Wednesday, August 3, 2016

nirbandhamana paaviyai naan inge

1. நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், கர்த்தரே;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

2. ஆ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்;
ஆ ஸ்வாமீ, துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்,
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே, என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

4. என் நெஞ்சின் திகில் தணித்து,
என்மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

adhikaalaiyelumai theduven mulu

பல்லவி

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

அனுபல்லவி

இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! --- அதிகாலை

சரணங்கள்

1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! --- அதிகாலை

2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? --- அதிகாலை

3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! --- அதிகாலை

aadhipitha kumaran aavi thiriyegarku

பல்லவி

ஆதிப்பிதாக் குமாரன் - ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம் - திரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம்

அனுபல்லவி

நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர, 
உறைந்த நித்திய வேத குணாசர
நீடு வாரி திரை சூழு மேதினியை 
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் --- ஆதி

சரணங்கள்

1. எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்,
துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு
சோதனை செய் அதி நீதர்
பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான்,
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய்க யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனத்தையும்பண் பாய் நடத்தி, அருள் --- ஆதி

2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து,
தீதறு நரகில் தள்ளுண்டு - மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
பரன் எங்கள் மிசை தயை வைத்தனர் இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் --- ஆதி

aadhi thiruvaarthai divya arpudha

பல்லவி

ஆதித் திருவார்த்தை திவ்விய 
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம் , தாம் , தன்னரர் வன்னரர்
தீம் , தீம் , தீமையகற்றிட
சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட --- ஆதி

சரணங்கள்

1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். --- ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் --- ஆதி

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் --- ஆதி

indha naal ratchippuk ketra nul nal

பல்லவி

 இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்,

ஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள்

அனுபல்லவி

சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து

பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத

சரணங்கள்

1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் - தேவ
சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் --- இந்நாள்

2. வாடித் திகைத்துப் புலம்பாதே - உன்தன்
மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே --- இந்நாள்

3. உலகச் சிநேகம் வெகு கேடு - அதற்
குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு --- இந்நாள்

4. இன்றுன் இரட்சகரிடம் திரும்பு - அவர்
இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு --- இந்நாள்

5. இனிமேலாகட்டும் , என் றெண்ணாதே - பவ
இச்சைக் குட்பட்டால் , திரும்ப ஒண்ணாதே --- இந்நாள்

6. கிறிஸ் தேசுவை உற்றுப்பாரு - அவர்
கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு --- இந்நாள்

7. பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் - உனைப்
பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார் --- இந்நாள்

8. மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி - நித்திய
வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி --- இந்நாள்

9. ஏசுபெருமானை நீ நம்பு - அவர்
என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு --- இந்நாள்

adhi seekirathil neegividum intha

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம்   
சோர்ந்து போகாதே - நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது --- சோர்ந்து

2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே --- சோர்ந்து

3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம் --- சோர்ந்து

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே --- சோர்ந்து

5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் --- சோர்ந்து

6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார் --- சோர்ந்து

AAVIYAI ARULUME SWAMY ENAK LYRICS

பல்லவி

ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே

சரணங்கள்

1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? --- ஆவியை

2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,
தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை --- ஆவியை

3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் --- ஆவியை

amala thayabara arulkoor iyya

பல்லவி

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, - குருபரா,

சரணங்கள்

1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த

2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி,
சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி

3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,
வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத

4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,
தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப

5. சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாய,
கர்த்தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா

6. எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
சொல் அரிதாம் நிதான, துல்லிபத் தொன்றாம் மேலான

7. கருணாகரா, உப காரா, நிராகரா,
பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா

ummunne enakku neraivaana magilchi undu

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு

நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே

1. என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசைவேறுயில்லை

என்னை காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை

2. எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே

எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்தும் நீரே --- ஆராதனை

3. எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் --- ஆராதனை

4. என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே, உம்மைப் பாடுவேன்

என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது --- ஆராதனை

anbe en yesuve aaruyire

பல்லவி

அன்பே என் இயேசுவே ஆருயிரே
அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே

சரணங்கள்

1. உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்

2. வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்

3. தாயைப்போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்

4. உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு

5. இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்

unakulle irukindra un yesu

உனக்குள்ளே இருக்கின்ற உன்
இயேசு என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள் இருகின்றார்
அதிசயம் செய்வார் நீ கலங்காதே
அதிசயம் செய்வார் நீ கலங்காதே --- உனக்குள்ளே

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
வலக்கரம் தாங்குவார் கலங்காதே --- உனக்குள்ளே

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
யாவையும் செய்வார் கலங்காதே --- உனக்குள்ளே

UMAKOPPANAVAR YAAR VAANATHILUM BOOMIYILUM

பல்லவி

உமக்கொப்பானவர் யார் (4) 
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?

சரணங்கள்

1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் --- உமக்கொப்பானவர்

2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட --- உமக்கொப்பானவர்

3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
இன்னும் அற்புதம் செய்திடுவீர் --- உமக்கொப்பானவர்

Monday, August 1, 2016

IDHAYAM NANDRIYUDAN NIRAMBI THUTHITHIDUVOM



இதயம் நன்றியுடன்
நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமும் துதித்திடுவோம்

1. சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம் --- இதயம்

2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதி செய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும் --- இதயம்

INDRU VARAI ENNAI NADATHINIR

இன்று வரை என்னை நடத்தினீர்
இன்றுவரை என்னை தாங்கினீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்
நீர் என்றென்றும் போதுமானவர்

எந்தன் பாவ பாரமெல்லாம்
உந்தன் மீது சுமந்து கொண்டீர்
எனக்காய் சிலுவை மரித்தீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

எந்தன் தேவைகள் அறிந்து
வானம் திறந்து தந்திட்டிரே
எல்லால் சம்பூரணமாய் நல்கிறீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

மன பாரத்தால் நான் அலைந்தேன்
மன வேதனையால் நிறைந்தேன்
மனம் உருகி நான் கதறும் போது
இயேசுவே நீர் மிக நல்லவர்

கடும் வியாதி வந்த வேளையில்
வைத்தியராகி என்னை தேற்றினீர்
கடும் வெயிலும் நல் நிழலானீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

ஒருநாளும் கைவிடீர் நீர்
ஒருநாளும் விலகிடீர் நீர்
ஒருபோதும் மறக்க மாட்டீர்
இயேசுவே நீர் உண்மையுள்ளவர்

YESU RAJANE NESIKKIREN UMMAIYE

இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் (4)

1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
சந்தோஷமே, சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

2. இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும், திருவார்த்தையே
உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே, நட்சத்திரமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

4. யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரே
உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

5. பாவங்கள் நிவர்த்தி செய்யும்
கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரே
உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

ANBU KOORUVOM NAM DEVNAGIAH

அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
கண்டுபுலம்பிக் கதறுவாரே

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

அந்த நாளில் ஆயத்தமானோர்
இயேசுவிடம் பறந்திடுவோம்
இவ்வுலக வாழ்வை முடித்துப்
பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

IRUL SOOLNTHA LOGATHIL LYRICS

இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் பாடுவேன்

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் --- அஞ்சிடேன்

அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் --- அஞ்சிடேன்

ISRAVELE KARTHARAI NAMBU LYRICS


இஸ்ரவேலே
கர்த்தரை நம்பு (3)
இஸ்ரவேலே
அவர் உன் துணையும் கேடகமானவர்

1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கு உண்டு

2. அக்கினி மீது நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே

3. அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை
உள்ளங்கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

YESU KRISTHUVIN ANBU ENDRUM


இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது
1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் - (2)

2. பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? - (2)

IDHAYAM YESUVIN SINGASANAM

இருதயம் இயேசுவின் சிங்காசனம்
நம்மை இயேசுதான் ஆள வேண்டும்
இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை

1. என் நாயகரை நான் மறந்து
இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே
கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே
கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே

2. என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்
என்னை தேடி வந்தாரே
கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே
கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே

3. இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று
நான் சாக நினைத்த வேளையிலே
கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே
கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே

YESU NALLAVAR YESU VALLAVAR




பல்லவி

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசு இரட்சகரே
அல்லேலுயா ஆராதனை
ராஜ ராஜனுக்கே

சரணங்கள்

1. வறண்ட நிலமாய் இருந்த வாழ்வை
வயலாய் மாற்றினாரே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
களிப்பாய் மாற்றினாரே
குறைகள் எல்லாம் நிறைவாய் மாற்றி
கவலை தீர்த்தாரே
கண்ணீர் துடைத்தாரே - (2) அவர்

2. சேற்றினின்றும் குழியினின்றும்
தூக்கி எடுத்தாரே
கன்மலைமேல் கால்கள் நிறுத்தி
உறுதிப்படுத்தினாரே
புதிய பாடல் நாவில் தந்து
பாட வைத்தாரே
துதிக்க செய்தாரே - என்னை (2)

3. பாவம் யாவும் மன்னித்தாரே
சாபம் நீக்கினாரே
கிருபையாலே நீதிமானாய்
என்னை மாற்றினாரே
பிள்ளையாக என்னை கூட
ஏற்றுக் கொண்டாரே
அப்பா இயேசுவே - என் (2)

4. பரலோகத்தில் எனது பெயரை
எழுதி வைத்தாரே
நானும் வாழ அங்கோர் இடத்தை
தெரிந்து வைத்தாரே
இயேசு வருவார் அழைத்துச் செல்வார்
பறந்து சென்றிடுவேன்
சுகமாய் வாழ்ந்திடுவேன் - (2) அங்கு

AARADHANAI AARADHANAI VALLAVARE NALLAVARE

ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே
உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
உயிர் உள்ள நாளெல்லாம் (2)

1. பாவங்கள் எமக்காய் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே
உமக்கே ஆராதனை

2. ஆவியின் வரங்களைத் தந்தவரே
உமக்கே ஆராதனை
அபிஷேகம் எனக்காய் தந்தவரே
உமக்கே ஆராதனை

3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை தகர்த்தீரே
உமக்கே ஆராதனை

AARADHANAIKUL VAASAM SEIYUM AVIYANAVARE

ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் - இன்று
வாசம் செய்கிறீர் (2)

அல்லேலூயா ஆராதனை (4)
ஆராதனை ஆராதனை ஆராதனை (2)

1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர் மேல் அசைந்தீர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்
உள்ளத்தில் வாசம் செய்யும்

4. மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

AARADHANAI DEVANE AARADHANAI YESUVE

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை

நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனை
நித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனை
உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை
மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை
பூரணமான தேவனே பூலோக ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

AARADHANAI ARADHANAI THUTHI LYRICS

ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை - (2)
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே - (2)

1. தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை - (2)
வான பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை - (2)

2. ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை - (2)
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை - (2)

AADHIYUM ANTHAMUMANAVARE LYRICS

ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமெகாவுமானவரே - 2
அல்லேலுயா - 4

இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே - 2
அல்லேலுயா - 4

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - 2
அல்லேலுயா - 4

பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலியானவரே - 2
அல்லேலுயா - 4

சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே - 2
அல்லேலுயா - 4

சத்துரு வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2
அல்லேலுயா - 4

கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே - 2
அல்லேலுயா - 4

புறப்பட்டுப் போங்கள் என்றவரே
அதிகாரங்கள் யாவும் தந்தவரே - 2
அல்லேலுயா - 4

உலகின் முடிவு பரியந்தம் நான்
உங்களோடிருப்பேன் என்றவரே - 2
அல்லேலுயா - 4

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - 2
அல்லேலுயா - 4

அல்லேலுயா ஆமென் அல்லேலுயா
அல்லேலுயா ஆமென் அல்லேலுயா - 2
அல்லேலுயா - 4

AARATHANAI NAAYAGAN NEERE LYRICS

பல்லவி 

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்

சரணங்கள்

1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசுவிலே
விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை

2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை

3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை

ADHISAYAM SEIVAR DEVAN LYRICS


1. அதிசயம் செய்வார் தேவன்
அற்புதம் செய்வார் இயேசு
ஆண்டவர் வாக்கை நம்பு
நிச்சயம் வாழ்வு உண்டு

வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

2. இழந்ததைத் திரும்ப தருவார்
தேசம் தன் பலனைக் கொடுக்கும்
கர்த்தர் நன்மை அருள்வார்
என்றும் துதித்திடுவாய் --- வெட்கப்பட்டு

3. களங்கள் தானியத்தால் நிரம்பும்
என்ணெயும் ரசமும் வழியும்
வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
தோட்டங்கள் துரவுகள் தருவார் --- வெட்கப்பட்டு

4. தேவனின் வாக்கை நம்பு
திரும்பப் பெற்றுக் கொள்வாய்
உன்னதர் உன்னோடு உண்டு
திருப்தியாக வாழ்வாய் --- வெட்கப்பட்டு

தடைகள் தகர்ந்து போகும் (4)

ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)

HALLELUAH HELLELUJAH HALLELUAH LYRICS

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

1. யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா நிஸியே அல்லேலூயா
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா

2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

3. தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா

EN KIRUBAI UNAKKU POTHUM


என் கிருபை உனக்கு போதும்
இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் - சொல்
ஒருபோதும் உன்னை மறவேன்
உன் நிழலைப் போல உன்னை தொடர்வேன் - நான்

1. அமைதி தோட்டமாக நானும் உலகை உனக்கு கொடுத்தேன்
ஜாதி பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய்
கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகு வைத்தாய் - (2)
சிலுவையின் வழி மீட்பு என்றேன் சிந்தையில் நீ ஏற்பதில்லை
விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னை சார்ந்ததில்லை
என்ன நடந்தாலும் ஜெபிப்பதில்லை என்னை நீ நினைப்பதில்லை --- என்

2. ஒளியை ஏற்றி வைத்தேன் நீயும் இருளை தேடிச் சென்றாய்
வழியை திறந்து வைத்தேன் நீயும் விழிகள் மூடிக்கொண்டாய்
என் ராஜ்ஜியம் எங்கே என்று மண்ணில் நீ தேடுகின்றாய் - (2)
தந்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் நிந்தைகளை ஏற்றுக்கொண்டேன்
என்றைக்குமே ஆட்சி செய்வேன் நீதியை நிலை நாட்டச் செய்வேன்
போனது போகட்டும் மறந்துவிடு இன்றோடு மாறிவிடு --- என்

EN THEDAL NEE EN THEIVAME

பல்லவி

என் தேடல் நீ, என் தெய்வமே
நீ இன்றி என் வாழ்வு நிறம் மாறுதே 
உனை மனம் தேடுதே, நீ வழி காட்டுமே

அனுபல்லவி

 இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே

சரணங்கள்

1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீ இன்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறை வார்த்தையில் நிறைவாகுவேன்
மறை வாழ்விலே நிலையாகுவேன்
வழிதேடும் எனை காக்க நீ வேண்டுமே --- இறைவா

2. உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியோனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழி தேடும் எனை காக்க நீ வேண்டுமே --- இறைவா

EN IDAYAM YARUKKU THERIYUM

பல்லவி

என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும் - (2)

சரணங்கள்

1. நெஞ்சின் நோகங்கள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே - (2)

2. சிறகு ஒடிந்த நிலையில்
பறவை பறக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ - (2)

3. மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ - (2)

4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே - (2)

NEERTHAN EN THANGAME

1. நீர்தான் என் தஞ்சமே
நீர்தான் என் கோட்டையே
துன்ப வேளை தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
இயேசையா உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

2. நீர்தான் என் பெலனே
நீர்தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து
கவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே

3. நீரே என் ஆதாரமே
நீரே என் துணையாளரே
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே

4. இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மை பாடிடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை

UMMAI ALLAMAL ENAKKU YAARUNDU LYRICS

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?

ஆசையெல்லாம் நீர்தானையா
தேவையெல்லாம் நீர்தானையா
இரட்சகரே... இயேசுநாதா...
தேவையெல்லாம் நீர்தானே

1. இதயக்கன்மலை நீர்தானய்யா
உரிய பங்கும் நீர்தானய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் --- ஆசை

2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் --- ஆசை

3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் --- ஆசை

UMMALE NAAN ORU SENAIKUL PAIVEN


உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன் (2)
ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்

1. எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்

2. மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்

3. பெலத்தால் இடைக்கட்டி வழியை செவ்வையாக்கி
வாழ வைத்தவரே

4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே

5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்

6. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்

7. இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
எந்நாளும் துதித்திடுவேன்

8. அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
அப்பனே உம்மைத் துதிப்பேன்

UM ANBAL ENNAI NIRAPPUM

உம் அன்பால் என்னை நிரப்பும் என் இயேசுவே (2)

உம் பாசம் மட்டும் எனைத் தேற்றுமே
உம் அன்பால் என்னை நிரப்பும்

1. நிழலாகத் தொடரும் பல துன்பங்கள் இங்கு
நீரன்றி யாரென்னை காக்கும் இவ்வேளை
உம்மண்டை சேர நான் வேண்டினேன்
உம்முகம் காண நான் ஏங்கினேன் --- உம் அன்பால்

2. ஆசைகள் என்னில் ஓராயிரம் உண்டு
நேசமாய் உம் சித்தம் நிறைவேற்றும் இன்று
என் வாழ்வில் எந்நாளும் நீர் தங்க வேண்டும்
உம் வார்த்தையால் என்னில் நீர் பேச வேண்டும் --- உம் அன்பால்

UNGA MUGATHAI PAARKANUME YESAIAH


உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா - 2
அல்லேலூயா அல்லேலூயா - 4

1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் - 2

2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் - 2

3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் - 2

4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
உம் கிருபை என்றும் எனக்குப் போதும் - 2

5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் - 2

6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே - 2

UMM MUNNE ENAKKU NERAIVANA MAGIICHI

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு

நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே

உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா
என் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பா
வாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்
உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன்

அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்
வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதே
உள்ளம் பாரத்தாலே சிதறியதே
உம் பாசக்கரம் நீட்டினீரே
அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

என் விண்ணப்பத்தை கேட்டவரே
என் கண்ணீரை காண்பவரே
உம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயா
எல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர்
அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

UNNAITHAN KETKEREN MANAM MAARA

உன்னைத்தான் கேட்கிறேன் (2)
மனம் மாற மாட்டாயா (2)

1. காடும் வீடும் நிலமும் எனக்கு போதும் என்று சொன்னால்
ஆவி உன்னை விட்டு போகும் போது என்ன சொல்வாய்
யாவும் அழிந்து போகும் அழியா தொன்று உண்டு
உன்னை காக்க வல்ல இயேசு கிறிஸ்துவின் நேச கரங்கள்

2. பட்டம் படிப்பு தகுதி உறவு யாவும் மாறிப் போகும்
உலகம் உன்னை ஒதுக்கி தள்ளும் காலம் வந்து சேரும்
அன்று உணர்ந்து கொள்வாய் உண்மை என்னவென்று
மாறும் உலகில் நிலைக்க ஒருவர் இயேசு ராஜனென்று

3. பாவம் செய்யும் போது மனதில் பயமே ஒன்றும் இல்லை
காலம் கடந்து நீதி வரும் போதோ நெஞ்சம் கலங்கும்
நெஞ்சின் பாவ பாரம் நீங்கும் உந்தன் வாழ்வில்
நோக்கி பார் இயேசு உன்னை அழைக்கிறார் இந்த நேரம்

UMMAI POLA NALLA DEVAN LYRICS

உம்மை போல நல்ல தேவன்
உம்மை போல நல்ல தேவன்
யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன்
யாரும் இல்லையே(2)

உம்மை போல என்னை காத்திட
உம்மை போலஎன்னை தாங்கிட
உம்மை போல என்னை தேற்றிட
யாரும் இல்லையே
ஏசையா யாரும் இல்லையே

உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன்...(3) - என் தெய்வமே

உம்மை நான் போற்றுகிறேன்...
வாழ்த்துகிறேன்...வணங்குகிறேன்...
என் தெய்வமே....
என் ஏசுவே...என் தெய்வமே
என் தெய்வமே (2)

UMAKAGA THANE IYYA NAAN

உமக்காகத் தானே - ஐயா நான்
உயிர் வாழ்கிறேன் - ஐயா
இந்த உடலும் உள்ளமெல்லாம் - அன்பர்
உமக்காகத் தானே ஐயா

1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
அவமானம் நிந்தை சிலுவைதனை
அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்

2. எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை
எல்லாருக்கும் நான் எல்லாமானேன்
அனைவருக்கும் நான் அடிமையானேன்

3. எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மனநிறைவோடு பணி செய்வேன்

4. எனது பேச்செல்லாம் உமக்காக
எனது செயல் எல்லாம் உமக்காக
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக

5. பண்படுத்தும் உம் சித்தம் போல
பயன்படுத்தும் உம் விருப்பம் போல
உம் கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே