Friday, August 28, 2015

SAMATHANAM OOTHUM YESUKRISTHU

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

சரணங்கள்

1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
அனுகூலர் இவர், மனுவேலர் இவர் --- சமாதானம்

2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர் --- சமாதானம்

3. ஆதி நரர் செய்த தீதறவே,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் --- சமாதானம்

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே --- சமாதானம்

5. மெய்யாகவே மே சியாவுமே,
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே --- சமாதானம்

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே --- சமாதானம்

SATCHIGAL YESUVIN SATCHIGAL

சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்
சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள்
1. பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள்
உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள்
எருசலேமில் சாட்சிகள்
யூதேயாவில் சாட்சிகள்
சமாரியாவில் சாட்சிகள்
உலகமெங்கும் சாட்சிகள்
2. இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள்
கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் --- எருசலேமில்

3. தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள்
துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் --- எருசலேமில்

EN ATHUMA NESA MEIPPARE

1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்
தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் --- பேசும்

3. பாவிகட்கு உமது அன்பை
என் நடையார் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும் --- பேசும்

4. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் --- பேசும்

SAALEMIN RAASA SANGAIYIN RAASA

1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் - இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் --- சாலேமின்

2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே - இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? --- சாலேமின்

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே - நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே --- சாலேமின்

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே - இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே --- சாலேமின்

5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே - உந்தச்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே --- சாலேமின்

KOODI MEETPER NAAMATHIL

1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்

ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!

2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார் --- ஆ! இன்ப

3. சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார் --- ஆ! இன்ப

4. வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன் --- ஆ! இன்ப

CHINNA CHITTU KURUVIYE

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே - உன்னை
அழகாக படைச்சது யாரு

ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) - உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா
ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா - அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்
ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே

KANNITHAI MARIYAL VARAVETRAL

கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்
சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்
ஆவியினால் ஆண்டவனை
அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்
மண்ணுலகம் வியந்து கொண்டாடும்
மனங்களில் அமைதி வென்றாளும்
மனிதரில் பாசம் உண்டாகும்

1. கிருபையினால் மா தேவன் - இரக்கம்
பெற்றாள் பணிந்ததினால்
மகிமையின் கர்த்தனிடம்
வலிமையின் தேவனிடம்
பலவான்கள் தலைகுனியும் - இனி
கனவான்கள் கைவிரியும்

2. தெய்வத்தின் நல் விருப்பம் - என்றும்
தெய்வமகன் விரும்பும் அப்பம்
ஜீவனின் அதிபதிதான்
ஜீவனைக் கொடுக்க வந்தார்
பாவத்தைத் தொலைக்க வந்தார் - வல்ல
சாத்தானை ஜெயிக்க வந்தார்

3. மானுட அவதாரம் - ஒன்றே
ஆண்டவரின் திரு விருப்பம்
தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்
பசித்தவர் விருந்துண்பார்
புதியதோர் சமுதாயம் - இனி
மலர்ந்திடும் அவனியெங்கும்

SAARONIN ROJAVE PALLATHAKKIN LILIYE

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உள்ளத்தின் நேசமே
இயேசு என் பிரியமே

சரணங்கள்

1. ஆத்தும நேசரே
உம் நேசம் இன்பமே
பூரண ரூபமே
பழுதொன்றும் இல்லையே --- சாரோனின்

2. வருவேன் என்றுரைத்தவர்
சீக்கிரம் வருகிறார்
வாக்கு மாறாதவர்
தாமதம் செய்யாரே --- சாரோனின்

SILUVAI THIRU SILUVAI

சிலுவை திரு சிலுவை
சிலுவையின் இனிய மறைவினில் மறைத்து
கருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய

1. பரியாசம் பசி தாகமடைந்து
படுகாயம் கடும் வேதனை அடைந்து
பாவமறியா பரிசுத்தர் இயேசு (2)
பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும்

2. கைகள் கால்களில் ஆணி கடாவ
கடும் முள் முடி பின்னி தலையிலே சூட
நான்கு காயங்கள் போதாதென்று (2)
நடு விலாவையும் பிளந்திட செய்த

3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்க
இரத்தத்தால் பாவ கறைகள் நீக்க
உந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)
சாபத்தினின்று நீ விடுதலையடைய

4. லோக சிற்றின்ப பாதையை நோடி
மாளும் பாவியை சிலுவையில் தேடி
சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து (2)
அன்பினை ஈக்க ஐங்காயமான

NANDRI SOLLIDA VENDUM

நன்றி சொல்லிட வேண்டும்
இயேசு அப்பாவுக்கு நன்றி சொல்லிட வேண்டும்
நன்மை செய்ததினாலே (2)
நன்றி சொல்லிட வேண்டும்
இயேசு அப்பாவுக்கு நன்றி சொல்லிட வேண்டும்

உண்மை பேசிட வேண்டும் உயர்வை அடைவதற்கு
உதவி செய்திட வேண்டும் தினம் கஷ்டப்படுபவர்க்கு
அன்பு செலுத்திட வேண்டும் என்றும் அயலவர்க்கு
நன்மை செய்திட வேண்டும் ஏழை எளியவர்க்கு

தூய்மை நீ அடைய வேண்டும் தூய வாழ்விற்கு
தீமை அகற்ற வேண்டும் திருந்தி வாழ்வதற்கு
மாசு நீக்கிட வேண்டும் நல்லவராவதற்கு
நெஞ்சில் இயேசு இல்லையென்றால் வாழ்வு என்னத்திற்கு

DEVA LOGA GAANAME THOOTHAR MEETIYA RAAGAME

தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!
வானிலெங்கும் கேட்குதே! தேன் மழை சங்கீதமே!

வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திட
வந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

1. உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!
உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவ
மண்ணின் மீது அமைதி வந்தாள
மனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ!

2. இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!
கோமகன் வந்தார் தோரணை இல்லை!
மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!
இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை!

3. இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தை
இறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தை
இயேசுவின் அருளால் இதயத்தில் தூய்மை
வென்றது வாய்மை தோன்றுது புதுமை

SILUVAIYANDAYIL NAMBI VANDHU NIRKAYIL

1. நான் உம்மைப் பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில்
நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் என துள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3. மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4. நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

KATTADAM KATTIDUM SIRPIGAL NAAM

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்

சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல

1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார் --- கட்டடம்

2. கைவினை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய் --- கட்டடம்

3. பாவமா மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார் --- கட்டடம்

AALTHA SETRINIL AGAPATTA NAMMAI ANAITHU

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரே
இயேசு அணைத்து எடுத்தாரே
அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு
ஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல் அளிப்பாரே

பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி
கோபத்தை கலைத்தாரே இயேசு கோபத்தை கலைத்தாரே
காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும் ஆகமம் ஆனாரே
இயேசு ஆகமம் ஆனாரே

கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
கட்டுகள் அறுத்தாரே இயேசு கட்டுகள் அறுத்தாரே
கல்வாரி பாதையில் பார சிலுவையை நொந்து சுமந்தாரே
இயேசு நமக்கென பிறந்தாரே

பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை அகன்றிடுமே
பாலகன் இயேசுவின் நாமத்தினில் ஜெபித்தால்
பாசம் வளர்ந்திடுமே நல்ல பாசம் பாசம் வளர்ந்திடுமே

SEERESU BAALAN JEYAMANU VELAN

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே

அனுபல்லவி

பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,
தாராள மாகத் தாமே மனுவான --- சீரேசு

சரணங்கள்

1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக
மண்ணி லேகின மாட்சிமை யாலே,
விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற
வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? --- சீரேசு

2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை
இந்நிலத்தினில் எழில்சமா தானம்,
மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க
தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? --- சீரேசு

3. பாவப் பிணியாலே பாதகரைப் போலே
சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே,
கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க
தீபமாய் வந்த தேவமைந்தனான --- சீரேசு

4. நித்தனே, என் பாவம் எத்தனையானாலும்
சித்தம் உருகிச் சீர்கூற வேணும்,
அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்;
பத்தியாய் உன்னைப் பகருவேன் எப்போதும் --- சீரேசு

SEER YESU NAADHANUKKU JEYAMANGALAM

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் - ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்

அனுபல்லவி

பாரேறு நீதனுக்கு , பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு --- சீர்

சரணங்கள்

1. ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்
நீதி பரன் பாலனுக்கு , நித்திய குணாலனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு , உயர் மனுவேலனுக்கு --- சீர்

2. மானாபி மானனுக்கு , வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னிமரிசேயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு --- சீர்

3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு,
பத்தர் உப காரனுக்குப் பரம குமாரனுக்கு --- சீர்

SEERTHIRIYEGA VASTHE NAMO NAMO

சீர்திரியேக வஸ்தே, நமோ நமோ, நின்
திருவடிக்கு நமஸ்தே, நமோ நமோ!

அனுபல்லவி

பார்படைத்தாளும் நாதா,
பரம சற்பிரசாதா,
நாருறுந தூயவேதா, நமோ நமோ நமோ! --- சீர்

சரணங்கள்

1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்
தாங்கி ஆதரிப்போனே - நமோ நமோ!
சொந்தக் குமாரன் தந்தாய்,
சொல்லரும் நலமீந்தாய்,
எந்தவிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ --- சீர்

2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ!
எங்கும் நின் அரசேற,
எவரும் நின் புகழ்கூற,
துங்க மந்தையிற் சேர, நமோ நமோ நமோ --- சீர்

3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ, திட
பலமளித் தெமைக்காவா, நமோ நமோ!
கரிசித்துத்தா நற்புத்தி,
கபடற்ற மனசுத்தி,
திருமொழி பற்றும்பக்தி, நமோ நமோ நமோ --- சீர்

SUTHA AAVI YENNIL THANGUM NAANUM SUTHAN AAGAVE

1. சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;
பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும்.

2. சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;
தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே;
நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும்.

3. நேச ஆவீ , என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;
துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும்.

4. வல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே,
சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும்.

5. நல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே;
பகை, மேட்டிமை , விரோதம், மாற்றும் தீமை யாவுமே
என்னை விட்டகற்றுமேன், என்னைச் சீர்ப்படுத்துமேன்.

6. தெய்வ ஆவீ, என்னில் தங்கும், நானும் உம்மில் தங்கவே;
மோட்ச பாதையில் நடத்தும், இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்; என்னை முற்றும் ரட்சியும்

SUNDHARA PARAMA DEVA MAINTHAN YESU KRISTHUVUKKU

சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத்
தோத்திரம், புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !

அனுபல்லவி

அந்தரம் புவியும் தந்து , சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார், நமை ஒன்றாய் கூட்டினார், அருள் முடி
சூட்டினார், கிருபையால் தேற்றினாரே, துதி --- சுந்தர

சரணங்கள்

1. பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் - பவத்துயர்
போடுங்கள் - ஜெயத்தைக் கொண்
டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள், பாடுங்கள் என்றும் --- சுந்தர

2. விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்
டாடிட - அவர் பதம்
தேடிட - வெகு திரள்
கூடிடத் துதிபுகழ் பாடிடப் பாடிட என்றும் --- சுந்தர

3. சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே,
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே,
உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,
உயர்ந்து - வாழ, தீயோன்
பயந்து - தாழ, மிக
நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான், நயந்தான் என்றும் --- சுந்தர

SUYA ATHIKAARAA SUNTHARAKKUMARAA

சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான --- சுய

சரணங்கள்

1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே
துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே
ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த --- சுய

2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ
கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ
திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் --- சுய

3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர்
வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த --- சுய

4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே
பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே
சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய் --- சுய

SER IYYA ELIYEN SEI PAVAVINAI

சேர், ஐயா; எளியேன் செய் பவவினை
தீர், ஐயா.

சரணங்கள்

1. பார், ஐயா, உன் பதமே கதி; - ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி, - எனைச்

2. தீதினை உணர்ந்த சோரனைப் - பர
தீசிலே அன்று சேர்க்கலையோ? - எனைச்

3. மாசிலா கிறிஸ் தேசுபரா, - உனை
வந்தடைந்தனன், தஞ்சம், என்றே - எனைச்

4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் - தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினை யே; - எனைச்

5. பாவம் மா சிவப்பாயினும், - அதை
பஞ்செனச் செய்வேன், என்றனையே; - எனைச்

6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த - யேசு
தேவனே, கருணாகரனே - எனைச்

SETRILIRUNTHU THOOKINAR KANMALAI

சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலை மேல் நிறுத்தினார்
பாவமான வாழ்கையை மாற்றி தந்தாரே
துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே

அவர் எந்தன் கன்மலை (2)
அவர் எந்தன் கன்மலையானார்

SOLLARUM MEIGHANARE MENMAIPRABUVE

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே - உரை

அனுபல்லவி

வல்லறஞ் சிறந்து மனுவானாரே - உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே - உரை --- சொல்

சரணங்கள்

1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி - மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே - அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே - உரை --- சொல்

2. அச்சய சவுந்தர அசரீரி - அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா - ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா - உரை --- சொல்

3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே - உயர்
தேவ சபையில் எமைச் சேர்த்தாரே
செல்லமாய் முகம் பார்த்தாரே - பெரும்
செல்வம் போல் எமைச் சேர்த்தாரே - உரை --- சொல்

jaganaatha gurubaranaatha thiru

ஜகநாதா, குருபரநாதா, திரு
அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!

அனுபல்லவி

திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,
தீதறும் வேத போதா! --- ஜகநாதா

சரணங்கள்

1. முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர
மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?
நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,
நரதேவனாக வந்தாய் மொழியாலோ? --- ஜகநாதா

2. எளிய கோலம் தரித்தே இங் கவதிரித்தாலும்,
இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே,
ஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி
உடு வழி காட்டிடப் புரிந்தாயே --- ஜகநாதா

3. அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,
ஆலயத்தில் துதிக்க களித்தாயே,
வரும் தவ மதியால் முன் மற மன்னன் தேடிட, உன்
மலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே --- ஜகநாதா

4. மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,
மதுரபரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
சிக் கடர் துன் மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தை
திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே --- ஜகநாதா

5. தனையர் வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட
தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு
மேவி அனுபவிக்க நேர்ந்தாயே --- ஜகநாதா

6. அமரர் முற்றும் அறியார், அடிகள் சற்றும் அறியார்,
ஆர் உன் திறல் அறிவார், கர்த்தாவே?
எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,
எமைப் புரந்தாளும், மானப் பர்த்தாவே --- ஜகநாதா

jeevanulla devane vaarum jeeva

1. ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவத்தண்ணீர் ஊறும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும்

இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்

2. பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ

3. ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர்

4. வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

5. நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே
மாய லோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டீரோ?