Wednesday, January 22, 2020

MAANGAL NEERODAI VAANJITHU

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுதே
தஞ்சம் நீர் அடைக்கலம் நீர் 
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே

ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவோம்

யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன்

கன்மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர் 
எதிரிகளால் ஒடிங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ

தேவரீர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவினில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது

RAJAVAGA PIRINTHA YESU

ராஜாவாக பிறந்த இயேசு
என் உள்ளத்திலே தங்கியே விட்டார்
அல்லேலுயா சொல்லிப் பாடுவேன்
ஆடிப்பாடி நன்றி சொல்லுவேன்

துயரத்தைப் போக்க இயேசு பிறந்தார்
பாவத்தை மன்னிக்க இயேசு பிறந்தார்
எனக்கொரு வாழ்வுதர
சமாதானம் அருளிச் செய்ய
எனக்காக இயேசு பிறந்தார்

தாவீதின் வேராக இயேசு பிறந்தார்
ஈசாயின் மரமாய் இயேசு பிறந்தார்
என்னை என்றும் வாழ வைக்க
கிருபையால் நிலைநிற்க
எனக்காக இயேசு பிறந்தார்

VANTHOM THANTHIDAVE THANTHAI YETRIDUVAI

வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய் 
எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய் 

இறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன 
இகத்தில் நீ தந்த வாழ்வை தந்தால் எனக்கு இழப்பென்ன 
இனிவாழும் காலம் இனிதாக வேண்டும் 
இறைவா உன்னோடு இணைந்ததாக வேண்டும் 

இணைந்ததாக வேண்டும் 
இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னை தேடுதே 
உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே 
உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து இறைவா உன்னோடு
 இணைந்தாக வேண்டும் இணைந்தாக வேண்டும் 

VAA PAAVI MALAITHU NILLATHE VAA

வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா

1. என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே;
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே,
உள்ளபடி வாவேன். — வா

2. உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்,
உன் பாவத்தைச் சுமந்தேன்;
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன், பாவி, வா. — வா

3. கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,
ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. — வா

4. விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ?
சீக்கிரம் ஓடி வாவேன். — வா

5. என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழ்ந்து தள்ளேனே;
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே,
வாராயோ, பாவி? — வா

VAANOR POOVOR KONDADA

வானோர் பூவோர் கொண்டாட
மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே

தீனதயாளன் திருமறைநூலன்
திரிபுவனங்களாள் செங்கோலன்
ஞானசு சீலன் நரரனுகூலன்
நடுவுடவே வருபூபாலன்

அலகையை ஜெயித்தார் அருள்மறை முடித்தார்
அருலமலர்க்கா காவலை யழித்தார்
நிலைதிரை கிழித்தார் தடைச்சுவரிடித்தார்
நேராய்த் தரிசனந்தர விடுத்தார்

செத்தோ ருயிர்த்தார் திருநகர் பூத்தார்
தேடற் கரியதோர் காட்சிவைத்தார்
மற்றோர் பார்த்தார் மலைவுகள் தீர்த்தார்
மரித்தோர் முதற்பலனாய்ச் செழித்தார்

அடியவர் கண்டார் ஆர்துயர் விண்டார்
அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்
மடமையகன்றார் மயக்கமே கொன்றார்
வானானந்தமே மனங்கொண்டார்

மகதலனாளு மதி சூசன்னாளும்
மயங்கியழுத யோ வன்னாளும்
மகவிருவர் தருசா லொமித்தாயும்
மரை மலரடிதொழு தேத்தினரே

எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா
இலதுபதின் மருக்குமே காட்சி
நன் மனதுடனே பதினொருவருக்கும்
நடுவகத்தே வருமாசூட்சி

மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்
மகத்துவத்தே தரிசன மளித்தார்
பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும்
பிரத்தியேகத்தில் தரிசித்தன்ரே

கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்
காட்சி மலையஞ் நூறுபேர் பார்த்தார்
உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்
ஒலிவை மலைமேல் திரள்பேர் பார்த்தார்.

VINNNAPPATHTHAIP KAETPAVARAE

விண்ணப்பத்தைப் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடப்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே

VAELAIKAARAN KANGAL THAN

வேலைக்காரன் கண்கள் -தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்

நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
விழுகையில் வியாதியின் நேரங்களில்
வழுவாது உம் கரம் தாங்கிடுமே

கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்

சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
உம் கரம் பற்றியே என்றுமே நான்
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே

EZUMBIDU SABAYE

தேசத்தை மாற்றும் சபை
இந்த தேசத்தை மாற்றும் சபை -2

எழும்பிடு சபையே எழும்பிடு
இந்த தேசத்தை மாற்றிட எழும்பிடு -2-தேசத்தை

1.பரிசுத்தம் தேசத்தில் நிலவிட
பரிகாரி இயேசுவை கண்டிட -2
சபைகள் இயேசுவை காண்பிக்க
இந்த தேசம் இயேசுவை கண்டிட-2-எழும்பிடு சபையே 

2.பழையவை எல்லாம் ஒழிந்திட
உனக்குள் புதிய காரியம் நடந்திட -2
தரிசனம் உனக்குள் பிறந்திட
இந்த தேசத்தில் மாறுதல் கண்டிட-2-எழும்பிடு சபையே

THALAI GUNINDHA IDATHINILE

தலை குனிந்த இடத்தினிலே
தலை நிமிர செய்தவரே
தடுமாறும் என் படகை
தாங்கி பிடித்த நேசரே-2

என்னை உமக்காக இன்று தந்தேனே
என் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே-2

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்-2

1.வேரில்லா மரம் போல் ஆனேன்
வேரூன்ற செய்தீரே
கனிகளால் நிரப்பி என்னை
கனி கொடுக்க வைத்தீரே-2-என்னை உமக்காக

உம்மை அல்லாமல் யார் உண்டு
நீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு-2
என் பாசமும் நீரே
என் சுவாசமும் நீரே
நீர் வந்தாலே போதும் இயேசுவே-2

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்-4

NIGILONA MERISE NAKSHATHRAM

నింగిలోన మెరిసే - నక్షత్రం
లోకమంతటికి - వెలుగును చూప - (2)
యేసయ్య - పుట్టాడని 
ఆయనే - రక్షకుడని - (2)

పూజించి - కొనియాడి పూజించి - కొనియాడి 
ఆరాధన చేద్దాం

లోకానికి - వెలుగాయెనే పరలోకానికి - దారాయెనే -(2)
- "నింగిలోన"

1. నశియించి పోతున్న లోకాన్ని చూసి 
చీకటిలో ఉన్న నరులను చేర వాక్యమైయున్న దేవుడు 
దీనుడై భువికొచ్చినాడు

పూజించి - కొనియాడి 
పూజించి - కొనియాడి 
ఆరాధన చేద్దాం

లోకానికి - వెలుగాయెనే
పరలోకానికి - దారాయెనే - (2)

సర్వోత్తన్నతమైన స్థలములలో దేవునికి మహిమ 
ఆయన కిష్టులైన ప్రజలందరికీ సమాధానమూ....

2. పాపంలో ఉన్న ప్రతివాని కొరకు ప్రాణాన్ని అర్పింప పాకలో పవళించే - (2)
కరములు చాచియున్నాడు దరి చేరితే నిన్ను చేర్చుకుంటాడు-2

పూజించి - కొనియాడి
పూజించి - కొనియాడి
ఆరాధన చేద్దాం-(2)

లోకానికి - వెలుగాయెనే
పరలోకానికి - దారాయెనే - (2)
- "నింగిలోన"

THAM RATHATHAL THOITHA ANGI PORTHU

தம் ரத்ததததில் தோய்ந்த 

I கேள்வி
1. தம் ரத்ததததில் தோய்ந்த 
அங்கி போர்த்து,
மாதர் பின் புலம்ப 
நடந்து
2. பாரச் சிலுவையால் 
சோர்வுறவே
துனையாள் நிற்கின்றான் 
பாதையே.
3. கூடியே செல்கின்றார் 
அப்பாதையே
பின்னே தாங்குகின்றான் 
சீமோனே
4. குருசை சுமந்தெங்கே 
செல்லுகின்றார்?
முன் தபங்கிச் சுமக்கும் 
அவர் யார்?
II மறுமொழி
5. அவர் பின் செல்லுங்கள் 
கல்வாரிக்கே
அவர் பராபரன் 
மைந்தனே.
6. அவரின் நேசரே, 
நின்று, சற்றே
திவ்விய முகம் உற்று 
பாருமே.
7. சிலுவைச் சரிதை
கற்றுக் கொள்வீர்
பேரன்பை அதனால் 
அறிவீர்.
8. பாதையில் செல்வோரே: 
முன் ஏகிடும்
ரூபத்தில் காணீரோ 
சௌந்தரியம்?
III சிலுவை சரிதை
9. குருசில் அறையுண்ட 
மனிதனாய்
உம்மை நோக்குகின்றேன் 
எனக்காய்
10. கூர் முள் உம் கிரீடமாம் 
குரூசாசனம்
சிந்தினீர் எனக்காய் 
உம் ரத்தம்
11. உம் தலை சாய்க்கவோ 
திண்டு இல்லை:
கட்டையாம் சிலுவை 
உம் மெத்தை.
12. ஆணி கை கால், ஈட்டி 
பக்கம் பாய்ந்தும்,
ஒத்தாசைக்கங்கில்லை 
எவரும்
13. பட்டபகல் இதோ 
ராவாயிற்றே:
தூரத்தில் நிற்கின்றார் 
உற்றாரே.
14. ஆ, பெரும் ஓலமே! 
தோய் சோரியில்
உம் சிரம் சாய்க்கிறீர் 
மார்பினில்:
15. சாகும் கள்ளன் உம்மை 
நிந்திக்கவும்,
சகிக்கின்றீரே நீர் 
என்னாலும்.
16. தூரத்தில் தனியாய் 
உம் சொந்தத்தார்
மௌனமாய் அழுது 
நிற்கின்றார்.
17. “இயேசு நாசரேத்தான் 
யூதர் ராஜா”
என்னும் விலாசம் உம் 
பட்டமோ?
18. பாவி என் பொருட்டு 
மாளவும் நீர்
என்னில் எந்நன்மையை 
காண்கின்றீர்?
IV சிலுவையின் அழைப்பு
(குருவானவர் பாடுவது)
19. நோவில் பெற்றேன் சேயே: 
அன்பில் காத்தேன்
நீ வண்ணில் சேரவே 
நான் வந்தேன்.
20. தூரமாய் அலையும் 
உன்னைக் கண்டேன்:
என்னண்டைக் கிட்டிவா, 
அணைப்பேன்.
21. என் ரத்தம் சிந்தினேன் 
உன் பொருட்டாய்:
உன்னைக் கொள்ள வந்தேன் 
சொந்தமாய்.
22. எனக்காய் அழாதே,
அன்பின் சேயே:
போராடு, மோட்சத்தில்
சேரவே.
V இயேசுவை நாம் வேண்டல்
23. நான் துன்ப இருளில்
விண் ஜோதியே,
சாமட்டும் உம் பின்னே
செல்வேனே:
24. எப்பாரமாயினும்
உம் சிலுவை
நீர் தாங்கின் சுமப்பேன்
உம்மோடே.
25. நீர் என்னைச் சொந்தமாய்
கொண்டால், வேறே
யார் உம்மிலும் நேசர்
ஆவாரே?
26. இம்மையில் உம்மண்டை
நான் தங்கியே
மறுமையில் வாழ
செய்யுமே.