்கள் எனக்கு
அக்கினி இரதங்கள் இருக்கு
ஆவியின் கண்கள் எனக்கு
உலகத்தின் வேஷம் எதற்கு 
பாவத்திற்கு மரித்தோம்
பரிசுத்தத்திலே பிழைத்தோம்
இழந்துப்போனதெல்லாம் சிலுவையிலே ஜெயித்தோம்
முழங்கால் யாவும் முடங்கும்
நாவுகள் அறிக்கை செய்யும்
கர்த்தரே தெய்வம் என்ற சத்தம்
பூமி எங்கும் கேட்கும் 
ஓடினாலும் இளைப்பில்ல
நாங்க நடந்தாலும் சோர்வில்ல
எங்க இடுப்பின் கச்சை பாத ரட்சை அவிழ்வதேயில்ல
நாணேற்றின வில்லும்
கூர்மையான அம்பும்
இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்த பிடித்தோம்

NEER INDRI VAZHVETHU IRAIVA

நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறு ஆண்டு நான் வாழ்ந்தபோதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே

கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளம் ஜீவனைத் தந்தவர் நீர்
உம்மையான்றி அணுவேதும் அசையாதய்யா
உம் துணையின்றி உயிர்வாழ் முடியாதய்யா

எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா
அதில் எதற்கென்று
நன்றி சொல்லித் துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதைய்யா

UNMAIYAANA ANBIRKAI KAATHIRUKKIREN

உண்மையான அன்பிற்காய் காத்திருக்கின்றேன்
என் வாழ்நாள் முழுவதுமே
என் வாழ்வின் தன்மையின் நேரங்களெல்லாம்
துணையாக யார் வருவார்
தரிசித்தேன் நான் தரிசித்தேன் 
நம்பிக்கையற்ற சூழலில் 
வெறுமையான வாழ்க்கையில் 
இயேசுவை நான் தரிசித்தேன்
-உண்மையான
* சோர்வுகள் என் இதயத்தை
சூழ்ந்திருந்த வேளையில்
நான் நம்பின எல்லோரும்
என்னை கைவிட்ட வேளையில் 
கண்ணீரே எந்தன் உணவானதே
கட்டுகளோடே வாழ்ந்திருந்தேனே
உமது வருகையே மகிழ்வை அளித்ததே
உமது நேசமே என்றென்றும் போதுமோ
- உண்மையான
*ஒவ்வொரு நொடியும் நீர் என்னை நடத்துகிறீர்
ஒவ்வொரு நாளும் நீர் என்னோடு பேசுகிறீர்
உம் வார்த்தையே எனக்கு ஜீவன் அளித்ததே
ஆவிக்குரிய ஆசீர்வாதம் சந்தோஷம் அளித்ததே
உமக்காகவே நான் என்னையே தருகின்றேன் 
உமக்காகவே நான் இறுதி வரை காத்திருப்பேன் 

NEE UYIRODU IRUKKUM NAALELLAAM

நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை
நான் மோசேயோடே இருந்ததுபோல
உன்னோடு இருப்பேன் என் மகனே (மகளே)

திகையாதே, கலங்காதே
நீ போகும் இடமெல்லாம் வருவேன் - (2)

1. தாய் தன் சேயை மறந்துபோனாலும்
நான் உன்னை மறப்பதில்லை
துன்பத்தால் பாரத்தால் நசுங்குண்டு போகையில்
அடைக்கலமாய் இருப்பேன் - (2) - திகையாதே

2. உன் ஜெபத்தை தள்ளாமல் கிருபையை விலக்காமல்
நான் உன்னை தாங்கிடுவேன்
தீயையும் தண்ணீரையும் கடந்து வரும்போது
நான் உன்னை ஏந்திடுவேன் - (2) - திகையாதே
- நீ உயிரோடு

THOLLAI KASTANGAL SOOLDHIDUM THUNBAM

1.தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3 )
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

2. ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால் தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் -காக்கும்

3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார் -காக்கும்

DEVA ENAIMARAKKADE INTHA SIRIYAN

தேவா எனைமறக்காதே - இந்தச்
சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே

நேயா உனையன்றி நீசனுக்கார் கதி
தூயா கிருபைகூர் நான் மகாதோஷி

வானுலகோர்தொழும் நாதர் -இந்த
மானிடர்கரையேற வந்தசகாயா
காலைமாலைகள் தோறும் கரைந்து உருகுகின்ற
கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா

பாவியின் மேலிரங்கையா - பொல்லாப்
பாதகனைக்கைவிடாதே நலமெய்யா
தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத்
தாங்கியா தரித்துந்தன் தயைபுரி ஐயா

என்மீறுதல் நினையாதே எந்தன்
இளமையின் பாவத்தை மனதில்வையாதே
உன்பாதஞ் சேர்ந்தன் உவந் தேனுனையடைந்தேன்
நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன்

நெருக்கப்படுகிறேன் தேவா - என்னை
உருக்கமாய்ப் பாராய் கிறிஸ்தேசுநாதா
இரக்கம் வைத்தென்றனின் குறைதன்னை நீக்கு
என்னை ஆட்கொண்டவா இயேசு சர்வேசா

சரணம் சரணம் சருவேசா - இந்தத்
தருணம் தருணம் உன்றன் கருணை கூர் நேசா
மரணவேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும்
மாபாதகன் எனை ரட்சியாய் நாதா

KARTHARIN SATHAM VALLAMAI ULLADHU

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

சரணங்கள்

பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்

1. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின்

2. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின்

3. பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதான மீந்து
பரண் எம்மை ஆசீர்வதிப்பார் – கர்த்தரின்

KARTHARIN KAI KURUGAVILLAI

கர்த்தரின் கை குறுகவில்லை

1. கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே 

பல்லவி

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான் 

2. திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே

3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே

4. மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே