Thursday, November 14, 2019

DEVA JANAME VIRAINDHIDU

தேவ ஜனமே விரைந்திடு

1. மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படு
நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2

2. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்
அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்
தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2
நேசர் இயேசு அரசாங்கம்ää அமைந்திடுமே சீக்கிரம் – 2

3. காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலே
கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே
ஞாலமெல்லாம் மீட்கவேää இயேசு நாமம் கேட்கவே – 2
தீவிரமாய் செயல்படுவோம்ää தீங்குவோரை நேசிப்போம் – 2

4. பாரதத்தின் மாநிலம் எல்லாம் – பரமன் ஆட்சியாய்
பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய்
வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்-2
வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்

MEETTETUKKAPPATTA KUUTTAMAE

தேவ ஜனமே விரைந்திடு

1. மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படு
நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2

2. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்
அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்
தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2
நேசர் இயேசு அரசாங்கம்ää அமைந்திடுமே சீக்கிரம் – 2

3. காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலே
கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே
ஞாலமெல்லாம் மீட்கவேää இயேசு நாமம் கேட்கவே – 2
தீவிரமாய் செயல்படுவோம்ää தீங்குவோரை நேசிப்போம் – 2

4. பாரதத்தின் மாநிலம் எல்லாம் – பரமன் ஆட்சியாய்
பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய்
வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்-2
வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்

THEVA LOKA KAANAME THOOTHAR

தேன் மழை
தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!
வானிலெங்கும் கேட்குதே! தேன்மழை சங்கீதமே!

வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திட
வந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்! 

1. உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!
உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவ
மண்ணின் மீது அமைதி வந்தாள
மனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ!

2. இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!
கோமகன் வந்தார் தோரணை இல்லை!
மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!
இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை! 

3. இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தை
இறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தை
இயேசுவின் அருளால் இதயத்தில் தூய்மை
வென்றது வாய்மை தோன்றுது புதுமை

THENIKKALIN KOOTANGALE YENGA POREEGA

தேனீக்களின் கூட்டங்களே எங்க போறீங்க?
தேவ மகன் இயேசுவுக்காய் தேன் எடுக்கப் போறோமே
தேனீக்களே நில்லுங்களேன் நாங்களும் வாறோம்
தேவ மகன் இயேசுவோட நேசங்களே நாங்கள்
லல லல லல லல லலா (2)

தேவாதி தேவனை தேடி வந்த நாதனை
ஆடியே பாடியே துதிப்போõம்
ராஜாதி ராஜனை ஆள வந்த ரோஜாவை
ஆடியே ஆடியே துதிப்போம்

சின்னஞ் சிட்டுக் குருவிகளே எங்கே போறீங்க?
செல்ல இயேசு பிறந்துள்ளார் பார்க்கப் போறோமே
சின்னஞ் சிட்டுக் குருவிகளே நாங்களும் வாறோம்
செல்ல இயேசு பாலனோட செல்லங்களே நாங்கள்
லல லல லல லல லலா (2)

சின்ன ஆட்டுக் குட்டிகளே எங்கே போறீங்க?
நல்ல மேய்ப்பன் இயேசுவோட நட்பைத் தேடி போறோமே
சின்ன ஆட்டுக் குட்டிகளே நாங்களும் வாறோம்
நல்ல மேய்ப்பன் இயேசுவோட கண்மணிகள் நாங்கள்
லல லல லல லல லலா (2)

வண்ணக்குயில் கூட்டங்களே எங்கே போறீங்க?
வந்திருக்கும் இயேசுவுக்காய் பாட்டுப்பாட போறோமே
வண்ணக் குயில் கூட்டங்களே நாங்களும் வாறோம்
தங்க இயேசு பாலனோடு தங்கிடுவோம் நாங்கள்
லல லல லல லல லலா (2) தேவாதி

DEVANIN AALAYAM THUTHIGALIN AALAYAM

தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்
மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்
நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம்


1. கண்கள் காண்பது செவ்வையான பார்வையா
எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா
கைகள் செய்வது சுத்தமான செயலா
கால்கள் போவது சரியான இடத்திற்கா
நாவு பேசுவது சமாதான வார்த்தையா
சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா


2. தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு
ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு
பரிசுத்த பரிசாய் பரனுக்கு படைத்திடு
குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு காண்பித்திடு
சுயத்தை வெறுத்து சிலுவையை சுமந்திடு
சரீரமென்பதை ஆலயமாக்கிடு

DEVA KUMARA DEVA KUMARA

தேவ குமாரா தேவ குமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவ குமாரா தேவ குமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான் 


உடைந்த பாத்திரம் நான்
அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர்
இது யாருக்கு புரியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே 


உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
அது உமக்கே தெரியும்
உம்மை மறுதலித்தவன் நான்
இதை உலகே அறியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே
நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே
நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே 


தேவ குமாரா தேவ குமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவ குமாரா தேவ குமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான் 

DEVA AAVIYE YENGAL THOOYA

தேவ ஆவியே!
எங்கள் தூய ஆவியே!- 2
உமது வல்லமையால் எங்களை நிரப்புமே!
உமது வல்லமையே இன்றே நிரப்புமே! – தேவ

1. துக்கத்தை மாற்றியே – ஆனந்த
தைலத்தால் நிரப்புமே!
தாகத்தை தீர்த்திடும்
ஜீவ தண்ணீரும் நீரே!-2 – தேவ

2. அனலாக ஜொலித்திட
உந்தன் அபிஷேகம் ஊற்றுமே -2
எழும்பிப் பிரகாசிக்க
புதிய எண்ணெயால் நிரப்புமே – 2 – தேவ

3. உலகத்தின் சாட்சியாய் எந்தன்
உயிருள்ள நாளெல்லாம் -2
உமக்காய் வாழ்ந்திட
உம் பெலனால் நிரப்புமே -2 – தேவ

THUTHIYIN DEVANE THUTHIKKU

துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்
துதிக்கணும் உம்மை துதிக்கணும்
உள்ளம் ஏங்குதே -துதிக்க விருப்பமே
துதியின் ஆவியால் நிரப்புமே என்னை
நிரப்புமே நிரப்புமே ஐயா

ஆலோசனைக் கர்த்தரே
அற்புதத்தின் தேவனே -ஆறுதலின்
தைலமே ஆரோக்யம் அளிப்பீரே

அநாதி தேவன் நீரே -ஆபத்து
நேரத்திலே அடைக்கலமானீரே
ஆதாரம் என்றென்றுமே

THOOIMAI PERA NAADU KARTHAR PATHAME

1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே
நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;
கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,
யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்.

2. தூய்மை பெற நாடு; லோகத்தில் கோஷ்டத்தில் 
தனித்திரு நாளும் அவர் பாதத்தில் 
யேசுவைப் போலாவாய், நோக்கின் அவரை 
பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.

3. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த,
என்ன நேரிட்டாலும், அவர்பின் செல்ல;
இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை,
நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை.

4. தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து, 
சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு, 
அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க, 
முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.

THUYARURRA VAENTHARAE SILUVAI AASANARE

1. துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே,
எண்ணிறந்த துனபம் நீர்
மௌனமாக சகித்தீர்.

2. பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.

3. தெய்வ ஏசு மைந்தனார்,
அபிஷேக நாதனார்
“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?”
என்றுரைக்கும் என் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்

JILLENA KULIR KAATTRU VEESUM NERAMADHU

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது 
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது 
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது 
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 

1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் 
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே 
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே 
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2 

மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே 
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2 

2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே 
மா ஜோதி மானிடரானார் 
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த 
அவர் அன்பிற்கு இணையில்லையே-2 

நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே 
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2 

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது 
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது 
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது 
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2

SER AIYAA ELIYAEN SEI PAVAVINAI

சேர், ஐயா; எளியேன் செய் பவவினை
தீர், ஐயா.

1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச் 

2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர
தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச் 

3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை
வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச்

4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினை யே; – எனைச்

5. பாவம் மா சிவப்பாயினும், – அதை
பஞ்செனச் செய்வேன், என்றனையே; – எனைச்

6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த – யேசு
தேவனே, கருணாகரனே – எனைச்

SUTHTHA IRUDHAYATHAI SIRUSHTIYUME

சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே 
செத்த மனிதனை உயிர்ப்பியுமே 
சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே 
சீக்கிரம் வந்து என்னை தப்புவியுமே 

பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும் 
அக்கிரமம் நீங்க என்னை கழுவிவிடும் 
மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேன் 
கண்முன்னே பொல்லாங்கினை நடத்திவிட்டேன்
உம்முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன் 

உள்ளத்தில் உண்மைதனை விரும்புகிறீர்
ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர் 
சுத்திகரித்திடும் குற்றம் எரித்திடும் 
வெண்மழைபோல என்னை வெண்மையாக்கிடும் 
கன்மலை நீரென்னை நல்தன்மையாக்கிடும் 

நல் இதயத்தை என்னில் சிருஷ்டியுமே 
உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே 
பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்
ரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர்
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்குவீர் 

வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்
கட்டுண்ட பாவிதனை தேற்றிச்செல்கிறீர் 
பாவப்பழிகளை நீக்கிடும் ஐயனே 
பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே
கெம்பீரித்தும்மை பாடி போற்றிடுவேனே 

SAANTHA IYAESU SVAAMEE

1.சாந்த இயேசு ஸ்வாமீ, 
வந்திந்நேரமும்,
எங்கள் நெஞ்சை உந்தன்
ஈவால் நிரப்பும்.

2.வானம், பூமி, ஆழி 
உந்தன் மாட்சிமை
ராஜரீகத்தையும் 
கொள்ள ஏலாதே. 

3.ஆனால், பாலர் போன்ற 
ஏழை நெஞ்சத்தார்
மாட்சி பெற்ற உம்மை 
ஏற்கப் பெறுவார். 

4.விண்ணின் ஆசீர்வாதம் 
மண்ணில் தாசர்க்கே
ஈயும் உம்மை நாங்கள் 
போற்றல் எவ்வாறே? 

5.அன்பு, தெய்வ பயம் 
நல் வரங்களும்,
சாமட்டும் நிலைக்க 
ஈயும் அருளும்.