Monday, September 14, 2015

AA INBA ILLAME NEE ENDRUM

1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
தழைத்து வாழ்க;
அன்புடன் பாலர் யாரும் அங்கு
ஐக்கியமாய் ஓங்க;
அன்னை தந்தை
ஆவலாய்ப் பாலகரை
ஆண்டவன் பாதம் படைக்க.

2. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம்
சுகம் தழைக்க;
உன் மக்கள் யாவரும் ஓர் வேலை
உகந்து செய்ய;
பக்தியுடன்
பற்பல சேவை ஆற்றி,
கர்த்தன் அருள் பெற்று ஓங்க.

3. ஆ இன்ப இல்லமே! நன்மை
பெருகும் அந்நாளில்
ஆண்டவர் நாமத்தை ஆர்வ
நன்றியுடன் போற்று;
துன்பம் துக்கம்
துயரம் தொடர் நாளில்
அன்றும் அவரைக் கொண்டாடு.

4. ஆ இன்ப இல்லமே! உன்
உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
என்றும் நடத்தும்;
இவ்வாழ்வின்பின்
உன் மக்களை அவரே
விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

AA YESUVE NAAN BOOMIYIL

1. ஆ இயேசுவே, நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே.

2. அவ்வாறென்னை இழுக்கையில்,
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல்; பாவத்தை விடும்,
அநந்த நன்மைக்குட்படும்.

3. தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;
சகிப்பவன் சந்தோஷிப்பான்.

4. பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்.

AA YESUVE UMMALE NAAN

1. ஆ இயேசுவே, உம்மாலே
நான் மீட்கப்பட்டவன்;
உம் திவ்விய ரத்தத்தாலே
நான் சுத்தமானவன்;
மிகுந்த கஸ்தியாலே
என் தோஷத்தைத் தீர்த்தீர்;
உமது சாவினாலே
நீர் என்னை ரட்சித்தீர்.

2. நான் உம்மால் என்றும் வாழ,
இப்பந்தியில் நீரே
என் ஆவிக் கேற்றதான
அமிர்தம் தந்தீரே;
உம் ஆசீர்வாதம் ஈந்து,
என் பாவம் மன்னியும்;
அன்போடு என்னைச் சேர்த்து,
தயாளம் காண்பியும்.

3. நீர் இன்னும் என்னில் காணும்
பொல்லாங்கு யாவையும்
அகற்றிப்போட வாரும்,
என் நெஞ்சில் தங்கிடும்;
நான் உம்மைப் பற்றிக் கொள்ள
கருணை புரியும்;
மிகுந்த தாழ்மையுள்ள
சித்தம் கடாஷியும்.

4. நல் மீட்பரே, உம்மோடு
நான் ஐக்கியமாகவும்,
நாடோறும் வாஞ்சையோடு
உம்மில் நிலைக்கவும்,
மிகுந்த அன்பினாலே
துணை செய்தருளும்;
தெய்வீக அப்பத்தாலே
நீர் என்னைப் போஷியும்.

AA YESUVE NEER EN BALIYANEER

1. ஆ இயேசுவே, நீர்
என் பலியானீர்;
பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;
மன்றாடிடுவீர்
இப்பாவிக்காய் நீர்;
என்னைக் கொன்றோருக்காய்
உயிர் ஈந்தேன் என்பீர்.

2. இறங்கிடுமேன்,
அகற்றிடுமேன்
உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;
சிலுவை அன்பால்
என்னை இழுத்தால்
ஆவேன் விடுதலை பாவியாம்
அடிமை.

3. கோபம் பெருமை
போக்கும் சிலுவை;
அகற்றுமே தூய ரத்தமும்
தோஷத்தை;
தீய மனத்தை
பாவ பாரத்தை
அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்
உம்மண்டை.

4. தூய வெண்மையே
இப்போ இப்போதே;
உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;
தூயோன் ஆக்குவீர்
முற்றும் மாற்றுவீர்;
உந்தன் சாயல் என் வாழ்க்கையில்
உண்டாக்குமே.

5. உம் ரத்தம் என்னில்
நிலைத்திருப்பின்,
ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்
பிதாவின் முன்னர்
சகாயராம் நீர்,
சுதா, பாவியேனை உம் அன்பால்
வாழ்விப்பீர்.

AA KARTHAVE THALMAIYAGA

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
திருப் பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன், நல்ல இயேசுவே;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

2. வல்ல கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே,
நீரே என்றும் என்னுடைய
ஞான மணவாளனே;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

3. என் பிரார்த்தனையைக் கேளும்,
அத்தியந்த பணிவாய்;
கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய்;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

AA BAKIYA DEIVA BAKTHARE

1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் நீண்ட போர் முடிந்ததே;
வெற்றிகொண்டே, சர்வாயுதம்
வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.

2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
மா அலுப்பாம் பிரயாணத்தை
முடித்து, இனி அலைவும்
சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
நல் வீட்டில் இளைப்பாறுவீர்.

3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
இப்போதபாய புயலும்
உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இன்பத் துறையில் தங்குவீர்.

4. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் மேனி மண்ணில் தூங்கவே,
மாண்பாய் எழும்புமளவும்
விழித்துக் காத்துக்கொண்டிரும்;
சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
நம் ராஜா வருவார் என்பீர்.

5. கேளும், தூயோரின் நாதரே,
பரிந்து பேசும் மீட்பரே,
வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,
சீர் பக்தரோடு நாங்களும்
மேலோகில் சேரச் செய்திடும்.

AA AMBARA UMBARAMUM PUGALNTHIRU

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

அனுபல்லவி

ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார்

சரணங்கள்

1. அன்பான பரனே! - அருள் மேவுங் காரணனே! - நவ
அச்சய சச்சித - ரட்சகனாகிய
உச்சிதவரனே! --- ஆ! அம்பர

2. ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, - அன்று
அல்லிராவினில் - தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். --- ஆ! அம்பர

3. ஞானியர் தேட , - வானவர் பாட , -மிக
நன்னய , உன்னத - பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். --- ஆ! அம்பர

4. கோனவர் நாட , - தானவா கொண்டாட - என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
கோத்திரன் பிறந்தார். --- ஆ! அம்பர

5. விண்ணுடு தோண , - மன்னவர் பேண , - ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். --- ஆ! அம்பர

AADHARAM NEE THAN IYYA EN THURAIYE

ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே,
ஆதாரம் நீ தான் ஐயா

அனுபல்லவி

சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில்

சரணங்கள்

1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியன்மேல்,
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியனுக்கு --- ஆதாரம்

2. நாம் , நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனுக்கு --- ஆதாரம்

3. கற்றோர் பெருமையே , மற்றோர் அருமையே
வற்றாக் கிருபை நதியே , என்பதியே
வற்றாக் கிருபை நதியே , என்பதியே --- ஆதாரம்

4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே,
துக்கம் மிகுவேளையில் , உன் தாசனுக்கு --- ஆதாரம்

AATHI THIRUVAARTHAI DIVYA

ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம் , தாம் , தன்னரர் வன்னரர்
தீம் , தீம் , தீமையகற்றிட
சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட --- ஆதி

சரணங்கள்

1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். --- ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் --- ஆதி

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் --- ஆதி

AA ENNIL NOORU VAAYUM NAAVUM

1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்
இருந்தால், கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மை யாவும்,
அவைகளால் பிரசங்கித்து,
துதிகளோடே சொல்லுவேன்,
ஓயா தொனியாய்ப் பாடுவேன்.

2. என் சத்தம் வானமளவாக
போய் எட்டவேண்டும் என்கிறேன்;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.

3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,
என் உள்ளமே நன்றாய் விழி;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் இஸ்தோத்திரி;
இஸ்தோத்திரி, என் ஆவியே,
இஸ்தோத்திரி, என் தேகமே.

4. வனத்திலுள்ள பச்சையான
எல்லா வித இலைகளே,
வெளியில் பூக்கும் அந்தமான
மலர்களின் ஏராளமே,
என்னோடேகூட நீங்களும்
அசைந்திசைந்து போற்றவும்.

5. கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
கணக்கில்லா உயிர்களே,
பணிந்து போற்ற உங்களுக்கும்
எந்நேரமும் அடுக்குமே;
துதியாய் உங்கள் சத்தமும்
ஓர்மித் தெழும்பி ஏறவும்.

AA SAGOTHARAR ONDRAI YEGAMAANA

1. ஆ, சகோதரர் ஒன்றாய்
ஏகமான சிந்தையாய்
சஞ்சரித்தல், எத்தனை
நேர்த்தியான இனிமை.

2. அது ஆரோன் சிரசில்
வார்த்துக் கீழ்வடிகையில்,
கந்தம் வீசும் எண்ணெயே,
போன்றதாயிருக்குமே.

3. அது எர்மோன்மேலேயும்
சீயோன் மேடுகளிலும்
பெய்கிற ஆகாசத்து
நற்பனியைப்போன்றது.

4. அங்கேதான் தயாபரர்
ஆசீர்வாதம் தருவார்,
அங்கிப்போதும் என்றைக்கும்
வாழ்வுண்டாகிப் பெருகும்.

5. மேய்ப்பரே, நீர் கிருபை
செய்து, சிதறுண்டதை
மந்தையாக்கி, யாவையும்
சேர்த்தணைத்துக்கொள்ளவும்.

6. எங்கள் நெஞ்சில் சகல
நற்குணங்களும் வர,
தெய்வ அன்பை அதிலே
ஊற்றும், இயேசு கிறிஸ்துவே.

7. நீரே நெஞ்சை நெஞ்சுடன்
கட்டி, நேசத்தின் பலன்
நன்மை தீமை நாளிலும்
காணக் கட்டளையிடும்.

8. மூன்றொன்றாகிய பிதா
மைந்தன் ஆவியும் எல்லா
நாளும் ஒருமைப்படும்
போல் இம்மந்தை ஒன்றவும்.

ASIRVATHIYUM KARTHARE ANANTHA MIGAVE

1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாழனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
2. இம் மணவீட்டில் வாரீரோ, ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ, ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே --- வீசீரோ
3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கமருளுமே --- வீசீரோ
4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்,
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே --- வீசீரோ
5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் --- வீசீரோ
6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையைதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே --- வீசீரோ

BALIBEEDATHIL ENNAI PARANE

1. பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே

பல்லவி

கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை
2. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி --- கல்வாரியின்

3. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போது
ஆசீர்வதித்தருளும் --- கல்வாரியின்

4. சுயம்மென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய
தேவா அருள் செய்குவீர் --- கல்வாரியின்

5. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தில் கண்டதால் --- கல்வாரியின்

AANDAVA PRASANNAMAGI JEEVAN OOTHI

1. ஆண்டவா பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்;
ஆசை காட்டும் தாசர்மீதில்
ஆசீர்வாதம் ஊற்றிடும்.

      அருள்மாரி எங்கள் பேரில்
      வருஷிக்கப் பண்ணுவீர்.
      ஆசையோடு நிற்கிறோமே,
      ஆசீர்வாதம் ஊற்றுவீர்.

2. தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடே கூடினோம்;
உந்தன் திவ்விய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம்.

3. ஆண்டவா , மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்;
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர்.

4. தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே! கடாட்சியும்;
பெந்தே கொஸ்தின் திவ்விய ஈவை
தந்து ஆசீர்வதியும்.

AANDAVA VAA MELOGIL UM

1. ஆண்டவா! மேலோகில் உம்
அன்பின் ஜோதி ஸ்தலமும்,
பூவில் ஆலயமுமே
பக்தர்க்கு மா இன்பமே.
தாசர் சபை சேர்ந்திட,
நிறைவாம் அருள் பெற,
ஜோதி காட்சி காணவும்,
ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்.

2. பட்சிகள் உம் பீடமே
சுற்றித் தங்கி பாடுமே,
பாடுவாரே பக்தரும்
திவ்விய மார்பில் தங்கியும்;
புறாதான் பேழை நீங்கியே
மீண்டும் வந்தாற்போலவே,
ஆற்றில் காணா நின் பக்தர்
ஆறிப்பாதம் தரிப்பர்.

3. அழுகையின் பள்ளத்தில்
ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்;
ஜீவ ஊற்றுப்பொங்கிடும்,
மன்னா நித்தம் பெய்திடும்;
பலம் நித்தம் ஓங்கியே
உந்தன் பாதம் சேரவே,
துதிப்பார் சாஷ்டாங்கமாய்
ஜீவ கால அன்புக்காய்.

4. பெற மோட்ச பாக்கியம்
பூவில் வேண்டும் சமுகம்;
ரட்சை செய்யும் தயவால்
பாதம் சேர்த்தருள்வதால்,
நீரே சூரியன் கேடகம்,
வழித்துணை காவலும்;
கிருபை மகிமையும்
மேலும் மேலும் பொழியும்.

AATHIYIL IRULAI AGATRI OLIYAI

1. ஆதியில் இருளை
அகற்றி, ஒளியை
படைத்த நீர்,
உம் சுவிசேஷத்தை
கேளாத தேசத்தை
கண்ணோக்கி கர்த்தாவே,
பிரகாசிப்பீர்.

2. நற்சீராம் சுகத்தை,
மெய்ஞான பார்வையை
அளித்த நீர்,
நைந்தோர் சுகிக்கவும்
கண்ணற்றோர் காணவும்
மானிடர் பேரிலும்
பிரகாசிப்பீர்.

3. சத்தியமும் நேசமும்
உள்ளான ஜீவனும்
அளிக்கும் நீர்,
வெள்ளத்தின் மீதிலே
புறாப்போல பறந்தே,
பார் இருள் நீக்கியே,
பிரகாசிப்பீர்.

4. ஞானமும் வன்மையும்,
தூய்மையும் அருளும்
திரியேகா நீர்,
கடலைப் போன்றதாய்
மெய்யொளி எங்குமாய்,
பரம்பும் வண்ணமாய்,
பிரகாசிப்பீர்.

AATHUMA AATHAYAM SEIGUVOME ITHU

ஆத்தும ஆதாயம் செய்குவோமே - இது
ஆண்டவர்க்குப் பிரியம் - நாமதினால் நாம
ஆசீர்வாதம் பெறுவோம்

அனுபல்லவி

சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
அற்புதமான பலனை அடையலாம்

சரணங்கள்

1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் - ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்தி விட்டால்,
ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே --- ஆத்தும

2. கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவசுதன் - வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தைதானே;
துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சணிய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே --- ஆத்தும

AATHUMA KARTHARAI THUTHIKKINDRATHE

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே - இதோ!

அனுபல்லவி

நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே - இதோ! --- ஆத்துமா

சரணங்கள்

1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே - என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
முடிவில்லா மகிமை செய்தாரே , பல
முடியவர் பரிசுத்தர் என்பாரே - இதோ! --- ஆத்துமா

2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் - நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் - தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் - இதோ! --- ஆத்துமா

3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் - அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
நட்புடன் நினைவொடு நல்லிசரேல் - அவன்
நலம் பெற ஆதரித் தார்மறவேல் - இதோ! --- ஆத்துமா

AATHUMAAKKAL MEIPPARE MANTHAIYAI PATCHIKKAVUM

1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
மந்தையைப் பட்சிக்கவும்
சாத்தான் பாயும் ஓநாய் போல்
கிட்டிச்சேரும் நேரமும்,
நாசமோசம் இன்றியே
காரும், நல்ல மேய்ப்பரே.

2. பணம் ஒன்றே ஆசிக்கும்
கூலியாளோ ஓடுவோன்;
காவல் இன்றிக் கிடக்கும்
தொழுவத்தின் வாசல்தான்;
வாசல், காவல் ஆன நீர்
மந்தைமுன் நின்றருள்வீர்.

3. கெட்டுப்போன யூதாஸின்
ஸ்தானத்திற்குத் தேவரீர்,
சீஷர் சீட்டுப்போடவே
மத்தியா நியமித்தீர்;
எங்கள் ஐயம் யாவிலும்,
கர்த்தரே, நடத்திடும்.

4. புது சீயோன் நகரில்
பக்தர் வரிசையிலே
நிற்கும் மத்தியாவோடும்
நாங்கள் சேரச் செய்யுமே
கண் குளிர உம்மையும்
காணும் பாக்கியம் அருளும்.AATHU

AATHMAME UN AANDAVARIN

1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா, என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று.

2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி;
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி;
அல்லேலுயா, அவர் உண்மை
மா மகிமையாம் துதி.

3. தந்தை போல் மா தயை உள்ளோர்;
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே!
அல்லேலுயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.

4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே,
நாற்றிசையும் நின்றெழுத்து
பணிவர் நீர் பக்தரே;
அல்லேலுயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.

AANANTHAME JEYA JEYA

ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

அனுபல்லவி

ஞானரட்சகர் நாதர் நமை -இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் --- புகழ்

சரணங்கள்

1. சங்கு கனம் , வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம் ,
எங்கள் ரட்சகரேசு நமை -வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் --- புகழ்

2. முந்து வருடமதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல ,
தந்து நமக்குயிருடையுணவும் - வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் --- புகழ்

3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் ,
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத் ,
தரைதனில் குறைதணித் தாற்றியதால் --- புகழ்

AANANTHA GEETNANGAL ENNALUM PAADI

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா

சரணங்கள்

1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே --- ஆனந்த

2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே --- ஆனந்த

3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே --- ஆனந்த

4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே --- ஆனந்த

5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் --- ஆனந்த

AAR IVAR AARARO INTHA AVANIYOR MAATHIDAME

ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?

சரணங்கள்

1. பாருருவாகுமுன்னே - இருந்த - பரப் பொருள் தானிவரோ ?
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ ? --- ஆர்

2. மேசியா இவர்தானோ ? - நம்மை - மேய்த்திடும் நரர்கோனோ ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ ? --- ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ ? - நமது தேவனின் கண்மணியோ ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ ? --- ஆர்

4. பட்டத்துத் துரைமகனோ ? - நம்மைப் - பண்புடன் ஆள்பவனோ ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ ? --- ஆர்

5. ஜீவனின் அப்பமோதான் ? - தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர்தானோ ? --- ஆர்

CHINNACHIRU KULANTHAIYAI PIRANTHAR

சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!
பாவத்தைப் போக்க, பயமதை நீக்க, பாலகனாய்ப் பிறந்தார்

1. மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!
சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே!

2. வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!
சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து, பின் செல்லுவீர் என்றுமே!

AARAINTHU PAARUM KARTHAVE

1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும்

2. ஆராயும் என்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர்!
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்

3. ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும்;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும்

4. ஆராயும் சிந்தை, யோசனை,
எவ்வகை நோக்கமும்,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்

5. ஆராயும் மறைவிடத்தை
உம் தூயக் கண்ணினால்;
அரோசிப்பேன் என் பாவத்தை
உம பேரருளினால்

6. இவ்வாறு நீர் ஆராய்கையில்,
சாஷ்டாங்கம் பண்ணுவேன்;
உம் சரணார விந்தத்தில்
பணிந்து போற்றுவேன்

AARATHIPPOM YESURAAJANAI

ஆராதிப்போம் இயேசுராஜனை
இராக்காலத்தில் நிற்கும் ஊழியரே
நம் கைகளை உயர்த்தியே நாம்
ஆராதிப்போம் இயேசுராஜனை

ருசித்துப்பார், இயேசு நல்லவர் (3)
ஆராதிப்போம் இயேசுராஜனை

தூக்கினாரே சேற்றினின்றே
நிறுத்தினாரே கன்மலைமேல்
புதுப்பாடலை எந்தன் நாவில் தந்தார்
துதி பாடுவேன், துதி பாடுவேன்

AAYIRAM AAYIRAM PAADALGALAI AAVIYIL

1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்
யாவரும் தேமொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களேன்

பல்லவி

அல்லேலூயா ! அல்லேலூயா !
என்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லலில்லை ! அல்லலில்லை !
ஆனந்தமாய்ப் பாடிடுவோம்
2. புதிய புதிய பாடல்களைப்
புனைந்தே பண்களும் சேருங்களேன்
துதிகள் நிறையும் கானங்களால்
தொழுதே இறைவனைக் காணுங்களேன்

3. நெஞ்சின் நாவின் நாதங்களே
நன்றி கூறும் கீதங்களால்
மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்
மேலும் பரவசம் கூடுங்களேன்

4. எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்
சீயோனின் கீதம் பாடுங்களேன்

AANANTHAMAAI NAAME AARPARIPPOME LYRICS

1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாம் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்

பல்லவி

ஆத்துமமே என் முழு உள்ளமே 
உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி 
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே

2. கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எமைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம் --- ஆத்துமமே

3. படகிலே படுத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்த்தினாலும்
கடலையுங் காற்றையும் அமர்த்தியெமைக் 
காப்பாரே அல்லேலூயா --- ஆத்துமமே

4. யோர்தானைக் கடப்போம் அவர் பெலத்தால்
எரிகோவைத் தகர்ப்போம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம் --- ஆத்துமமே

5. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம் 
அதி சீக்கிரமாய் முடிகிறதே
விழிப்புடன் கூடித் தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார் --- ஆத்துமமே

ANANTHAMAI INBA KAANAN YEGIDUVEN

ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்

அனுபல்லவி

நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்

சரணங்கள்

1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்
கண்டு நன்றியுடன் பாடிடுவேன் --- ஆனந்தமாய்

2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் --- ஆனந்தமாய்

3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே --- ஆனந்தமாய்

4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
கண் பாரும் என்றும் நான் உம் அடிமை --- ஆனந்தமாய்

5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தன் சமூகமே
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன் --- ஆனந்தமாய்

BOOMIYIN MANITHARGALE MANNAVANAI THUTHIYUNGAL

பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்
பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்

1. வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்
மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்
ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை
கருத்துடன் துதியுங்கள் --- பூமியின்

2. தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்
தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்
தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை
என்றென்றும் துதியுங்கள் --- பூமியின்

3. கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்
கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை
படைத்தோனை துதியுங்கள் --- பூமியின்

AVIYAI ARULUME SWAMY ENAK

ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே

சரணங்கள்

1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? --- ஆவியை

2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,
தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை --- ஆவியை

3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் --- ஆவியை

AANANTHAME PARAMANANTHAME YESU

ஆனந்தமே பரமானந்தமே - இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே

சரணங்கள்

1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய் கிடைத்திடினும் --- ஆனந்தமே

2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
காரணமின்றி கலங்கேனே நான்
விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே --- ஆனந்தமே

3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் --- ஆனந்தமே

4. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ --- ஆனந்தமே

5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடுனும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார் --- ஆனந்தமே

6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே
என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை --- ஆனந்தமே

AARARO PAADUNGAL AGILAMENGUM KOORUNGAL

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று - 2
அல்லேலூயா பாடிடுங்கள் - 4

1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு

2. முன்னணையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே

INTHA ARUL KAALATHIL

1. இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்

2. தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே

3. மோட்ச வாசல், இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே

4. உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால்

5. சீயோன் நகர்க்காயக் கண்ணீர்
விட்டதாலும் தேவரீர்
எங்கள்மேல் இரங்குவீர்

6. நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும் இயேசுவே

PAADAADHA RAAGANGAL PAADUM

பாடாத ராகங்கள் பாடும்
மீளாத இன்பங்கள் ஆடும்
கேளாத கீதங்கள் கேட்கும்
மேய்ப்பன் வருகை கூறும்
எந்தன் மீட்பர் வருகின்றார் - (3)

1. உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலை
தெய்வம் தந்த அழகன்றோ
அன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்
இறைவனின் அழகன்றோ
ஏங்குதென் நெஞ்சமே தாங்கிடும் தஞ்சமே

2. எனக்காய் வந்த இன்பத்தின் நிழலே
இளைப்பை ஆற்றிடுமே
தாகத்தை தீர்க்கும் பேரின்ப ஊற்றே
தாகத்தை தீர்த்திடுமே
அன்பரை காணவே கண்களும் ஏங்குதே

INNAL RATCHIPPU KETRA NAL NAAL

இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்,
ஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள்

அனுபல்லவி

சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து
பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத

சரணங்கள்

1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் - தேவ
சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் --- இந்நாள்

2. வாடித் திகைத்துப் புலம்பாதே - உன்தன்
மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே --- இந்நாள்

3. உலகச் சிநேகம் வெகு கேடு - அதற்
குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு --- இந்நாள்

4. இன்றுன் இரட்சகரிடம் திரும்பு - அவர்
இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு --- இந்நாள்

5. இனிமேலாகட்டும் , என் றெண்ணாதே - பவ
இச்சைக் குட்பட்டால் , திரும்ப ஒண்ணாதே --- இந்நாள்

6. கிறிஸ் தேசுவை உற்றுப்பாரு - அவர்
கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு --- இந்நாள்

7. பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் - உனைப்
பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார் --- இந்நாள்

8. மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி - நித்திய
வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி --- இந்நாள்

9. ஏசுபெருமானை நீ நம்பு - அவர்
என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு --- இந்நாள்