Tuesday, October 29, 2019

NANDRI SOLLAMAL IRUKKAVE

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று
சொல்லி நான் துதிப்பேன்
நாள் தோறும் போற்றுவேன்

எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில்
செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன்
அத்தனையும் நினைத்து நினைத்து
நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன்

மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும்
போதெல்லாம் பாதுகாத்தீர் ஐயா
மீண்டும் ஜீவனை கொடுத்து
நீர் என்னை வாழ வைத்தீர் ஐயா

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
அளவில்லாத அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்

KARTHAR NALLAVARE AVAR KIRUBAI

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே
பாடி போற்றிடுங்களே… -2

தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே
பாடி போற்றுங்களே – 2
அவருடனேகூட நம்மை எழுப்பி
உட்கார வைத்தாரே உன்னதங்களிலே
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன்
இராஜாதி இராஜா நீரே (2)
கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா
உம்மையன்றி யாரை பாடுவேன் – 2
எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா 
என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன்
(என்) வாழ்வினில் வராவிட்டால் – 2
மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)
கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் – 2

KARTHAR NAAMAM EN PUGALIDAME

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

KARTHAR PERIYAVAR NAM APPA

கர்த்தர் பெரியவர் – நம் அப்பா பெரியவர்
தேவன் பெரியவர் நம் இயேசு பெரியவர்

1. அன்னாளைப் போல கர்த்தரிடம்
இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
அன்னாளை நினைத்த பெரியவர்
நம்மையும் நினைத்திடுவார்

2. சாலமோனைப் போல கர்த்தரிடம்
ஞானத்தை(யே) கேளுங்கள்
அந்த ஞானத்தை தந்த பெரியவர்
நமக்கு நிச்சமாய் தந்திடுவார்

3. எலியாவைப் போல கர்த்தருக்காய்
பெருங்காரியம் செய்திடுங்கள் – அன்று
எலிசாவை நடத்திய தேவனே
இன்று நம்மையும் நடத்துவார்

KARTHAR PERIYAVAR AVAR NAMATHU

கர்த்தர் பெரியவர் அவர் நமது
தேவனுடைய நகரத்திலே
தமது பரிசுத்த பர்வதத்திலே
மிகத் துதிக்கப்படத் தக்கவர்

வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்
வடிப்பமான ஸ்தானமே
சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது
அது மகா ராஜாவின் நகரம்

அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்
அடைக்கலமாக அறியப்பட்டார்
இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து
அதை கண்டு விரைந்தோடினர்

தேவனே உமது ஆலயம் நடுவே
உம் கிருபையை சிந்திக்கிறோம்
பூமியின் கடையாந்தர பரியந்தமும்
உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே

இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
நித்திய மகிமையில் சேர்த்திடுவார்

KARTHTHAR PERIYAVAR PUKAZHAPPATATHTHAKKAVAR

கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்
அவரின் மகத்துவத்தை ஆராய்ந்து முடியாது
செல்லுவோம் சொல்லுவோம் பாரெங்கும் பறை சாற்றுவோம்

1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
இரக்கம் உருக்கம் சாந்தம் நிறைந்த தேவன் அவர் அல்லவோ

2. தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரின் கிரியைகளை
கருத்தாய்ப் பாடித் துதித்துப் புகழ்ந்து அறிவித்து வாருங்கள்

3. கர்த்தரின் ஜனங்களே அவர் கரத்தின் வல்லமையை
அறிந்து உணர்ந்து உயர்த்திக்கூற விரைந்து வாருங்கள்

4. கர்த்தரின் இராஜ்ஜியமே நித்திய நித்தியமே
பாரத மெங்கும் பரந்து பரவிட தினமும் ஜெபித்திடுவோம்

ARUL YERALAMAI PEIYUM

அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே


பல்லவி
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே


1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள்


2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள்


3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்

PARISUTHA

1. அருள் நிறைந்தவர்
பூரண ரட்சகர் தேவரீரே,
ஜெபத்தைக் கேட்கவும்
பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும்
வல்லவரே.

2. சோரும் என் நெஞ்சுக்கு
பேரருள் பொழிந்து பெலன் கொடும்.
ஆ! எனக்காகவே
மரித்தீர் இயேசுவே@
என் அன்பின் ஸ்வாலையே
ஓங்கச் செய்யும்.

3. பூமியில் துக்கமும்
சஞ்சலம் கஸ்தியும் வருகினும்,
இரவில் ஒளியும்
சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும்
அளித்திடும்.

4. மரிக்கும் காலத்தில்
கலக்கம் நேரிடில், சகாயரே,
என்னைக் கைதூக்கவும்
ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
வருவீரே.

MAATCHIMAYAE THOZHUGIROM

மாட்சிமையே தொழுகிறோம்
மங்காத ஒளி விளக்கே - எங்கள்

எங்கள் மாட்சிமையே தொழுகிறோம்
கனத்திற்கு உரியவரே
உம்மையே ஆராதிப்பேன்

நல்லவரே, வல்லவரே
பரிசுத்தரே, படைத்தவரே
உயர்ந்தவரே, உன்னதரே
பரிகாரியே, பரிசுத்தரே
உந்தன் நாமத்திற்கே
மகிமை செலுத்துகிறோம்
மகிமையே மகிமையே
மாட்சிமை உமக்குத்தானே
துதியும் கனமும்
வல்லமை என்றென்றுமே

MAATTU THOZHUVIL KANTHAI POTHINTHU

மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்து
தேவ மைந்தன் உறங்குகின்றார்
ஆரிரோ பாடியே தூதர்கள் யாவரும்
மகிழ்வாய் சுதனை பணிந்தனரே

1. சத்திரம் தேடியே தந்தையும் தாயுமாய்
காடுமேடாய் ஓடி அலைந்தன்ரே
பிஞ்சு உருவம் மஞ்சம் கொள்ளவே
கொஞ்சம் இடமும் தருவாரில்லை

2. ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் உருவாய்
மரியின் மகனாய் பிறந்தனரே
ஏசு என்னும் ஓர் நாமத்திற்கிணையாய்
வேறோரு நாமம் இவ்வுலகில் இல்லை

3. பாவியாய் எம்பாவம் போக்கவே பாரினில்
பாலகன் இப்புவி வந்தனரே
மரித்து உயிர்த்து ஜெயித்த இரட்சகர்
ஏசுவே உம்பாதம் தஞ்சமென்போம்.

THOTHIRAM KIRUBAI KOOR IYYA

தோத்திரம்! கிருபை கூர், ஐயா! 
விழி பார் ஐயா, விழி பார், ஐயா!

1.பாத்திரம் இலா எனை நேத்திரம் 
என உச்சிதமாய்க் காத்து வந்திடும்,
எனது கர்த்தாதி கர்த்தனே

2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் 
யாவுமே என்றனை விட்டகலவே 
இரங்கிய தேவனே!

3.மனதிலும் வாக்கிலும் 
மட்டில்லாத பாவி நான்; 
எனது தகற்றி ஆளும், 
ஏகாம்பர நாதனே!

4.போதனே, நீதனே, புனித சத்ய 
வேதனே, கீதனே, தாசர்
துதி கேளும், யேசு நாதனே!

THODUM EN KANGALAIYE

தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே
தொடும் என் காதுகளை
உம் குரலை கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மைப்போல்
என்னை மாற்றுமே

தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழைப் பாட வேண்டுமே
தொடும் என் ஆன்மாவையே
என் பாவம் போக்க வேண்டுமே
இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே

தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆறவேண்டுமே
இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே
தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே
இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே