Thursday, August 27, 2015

JEEVIKKIRAR YESU JEEVIKKIRAR

1. ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்

2. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

3. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

JEBA SINTHAI ENIL THAARUM DEVA

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா - என்னை

அனுபல்லவி

அபயமென் றுனக் குக்கை
அளித்தேன் பொற்பாதா --- ஜெப

சரணங்கள்

1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச - உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச - பவ
தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச --- ஜெப

2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் - என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,
சடமுலகப் பேயை வெல்லும் - நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் --- ஜெப

3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய - தகா
நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
பேய்க்கண மோடுபோர் செய்ய - நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய --- ஜெப

JEBATHAI KETKUM YENGAL DEVA

1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

2. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர்

3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம்

4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கிவிடும்
சளைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்

jothi thondrum oor desamundu

1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம்பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்

2. அந்தவான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களை பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம் - இன்பராய்

3. நம்பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம் - இன்பராய்

4. அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம் - இன்பராய்

5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம் - இன்பராய்

6. அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் - இன்பராய்

7. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடி சூட்டுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும் - இன்பராய்

8. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் - இன்பராய்

9. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார் - இன்பராய்

THANTHEN ENNAI YESUVE

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே

அனுபல்லவி

உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் --- தந்தேன்

சரணங்கள்

1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து --- தந்தேன்

2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் --- தந்தேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் --- தந்தேன்

4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் --- தந்தேன்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் --- தந்தேன்

THAM KIRUBAI PERITHALLO

இன்னும் தேவை கிருபை தாருமே (2)

தம் கிருபை பெரிதல்லோ
என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுமே
இன்னும் தேவை கிருபை தாருமே (2)

தாழ்மை உள்ளவரிடம்
தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே (2)

இன்னும் தேவை கிருபை தாருமே (2)

THASARE ITHARANIYAI ANBAI

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

அனுபல்லவி

நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம் வீசுவோம்

சரணங்கள்

1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே --- தாசரே

2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே --- தாசரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே --- தாசரே

4. இந்து தேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட --- தாசரே

5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் --- தாசரே

THERI MUDHAL KIRUBASANANE SARANAM ;LYRICS

1. திரி முதல் கிருபாசனனே, சரணம்!
ஜெக தல ரட்சக தேவா, சரணம்!
தினம் அனுதினம் சரணம் - கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் - சருவேசா!

2. நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்
நம்பினேன் இது தருணம் - தருணம்
நம்பினேன், தினம் சரணம் - சருவேசா!

3. அருவுருவே, அருளரசே, சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!
அதிகுணனே தருணம் - கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் - சருவேசா!

4. உலகிட மேவிய உனதா, சரணம்
ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!
ஒளி அருள்வாய், தருணம் - மனுவோர்க்-கு
உத்தமனே, சரணம் - சருவேசா!

5. நித்திய தோத்திர நிமலா, சரணம்!
நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!
நாதா, இது தருணம் - கிருபைக்கொரு
ஆதாரா சரணம் - சருவேசா!

THIRUKARATHAL THANGI ENNAI LYRICS

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

2. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

3. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே பெரிய மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை

THIRUPPATHAM NAMBI VANTHEN

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

சரணங்கள்

1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்

2. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

3. மனம் மாற மாந்தன் நீரல்ல
மனவேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பலன் ஈந்திடுமே

5. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

6. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

THEEYA MANATHAI MAATRA VAARUM

தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே - கன
நேய ஆவியே

சரணங்கள்

1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் - மிக மாயும்
பாவி நான் --- தீய

2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே - மருள்
தீர்க்கும், தஞ்சமே --- தீய

3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா - ஒரு
பாவி நான் ஐயா --- தீய

4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே - தினம்
இதயம் அஞ்சவே --- தீய

5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே - அதைப்
புகழ்ந்து காக்கவே --- தீய

6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே - அவர்
கிருபை தேடவே --- தீய

7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே - மிகு
தெளிவு வேண்டவே --- தீய

8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே - மிக
சிறப்பாய் ஏற்றவே --- தீய

THEEYOR SOLVATHAI KELAAMAL

1. தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.

2. நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.

3. தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்,
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.

THEERATHA THAGATHAL EN ULLAM THOINTHATHE

1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,
ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே.

2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே;
நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே.

3. தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்,
மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.

4. உம் தூய ரத்தத்தால் எம் பாவம் போக்கினீர்,
உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.

5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்;
மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.

6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே;
என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.

THEEVINAI SEIYATHE MAA SOTHANAIYIL

1. தீவினை செய்யாதே மா சோதனையில்
பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

ஆற்றித் தேற்றியே காப்பார்
நித்தம் உதவி செய்வார்
மீட்பர் பெலனை ஈவார்
ஜெயம் தந்திடுவார்

2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும்
சேராமலே நீங்கி நல்வழியிலும்
நின் ஊக்கமும் அன்பும் சற்றேனும் விடாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

3. மெய் விசுவாசத்தாலே வென்றேகினோன்தான்
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான்
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

THUKKA BHARATHAL ILAITHU

1. துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்
வாராயோ?

2. அன்பின் ரூபகாரமாக‌
என்ன காண்பித்தார்?
அவர் பாதம் கை விலாவில்
காயம் பார்!

3. அவர் சிரசதின் கிரீடம்
செய்ததெதனால்?
ரத்தினம் பொன்னாலுமல்ல‌
முள்ளினால்!

4. கண்டுபிடித்தாண்டினாலும்
துன்பம் வருமே!
கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும்
இம்மையே.

5. அவரைப் பின்பற்றினோர்க்கு
துன்பம் மாறுமோ?
சாவின் கூரும் மாறிப்போகும்,
போதாதோ?

6. பாவியேனை ஏற்றுக்கொள்ள‌
மாட்டேன் என்பாரே!
விண், மண் ஒழிந்தாலும் உன்னை
தள்ளாரே!

7. போரில் வெற்றி சிறந்தோர்க்கு
கதியா ஈவார்?
தூதர், தீர்க்கர், தூயர், யாரும்
ஆம், என்பார்.

THUNGANIL OTHUNGUVON PANGAMINDRI THANGUVAN

துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான்

அனுபல்லவி

கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால் --- துங்கனில்

சரணங்கள்

1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே --- துங்கனில்

2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண் --- துங்கனில்

3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம் --- துங்கனில்

4. தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்,
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே --- துங்கனில்

5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே --- துங்கனில்

6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள் --- துங்கனில்

THUTHI GANAM MAGIMAIYUMAKKE

துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஓ ! நீரே ராஜாவே

துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே

THUTHI THANGIYA PARAMANDALA SUVISEDAGA NAAMAM

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்

1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் --- துதி

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் --- துதி

3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் --- துதி

4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் --- துதி

5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் --- துதி

6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் --- துதி

THUTHI MAGIMAI GANAM VALLAMAI

துதி மகிமை கனம் வல்லமை
அனாதி தேவனுக்கே
எல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும்
தேவனை பணிந்திடுமே

சகல நாவும் போற்றும் தேவா - வானம் பூமி
எங்கும் முழங்கால்கள் முடங்கிடுமே - பணிந்து
நீரே என்றும் உயர்ந்திடுவீர் - உம் ராஜ்யம்
என்றென்றும் நிலைத்திருக்கும்
அனாதி தேவா

THUTHITHU PAADIDA PAATHIRAME LYRICS

1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே
3. அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே
4. இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே
5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே

THUTHIPPEN YESUVIN PAATHAM THUTHIKKA

1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் --- துதி

2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை --- துதி

3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர் , அற்புதர் , அற்புதர் , அவர் நாமமே அதைத் --- துதி

4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே , ஜொலிப்பாரெ , ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் --- துதி

5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே , மகத்துவமே , மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் --- துதி

6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன் , மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் --- துதி

THUKKAM KONDADA VAARUME LYRICS

1. துக்கம் கொண்டாட வாருமே,
பாரும்! நம் மீட்பர் மரித்தார்
திகில் கலக்கம் கொள்ளுவோம்
இயேசு சிலுவையில் மாண்டார்.

2. போர் வீரர், யூதர் நிந்தித்தும்,
மா பொறுமையாய்ச் சகித்தார்
நாமோ புலம்பி அழுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

3. கை காலை ஆணி பீறிற்றே,
தவனத்தால் நா வறண்டார்;
கண் ரத்தத்தாலே மங்கிற்றே;
இயேசு சிலுவையில் மாண்டார்.

4. மும்மணி நேரம் மாந்தர்க்காய்,
தம் மெளனத்தாலே கெஞ்சினார்;
நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
இயேசு சிலுவையில் மாண்டார்.

5. சிலுவையண்டை வந்துசேர்,
நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

6. உருகும் நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும் தாரும், இயேசுவே;
மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
நீர் சிலுவையில் மாண்டீரே!