Sunday, August 16, 2015

PAARIR ARUNOTHAYAM POL LYRICS

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போலே

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாம்
பதினாயிரங்களில் சிறந்தோர்

1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதிமதிரம் --- இயேசுவே

2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தாங்குகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கொடி நேசமே --- இயேசுவே

3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் --- இயேசுவே

4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினின் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நான் செல்வேன் அந்நேரமே --- இயேசுவே

5. நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்
ஆட்டுக்குட்டியின் மண நாளிலே
சுத்த பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்தில்

KALVAARIYIN KARUNAIYITHE

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே – அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற
விலையாக ஈந்தனரே

1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கினையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

2. சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

3. எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பிதையே
சிந்தித்தே சேவை செய்வேன்

4. மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணிலவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

PAAR POTRUM VENTHAN IPPAL LYRICS

1. பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்
பூரிப்பால் உள்ளம் யாவும் நிறைத்தார்
பரிசுத்தவான்களோடு இணைத்தார்
இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே

பல்லவி

அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்
ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்
ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்
அல்லேலூயா அல்லேலூயா

2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே
பரிசுத்த ஜுவாலை கவர்ந்து கொண்டதே
உடல், பொருள், ஆவி, ஆன்மா யாவுமே
இயேசுவின் சிலுவை அடிவாரமே!

3. தாழ்மை உள்ளம் கொண்டு பின் செல்வேன் நானே
கந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்
உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கவே
வல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே

4. நாள் தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்
விட்டு வந்த பாவக் கிடங்கிற்குச் செல்லேன்
என் முன்னே அநேக சுத்தர் செல்கின்றார்
இப்பாதையே எந்தன் ஜீவ பாதையே

KILAKKILE ORU NATCHATHIRAM KILAMBIYATHUM

கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்
வானிலே அதன் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்!

1. தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்
தூது சொன்னது அற்புதம் அற்புதம்
பாமரர், மேய்ப்பர், தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமே
மேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே

2. கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்
மன்னன் வரவு அற்புதம்
அகிலம் முழுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமே
உலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே

3. பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனை
தேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்
சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும் அற்புதம் அற்புதமே
விடுதலை பெறும்வழி துவக்கியே வைத்ததும் அற்புதம் அற்புதமே

4. இயேசுவின் சன்னிதி அடைக்கலம் தேடுவோர்
வாழ்வு மலர்ந்திடும் அற்புதம் அற்புதம்
மீண்டும் பிறந்தவர் கூடியோ வாழ்ந்திடும் அற்புதம் அற்புதமே
அழகிய மானுடம் உலகெங்கும் விடியும் அற்புதம் அற்புதமே

PAALARE OOR NESAR UNDU VINN MOTCHA VEETILE

1. பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே;
நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும்.

2. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச நாட்டிலே;
பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே;
ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ?
அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ!

3. பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டில், நீர்
நல் மீட்பரின் பேரன்பால் பொற் கிரீடம் அணிவீர்;
இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின்சென்றார்,
இவ்வாடா ஜீவ கிரீடம் அப்போது சூடுவார்.

4. பாலரே, ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே;
மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே;
அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை;
நீர் அவரிடம் வாரும், ஈவார் அவ்வின்பத்தை.

PAALAR GHAYIRITHU PAASAMAI VAARUM

பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும்,
பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும்.

அனுபல்லவி

தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப் --- பாலர்

சரணங்கள்

1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்,
பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம்,
பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்,
ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் --- பாலர்

2. தேடி வந்தலையும் தேசிகருண்டு,
பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு. --- பாலர்

3. இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே,
இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,
அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்
எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு --- பாலர்

PAAVA SANJALATHAI NEEKKA

1. பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்.

2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்;
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பெலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை,
தீய குணம் மாற்றுவார்.

3. பெலவீனமான போதும்
கிருபாசனமுண்டே;
பந்து ஜனம் சாகும் போதும்
புகலிடம் இதுவே;
ஒப்பில்லாத பிராண நேசா!
உம்மை நம்பி நேசிப்போம்;
அளவற்ற அருள் நாதா!
உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

PAAVA DHOSAM NEEKIDA MEETPARIN RATHAM THANE

1. பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!
தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே!

பல்லவி

மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே
2. என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே!
மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே!

3. வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே
புண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே!

4. மோட்ச மார்க்கம் இதுவே! மீட்பரின் இரத்தம் தானே!
இயேசு சுத்த தீர்த்தமே! மீட்பரின் இரத்தம் தானே

PAAVAM PIRAVESIYAI PONNAGARAM UNDE

1. பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே
தீட்டானதொன்றும், தீட்டானதொன்றும்
ஓர்காலும் சேராதே

2. இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன்
என் பாவம் நீக்கி, என் பாவம் நீக்கி
நீர் சுத்தமாக்குமேன்

3. உம் நேசப் பிள்ளையாய் நீர் சேர்த்துக்கொள்ளுவீர்
தீமை செய்யாமல், தீமை செய்யாமல்
என்னைக் காப்பாற்றுவீர்

4. பின் மோட்ச தேசத்தில் வெண் வஸ்திரம் தரிப்பேன்
குற்றமில்லாமல், குற்றமில்லாமல்
இன்பமாய் வாழுவேன்

PAAVIKKU PUGALIDAM YESU RATCHAGAR

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

அனுபல்லவி

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

சரணங்கள்

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல் கொதா மலைக்கு இயேசுவை

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசி தாகமும்
படுகாயமும் அடைந்தாரே

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முள்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக் காணும் உள்ளம் தாங்குமோ

4. உலகத்தின் இரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா

5. பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தன் இயேசுவண்டை ஓடிவா

6. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டையில் என்கிறார்
இளைப்பாறுதல் தரும் இயேசுவை
இன்று தேடி நாடி நம்பி வா

PAAVI KEEL UN AANDAVAR LYRICS

1. பாவீ, கேள்! உன் ஆண்டவர்,
அறையுண்ட ரஷகர்
கேட்கிறார், என் மகனே
அன்புண்டோ என்பேரிலே!

2. நீக்கினேன் உன் குற்றத்தை,
கட்டினேன் உன் காயத்தை,
தேடிப் பார்த்து ரஷித்தேன்,
ஒளி வீசப்பண்ணினேன்.

3. தாயின் மிக்க பாசமும்,
ஆபத்தாலே குன்றினும்,
குன்றமாட்டாதென்றுமே
ஒப்பில்லா என் நேசமே.

4. எனதன்பின் பெருக்கும்
ஆழம் நீளம் உயரமும்
சொல்லி முடியாது, பார்;
என்னைப் போன்ற நேசனார்!

5. திவ்விய ரூபம் தரிப்பாய்,
என்னோடரசாளுவாய்;
ஆதலால் சொல், மகனே,
அன்புண்டோ என்பேரிலே!

6. இயேசுவே, என் பக்தியும்
அன்பும் சொற்பமாயினும்,
உம்மையே நான் பற்றினேன்,
அன்பின் ஸ்வாலை ஏற்றுமேன்!

PITHAVE YENGALAI KALVAARIYIL LYRICS

1. பிதாவே, எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,
தரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.

2. ஆ, எங்கள் குற்றம் கறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே;
விஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்;
உம் பேரருளைப் போக்கடித்தோமே;
என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.

3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;
சிறந்த நன்மை யாவும் அளியும்;
உம் மார்பினில் அணைத்துக் காருமே;
எத்தீங்கும் அனுகாமல் விலக்கும்;
உம்மில் நிலைக்க பெலன் அருளும்.

4. இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
பேரின்பம் தருந் திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.

PIRANTHAR ORU PAALAGAN

1. பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.

2. ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்;
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்.

3. பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே;
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே.

4. கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே.

5. ஆதி அந்தம் அவரே,
ஆர்ப்பரிப்போம் நாமே;
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.

INTHA NAALAI NAAN SAMARPIPPEN

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
இயேசுவின் திருப் பாதத்தில்

காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்

இனிய வார்த்தை எப்போதும் பேச
இயேசு நடத்திடும்
இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க
இயேசு காட்டிடும்
இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
இயேசு போதியும்
இன்முகம் காட்டி இறங்கி நோக்க
இயேசு கற்பியும்

பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
அதையே செய்யவும்
பிறர் எனக்கு மன்னிப்பதையே
அவர்க்கு மன்னிக்கவும்
பிறர் நலம் கருதியே
சதா உழைக்கவும்
பிறருக்காக என்னை ஒடுக்கி
நான் மரிக்கவும்

PILAUNDA MAALAIYE PUGALIDAM YEEYUME

1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.

3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.

4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்
பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே.

BUTHIKKETTATHA ANBIN VAARI PAARUM

1. புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.

2. ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்.

3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.

PAAR POTRUM VENTHAN PAARINIL VANTHU

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பாலகனாக பிறந்தாரே
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே
பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

1. மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே

2. தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே

IMMANUVELIN RATHATHAL NIRAINTHA OOTRUNDE

1. இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதினால்
நிவிர்த்தியாகுமே 

 நான் நம்புவேன் ! நான் நம்புவேன் !
இயேசு எனக்காய் மரித்தார் - மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்
தேவனைத் துதியுங்கள்

2. மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் மோட்சானந்தமும்
அடைந்து பூரித்தான் --- நான்

3. அவ்வாறே நானும் யேசுவால்
விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன் --- நான்

4. காயத்தில் ஓடும் ரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன் --- நான்

5. பின் விண்ணில் வல்ல நாதரை
நான் கண்டு பூரிப்பேன்
அங்கென்னை மீட்ட நேசத்தைக்
கொண்டாடிப் போற்றுவேன் --- நான்

BOOLOGATHARE YAAVARUM KARTHAVIL KALIKOORUNGAL

1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள்.

2. பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள்.

4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.

5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

POOVIN NARGANTHAM VEESUM SOLAIYAYINUM

1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்

2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்

3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின் செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்

BETHALAIYIL PIRANTHAVARAI


பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்
1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் - இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் - இங்கு
ஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே

BETHALEGAM OORORAM SATHIRATHAI

1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
பக்தியுடன் இத்தினம் வாஓடிப் --- பெத்லேகம்

2. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் --- பெத்லேகம்

3. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ,
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ,
ஆன பழங் கந்தை என்ன பாடோ? --- பெத்லேகம்

4. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி,
இன்றிரவில் என்ன இந்த மோடி --- பெத்லேகம்

5. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு,
அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு,
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு --- பெத்லேகம்

VAAVATHI VAANANGALIL

வானாதி வானங்களில்
காணாத விண்ணொளியில்
வெள்ளிரத பவனியிலே
கள்ளமின்றி வந்தாயோ கண்ணே

1. தாலாட்டும் புல்லணையில்
கண் தேடும் அழகன்றோ?
என்றும் நீங்காத பனிமழையில்
நீர் தாங்காத குளிரன்றோ?

2. தூக்காத வன் சிலுவை
நீர் தூக்கி சுமப்பாயோ?
கறை காணாத திருரத்தத்தால்
எம்மை கழுவிட வந்தாயோ?

3. உலகோரின் பாவத்திற்காய்
நீ மரிக்க துடிப்பாயோ?
உந்தன் பிதாவின் சித்தத்தினால்
மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ?

VINNOR MAGILTHU PAADUM PAADAL

விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
உன்னைத் தாலாட்ட
மண்ணோர் உவந்து பாடும் பாடல்
உன்னை வரவேற்க ஆ…

1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட
வார்த்தை நீயன்றோ
தேவ வாழ்வின் தூய மேன்மை
ஏன் துறந்தாயோ
எம் தாழ்ந்த உள்ளம் தன்னில்
நீ வந்தருள்வாயோ

2. மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி
வானவன் அறிவித்தான்
தாவீதின் நகரில் மாமரி மடியில்
மாபரன் பிறந்துள்ளார்
நின் பாதம் தொழுதிட வந்தோம்
எம் தாகம் தீர்ப்பாயோ

3. கன்னித்தாயும் அவளது மடியில்
உன்னைத் தாலாட்ட
பன்னிரு நாளாய் காத்து
நிற்கும் உவலயம் உனை வணங்க
எம் வாழ்வின் இன்பம் பொழிய
நின் வாழ்வை ஈந்தாயோ

BELAMULLA NAGARAMAM YESU VANDAI

1. பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை
பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
சஞ்சலத்தில் வேறு வழியில்லை
சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார்

2. நிலையில்லா உலகத்தின் அலைகளாலே
அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
விசுவாசக் கப்பலில் சேமமாக
யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்

3. கழுகைப் போல பறந்து நீ உன்னதத்தில்
வாழ்கின்ற வாழ்வையே வாஞ்சித்துக் கொள்
காத்திருந்தால் அவர் ஈந்திடுவார்
பெருக்கமுள்ள பலன் மக்களுக்கு

4. மரணம் தான் வருகினும் பயப்படாதே
விரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்
யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த
எங்குமில்லை யென்று விசுவாசிப்பாய்

5. ஆறுதலடையு மாநாடு சென்று
இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
பரம சுகம் தரும் ஊற்றுகளில்
பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம்

BETHALEGAM OORORAM SATHIRATHAI NAADI

1. பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி

2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து

3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்

4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ

5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி

6. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு

7. இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே

PONGI VARUM ARUL MANITHARAI MATTRIDUTHE

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே!

1. தீயவர் திருடரும், கொடியவர், கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
அழைக்கிறார் - ஓடியே வா

2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினைப
பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ - ஓடியே வா

3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ
அழைக்கிறார் - ஓடியே வா

VAZHI SONNAVAR VAZHIYUMANAR

வழி சொன்னவர் வழியுமானவர்
வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர் - இவரே

மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனவர் - இயேசு

1.இயேசுவே தெய்வம் - ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன் - மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம் - தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன் - மீட்க வந்த தேவன்
இயேசுவே ராஜா - ராஜாதி ராஜா (2)

2.இயேசுவே இரட்சகர் - உயிர் தந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர் - உயிர்த்தெழுந்த ஆண்டவர்
இயேசுவே கர்த்தனாம் - கர்த்தாதி கர்த்தனாம்
இயேசுவே ராஜனாம் - ராஜாதி ராஜனாம்
இயேசுவே ராஜா - ராஜாதி ராஜா (2)

POTRIDU AANMAME SRISTI KARTHAVAAM

1. போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை;
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை;
கூடிடுவோம் பாடிடுவோம் பரனை மாண்பாய் சபையாரெல்லோரும்.

2. போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை;
ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மை;
ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்; யாவும் அவர் அருள் ஈவாம்.

3. போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை;
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை;
பேரன்பராம் பராபரன் தயவை சிந்திப்பாய் இப்போதெப்போதும்.

4. போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்;
ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்;
சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே வணங்கி மகிழ்வாய் ஆமேன்.

POTRUM POTRUM PUNNIYA NAADARAI

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;
போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.

2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;
பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து
வானலோக வாசலைத் திறந்தார்.
மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!
வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!
அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,
வல்லநாதா, கருணை நாயகா!

3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;
போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
ஆட்சிசெய்வார் நித்திய காலமும்;
ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,
இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்;
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.

KAAVIYAM PAADIDUVEN KAALAMUM VAALVINILE

காவியம் பாடிடுவேன்
காலமும் வாழ்வினிலே
இயேசுவின் அன்பினையே
இறைமகன் இயேசுவின் அன்பினையே

இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
கீதம் பாடிடுவேன் (2) --- காவியம்

1. சொந்தம் பந்தம் எல்லாம்
வாழ்வில் மாறுமே
நெஞ்சில் வாழும் இயேசு
மாறா தெய்வமே (2)
அதை நினைப்பதினால் நன்றியுடன்
கீதம் பாடிடுவேன் --- காவியம்

2. என்னை தேடி வந்தாய்
அன்பாய் தேவனே
என்றும் என்னை காக்கும்
தெய்வம் இயேசுவே (2)
அதை உள்ளத்திலே உணர்வதினால்
கீதம் பாடிடுவேன் --- காவியம்

MAGANEUNN NENJENALLU THARAYO LYRICS

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன், இது பாராயோ?

1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே - பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே --- மகனே

2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே --- மகனே

3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? --- மகனே

4. உலக வாழ்வினை விட்டகல்வாயே - மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே --- மகனே

5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்
உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே --- மகனே

makanae un nenjanakkuth thaaraayo
motcha vaalvai tharuvaen ithu paaraayo
akaththin asuththamellaam thutaippaenae
paava alukkai neekki arul koduppaenae
unpaavam muttum parikarippaenae -athai
unnmaiyaay akatta yaan mariththaenae
paavam anaiththumae vittaோdaayo -nithya
parakathi vaalvai inte thaedaayo
ulaka vaalvinai vittakalvaayae – makaa
uvappaayk kathi eevaen makilvaayae
untan aaththumaththai nee pataippaayae
athil ookkamaay vasikka idam koduppaayae

POTRUVOME POTRUVOME ENN DEVAREERAI

போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே
1. துங்கன் யேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி மங்கிடாமலே தங்கிட வேணும் --- போற்று

2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனே
ஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனே
அன்றும் என்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே --- போற்று

3. பாவம் போக்கியே கோபம் மாற்றியே ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனே
தூயா நேயா காய மாற்றியே கருணாநிதியே பரிகாரியே --- போற்று

4. பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே தாவிவந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட அருள் நிறைந்தவனே
தரிசனம் தந்த தேவனே பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க --- போற்று

5. பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே கானம் பாடியே துதித்திடுவேன் --- போற்று

MALARE MALARE VELLI MALARE

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது - இம்
மண்ணில் பூத்த மலரே - உயர் விண்ணின் வேந்தர் வரவு

1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க

2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க