Tuesday, November 26, 2019

KAL MITHIKUM DESAM ELLAM

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்
கர்த்தருக்கு சொந்தமாகும்
கண்பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடிபறக்கும்

1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா

2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று

3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை

4. திறக்கட்டும் திறக்கட்டும்
சவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள்

KAANIKKAI THARUVAAYAE

காணிக்கை தருவாயே கர்த்தற்குனது
காணிகை தருவாயே
காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால்
பத்தில் ஒரு பங்குதானோ பத்தினில் கட்டுப்
பட்ட யூதருக் கல்லவோ
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்
பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ
உன்றன் உடல் உன் சொந்தமோ அதைவிடினும்
உன் மனம் ஆவி பந்தமோ
அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
உன்னையும் உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்
தேவ வசனம் பரப்ப அதனுக்கென்று
செல்லும் செலவை நிரப்ப
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே
பயிர் பலன் மூலமாகவும் இன்னும் பலர்க்குப்
பணம் முதலானதாகவும்
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில்

KARAM PIDITHU VAZHI

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதிபாடி போற்றுவோம்
ஆமென் அல்லேலூயா

பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்

நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வைத் தொடருவார்

எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்

KARTHARAI NAMBINOR PERUPETROR

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
சீயோன் மலைபோல் உறுதியுடன்
அசையாமல் இருப்பார்கள்

எருசலேம் நகரம் மலைகளால்
எப்போதும் சூழ்ந்து இருப்பது போல்
இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை
சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்

வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு
கனிதரும் மரமாய் வளர்வார்கள்
கோடை காலத்தில் பயமில்லை
வறட்சி வந்தாலும் கவலையில்லை

மனைவி கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
இடைவிடாமல் ஜெபிப்பார்கள்

கர்த்தரை நேசித்து அவர் வழிய்ல்
நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்
உழைப்பின் பயனை உண்பார்கள்
நன்மையும் நலமும் பெறுவார்கள்

THAVITHAI POLA NADANAMADI

தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்திரப்பேன்

இயேசப்பா ஸ்தோத்திரம்

கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்திரப்பேன்

பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்திரப்பேன்

ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்திரப்பேன்

கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்திரப்பேன்

KARTHTHARIN SATHTHAM VALLAMAIYULLATHU

தற்பரன் முழக்கம்
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

1. பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதா குமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக
2. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார்

3. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
இராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
இராஜரீகமெங்கும் ஜொலிக்கும்

4.பெண்மான்கள் ஈனும்படி
பலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமீந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார்

THALARNTHU PONE KAIHALAI

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்

உறுதியற்ற உள்ளங்களே திடன்
கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்
அநீதிக்குப் பழிவாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்

அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்

அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூயவழி தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்
கடந்து செல்வதில்லை மீட்கப்பட்டோர்
அதன் வழியாய் நடந்து செல்வார்கள்

ஆண்டவரால் மீட்கப்பட்டோர்
மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலைமேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்

பார்வையற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள் போல
துள்ளிக் குதிப்பார்கள் ஊமையர்கள்
பாடிப் பாடி மகிழ்ந்திருப்பார்கள்

THAM KIRUBAI PERITHALLO

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ் நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே

நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே

தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே

மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே

ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே

கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மை சந்திக்கவே
இரக்கமாய் கிருபை தாருமே

JEBAM SEIDHIDUVOM KANNEER

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் ஷேமத்திற்காய்
ஜெபிப்போம் செயல் படுவோம்
ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்
அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்
இடைவிடாமல் எப்பொழுதுமே – ஜெபம்

1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன
ஜெபத்தினால் ஜெபத்தினால்
ஜெபிப்போம் கொடுப்போம் 
விரைந்து செயல்படுவோம் — ஜெபம்

2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?
நம்மில் யார் யார் யாரோ?
திறப்பிலே யார், யார் யாரோ? — ஜெபம்

3. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்
மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்
ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே
கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்
கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் — ஜெபம்

4. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்
கிருபையின்மேல் கிருபை பெருகிடும்
ஜெபத்தினால் ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போம் (2) — ஜெபம்

JEEVA APPAME JEEVADHIPADHIYAE

ஜீவ அப்பமே, ஜீவதிபதியே 
ஜீவனின் பெலனே -2
ருசிப்போம், புசிப்போம், மகிழ்வோம்
நீர் நல்லவர், வல்லவரே -2

மன்னாதி மன்னவனே, பரலோக மன்னாவே - 2
மனதின் மகிழ்ச்சியே எந்தன் 
வாழ்வின் புகழ்ச்சியே -2

1. அன்பது இனிமை, பாசமே புதுமை 
பெருகுதே பேரின்பமே ,
பேதயர்க்கு என்றுமே -2
பேருலகில் யாவுமே, வீணாக தோன்றிடுதே 
பரலோகத்தின் பேரின்பத்தை, ருசிப்பெனே என்றுமே -2 

2. தூதரின் உணவை உம் ஜனத்துக்கு கொடுத்தீர் 
கன்மலை நீரூற்றினால், தாகத்தை தீர்த்துவிட்டீர் -2
காடைகளைக் குவித்தீர், ஏராளமாய் கொடுத்தீர்
பாதைஎல்லாம் பாலும், தேனும் பாய்ந்திட செய்திட்டீரே -2

3. ஜீவனை ஊற்றினீர், ரத்தத்தை சிந்தினீர் 
எனக்குள்ளே வாழ்ந்திடவே, ஒன்றறக் கலந்துவிட்டீர் -2
ஆலயமாக்கினீர், உள்ளத்தில் வாழ்கின்றீர்
வாக்கடங்கா பெருமூச்சோடேபரிந்து பேசுகின்றீர் -2

4.. சீக்கிரம் வாருமே, வாஞ்சைகள் தீருமே
ஜீவனின் ஊற்றண்டையில், ஜீவகனி புசிப்பேன் -2
ஜீவனில் பெருகியே, பூரனமடைந்திடுவேன்
பொன்முகத்தின் சாயலினால் மருரூபமடைவேனே -2 

SILUVAIYIN NILALIL ANUTHINAM ADIYAN

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் 

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் – ஆ! ஆ!
சிலுவை அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்

1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ!
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்

2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
தேனிலு மினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் – ஆ! ஆ!
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக்கொண்டால்
அலைமிக மோதிடு மந்நாள்
ஆறுதல் அளிப்பாரே சொன்னால்

SARVA ANGA THAGANAPALI

சர்வ அங்க தகனபலி
எங்கள் சர்வ வல்ல தேவனுக்கு
உதடுகளின் ஸ்தோத்திர பலி
எங்கள் உன்னத நல் ராஜனுக்கு

ஸ்தோத்திர பலி
நான் செலுத்தும் பலி

அசைவாட்டும் ஜீவபலி - எங்கள்
அசைவாடும் தேவனுக்கு
பிசைந்த மாவின் ஓர் மெல்லிய பலி
எங்கள் மெல்லிய நல் ராஜனுக்கு

சமாதான ஜீவபலி - எங்கள்
சமாதான தேவனுக்கே
இடித்து பிழிந்த திராட்சை ரசத்தின் பலி
என்னை நடத்திடும் தேவனுக்கு

என் கைகளின் காணிக்கை பலி
என்னை வாழ வைக்கும் தேவனுக்கு
என் ஆவி ஆத்ம சரீர பலி
என்னை ஆளுகின்ற தேவனுக்கு