Friday, November 1, 2019

VAIKARAIYIL UMAKKAGA VAZHIMEL

வைகரையில் (காலை நேரம்) உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்

1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்
குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில்

2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கு நீர்தானய்யா

3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
என்இதயம் பூரித்து துள்ளுகின்றது
என்உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

4. உம் கிருபையால் காலைதோறும் திருப்தியாக்கும்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

VINNAGA KATRE NEER ENNAI

விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும்

ஜலத்தின் மேல் அசைவாடிய
தூயதேவா ஆவியே
பெலத்தின் மேல் பெலனடைய
என்மேல் அசைவாடுமே

அக்கினி அபிஷேகம் இன்று
வேண்டும் தெய்வமே
எந்நாளுமே என் பாத்ரம்
நிரம்பி வழிய வேண்டுமே

அக்கினி ரதத்தின் மேல்
என்னைக் கொண்டு செல்லுமே
பரலோகத் தூதருடன்
ஆராதிக்கச் செய்யுமே

முழங்காலை முடக்கியது
முரங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழத்துச் செல்லும் என்னையே

மறுரூப அனுபவம்
எனக்கு வேண்டும் தெய்வமே
மறுரூப மலைதனிலே
அழைத்துச் செல்லும் என்னையே

MAANUVEL THONDARE AARPARITHU

மானுவேல் தொண்டரே - ஆர்ப்பரிந்து
மகிழ்ந்து பூரிப்போம்

மானிலமீது சமாதானமா மென்ற
வானவர் வாழ்த்துவறா தெனநம்பும்
நானிலமெங்கும் சகோதர ஐக்கியம்
நண்ணும் பகலருணோதயம் ஆகுதே
நாடுவோம் - அதைத் தேடுவோம் - இனி
நாமுமுயற்சி கையாடுவோம் பாடுவோம்

தீர்க்க ருரைப்படியே - உலகெங்கும்
தீங்கீலாக் காலம் வரும்
தாக்கும் படைக்கலங்கள் - கிருஷிகச்
சாதனமாகி விடும்
மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய்
மன்னன் யேசுவுக்கு ளன்றான தோழராய்
வாக்குவாதங்கள் வழக்குகள் யுத்தங்கள்
நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்
நிலைத்து - அன்பு - வளர்த்துக் - கரங்
கொடுத்து - உற - வடுத்துமதிப்பர்

போன காலங்களிலே - நடந்திட்ட
பொல்லாங்கும் பாடுகளும்
ஈனத் துரோகங்களும் - விளைவித்த
ஈங்கிசை போதும் இனி
வானபரனின் மலரடிக் கண்ணுற்று
வல்ல பரிசுத்த் அன்பினாவி பெற்று
மானுவேலே சையர் நாமமே முன்னிட்டு
மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று
மாட்சியாய் - அவர் - சாட்சியாய் - இந்த
மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே

சர்வ ஜனநேசம் - நிறைவுறத்
தாமதமானாலும்
கர்வம் பொறாமை பகை - தடை செய்யக்
காலம் நீடித்தாலும்,
அருள் நம்பிக்கை கொண்டற்ப மெனு நம்மால்
ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே
இருளகல விடிவெள்ளி தோணுது
எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்
யேசுவே - இக - மாசுடர் - அவர்
நேசமே - புவித் - தோஷமகற்றிடும்

MAARANAATHAA YESU NAATHAA

மாரநாதா… இயேசு நாதா 
சீக்கிரம் வாரும் ஐயா 
வாரும் நாதா இயேசு நாதா (2) 

1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே 
விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே 

2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன் 
சண்டைகள் பொறாமைகள் என்றோ வெறுத்து விட்டேன் – நான் 

3. பெருமைபாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா 
சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா 

4. நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன் 
நித்திய கிரீடம்தனை நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன் 

5. ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன் 
அப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிடுவேன் 

6. உம்முகம் பார்க்கணுமே உம் அருகில் இருக்கணுமே 
உம்பாதம் அமரணுமே உம்குரல் கேட்கணுமே