Tuesday, August 25, 2015

THOTHIRAM PAADIYE POTTRIDUVEN

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

சரணங்கள்

1. அற்புதமான அன்பே --- என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே --- தோத்திரம்

2. ஜோதியாய் வந்த அன்பே --- பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே --- தோத்திரம்

3. மாய உலக அன்பை நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே --- தோத்திரம்

4. ஆதரவான அன்பே --- நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னதமாம் தேவ அன்பே
உள்ளம் கவரும் அன்பே --- தோத்திரம்

5. வாக்கு மாறாத அன்பே --- திரு
வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே --- தோத்திரம்

NADU KULIR KAALAM LYRICS

1. நடுக் குளிர் காலம்
கடும் வாடையாம்;
பனிக்கட்டிபோலும்
குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில்
பெய்து மூடவே;
நடுக் குளிர் காலம்
முன்னாளே.

2. வான் புவியும் கொள்ளா
ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது
அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம்
தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில்
போதுமே.

3. தூதர் பகல் ராவும்
தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும்
போதுமானது;
கேருபின் சேராபின்
தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும்
போதுமே.

4. தூதர் தலைத்தூதர்
விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப்
சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே
நேச சிசு தான்
முக்தி பக்தியோடு
தொழுதாள்.

5. ஏழை அடியேனும்
யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின்
மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம்
கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம்
படைப்பேன்.

ELAIKKU PANGALARAM PAAVIKKU RATCHAGARAM

ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்
ஏசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவராம்

1. மரியாள் வளர்த்த மைந்தன் மனித தெய்வம் அவதரித்தார்
மாடுகட்டும் தொழுவத்திலே மாணிக்கம் பிறந்ததம்மா
அந்தி வானம் சிவக்குதம்மா அல்லி மலர் சிரிக்குதம்மா
ஆண்டவராம் இயேசு பிரான் அன்பு மணம் மணக்குதம்மா

2. முள்முடி சூட்டி வந்த முதல் தலைவன் இயேசுவுக்கு
கல்வாரி சிலுவையிலே காயம் பட வைத்தனரே
உயிர் மரித்தெழுந்த எங்கள் உத்தமரே இயேசு ஐயா
நீர் இன்றி உலகத்திலே நீதி தெய்வம் வேறு உண்டோ?

NANDRIYAL PAADIDUVOM NALLAVAR YESU

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1. செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய் --- நன்றியால்

2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய
மாபெருங்கிருபை
மாநிலத்தோர்க் கீந்தார்
இயேசு சுவிசேஷ ஒளியாய் --- நன்றியால்

3. உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்தரராயிருக்க
கிருபையாய் ஈவாய் வரும் காலங்கள்
விளங்க ஒளி விளங்க --- நன்றியால்

4. அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லாத்திரு ஆக்கமிதனை
அவனியோர்க்களிப்பீர் --- நன்றியால்

5. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு
இராஜனாய் சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
இயேசுவின் முகமே --- நன்றியால்

NAMADHU YESU KRISTHUVIN NAAMAM

1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்

பல்லவி

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்
2. அவரை நோக்கி கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார் --- தேவ

3. பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் --- தேவ

4. பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார் --- தேவ

5. நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில் --- தேவ

6. பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம் --- தேவ

NAM DEVANAI THUTHITHUPPADI



நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்

களிகூர்ந்திடுவோம் , அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் , புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்

1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்

2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்

3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்

NANBI VANTHEN MESSIAH NAAN NANBI VANTHENE

நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே - திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே

சரணங்கள்

1. தம்பிரான் ஒருவனே, தஞ்சமே தருவனே - வரு
தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே --- நான்

2. நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் - நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே --- நான்

3. நாதனே, கிருபைகூர், வேதனே, சிறுமைதீர் - அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே --- நான்

4. பாவியில் பாவியே, கோவியில் கோவியே - கன
பரிவுடன் அருள்புரி, அகல விடாதே, நம்பிவந்தேனே --- நான்

5. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே --- நான்

KIRUBAI IRAKKAM NIRAINTHAVOR




1. கிருபை இரக்கம் நிறைந்தவோர்
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
தருணமேதும் எங்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே

கிருபையே பெருகுதே
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
என்ன என் பாக்கியமிதே

2. நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
நாதனோர் பாவமுமற்றவராய்
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
நல்ல ஆசாரியர் நமக்குண்டே

3. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
நல்கிடுவார் பரிபூரணமாய்
நாடுவோமே மாறா கிருபையை
நமக்காகவே அவர் ஜீவிப்பதால்

4. வானங்களின் வழியாய்ப் பரத்தில்
தானே சென்று இயேசுவா மெமது
மா பிரதான ஆசாரியரைப்
பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை

5. பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
சதாபரிந்து பேசியே நிற்போர்
இதோ எம்மையே முற்றுமுடிய
இரட்சிக்க வல்லமையுள்ளவரே

NAL MEETPER PATCHAM NILLUM RATCHANYA VEERARE

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.

2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.

3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்
நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;
சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.

4. நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம், வெற்றி பாட்டாக மாறுமே;
மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்;
விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.

NALLAVI OOTRUM DEVA LYRICS


நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல்லாவி ஊற்றும் தேவா

1. பெந்தெகோஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேளையில் இறங்கிடுவீரே
விந்தை செய் விண் ஆவியே --- நல்லாவி

2. மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டெனையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே --- நல்லாவி

3. ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேஷ பணியாற்றவும் --- நல்லாவி

4. பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க --- நல்லாவி

VINNIL OOR NATCHATHIRAM THONDRIDAVE

விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்

ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை போற்றிடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்

1. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்திரியர் மூவரும் வந்தனரே
முன்னணை பாலனை கண்டனரே
பொன் போளம் தூபம் படைத்தனரே --- ஆனந்தம்

2. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே --- ஆனந்தம்

NAAN PAADUM KAANANGALAL

நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
எந்தன் ஜீவிய காலம் வரை
அவர் மாறாத சந்தோஷமே – நான்

1. பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர் --- நான்

2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார் --- நான்

3. நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும் --- நான்

NAAN PAAVITHAN AANALUM NEER

1. நான் பாவிதான் - ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.

2. நான் பாவிதான் - என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.

3. நான் பாவிதான் - மா பயத்தால்
திகைத்து, பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே, வந்தேன்.

4. நான் பாவிதான் - மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.

5. நான் பாவிதான் - இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.

6. நான் பாவிதான் - அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.

NAAN BRAMITHU NINDRU PERANBIN

1. நான் பிரம்மித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்

பல்லவி

மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன் --- மாதூய
2. முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன் --- மாதூய

3. தம் கரத்தை என் மீதில் வைத்து
' நீ சொஸ்தமாவாய் ' என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினார் --- மாதூய

4. எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வார் --- மாதூய

NARPATHU NAAL RAAPAGAL LYRICS


1. நாற்பது நாள் ராப் பகல்
வனவாசம் பண்ணினீர்;
நாற்பது நாள் ராப் பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர்.

2. ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகத் துணை;
மஞ்சம் உமக்குத் தரை,
கல் உமக்குப் பஞ்சணை.

3. உம்மைப்போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்,
உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்.

4. சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும்,
வென்றீரே நீர் அவனை.

5. அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்;
தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்.

NIGARE ILLATHA SARVESA

நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா

அனுபல்லவி

துதிபாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா

சரணங்கள்

1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனைத் தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம் --- நிகரே

2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம் --- நிகரே

3. பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே --- நிகரே

4. தேவ மைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார் --- நிகரே

5. கொந்தளிக்கும் அலைகளையும்
கால் மிதிக்கும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதற்றிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே --- நிகரே

6. ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே --- நிகரே

NIRPANTHAMANA PAAVIYAI NAAN INGE LYRICS

1. நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், கர்த்தரே;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

2. ஆ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்;
ஆ ஸ்வாமீ, துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்,
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே, என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

4. என் நெஞ்சின் திகில் தணித்து,
என்மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

NEE ILLATHA NAALELLAM NAALAGUMA LYRICS

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா?
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா?

உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்

எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்

எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்