Sunday, April 13, 2025

Vaazhthugirom Vanangukirom வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

 வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

போற்றுகிறோம் தேவா … ஆ … ஆ … ஆ …

இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கிவிட்டீர்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா

ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர்
மறுபடி பிறக்கச் செய்தீர் – என்னை

உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா

உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா

அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனைக் கர்த்தரே – என்றும்

உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

Vidudhalai Thaarumae Enn Aandava விடுதலை தாருமே என் ஆண்டவா

 விடுதலை தாருமே என் ஆண்டவா

வினை தீர்க்கும் விண்ணரசா

நித்தம் நித்தம் கண்ணீரினால்
நித்திரையை தொலைத்தேனைய்யா
நிந்தை தீர்க்க வாருமைய்யா

ஆறுதலின் தெய்வம் நீரே
தேற்றுவீரே உம் வார்த்தையால்
ஜீவ வார்த்தை நீரல்லவோ

யாரும் இல்லை காப்பாற்றிட
தோளில் சாய்த்து எனை தேற்றிட
நிலை மாற்ற வாருமைய்யா

Vinin Venthar Yesu Devan விண்ணின் வேந்தர் இயேசு தேவன்

 விண்ணின் வேந்தர் இயேசு தேவன்

மண்ணில் ஏழ்மை கோலம் கொண்டார்
மனித பாவம் நீங்கிடவே இயேசு
புனித பாலகனாய் பிறந்தார்

மண்ணின் மாந்தர் மகிழ்ந்திடவே
விண்ணின் தூதர் வியந்திடவே
மகிமையின் தேவன் மனிதனார்
மழலை உருவில் புவியில் வந்தார்

இருக்கின்றவராய் இருக்கிறவர்
பிறக்கின்றவராய் பிறந்து வந்தார்
மறுப்பவர் மறப்பவர் மனதில் எல்லாம்
மகிழ்ச்சியை அளித்திடும் மழலையானார்

பரலோகமதிலே நம்மை சேர்க்க
பாவ உலகில் இயேசு பிறந்தார்
ஆதியில் மனிதனை உயிர்ப்பிக்கவே
மாம்சத்தில் தேவன் வெளிப்பட்டாரே

Vinnaga Thalaivanukku விண்ணகத் தலைவனுக்கு

 விண்ணகத் தலைவனுக்கு

மண்ணிணில் ஆராதனை
விண்ணிலும் ஆராதனை

மண்ணினில் மனுஷனை உருவமைத்து
ஜீவ சுவாசம் ஊதிவிட்டு
தனிமையில் இருந்த மனுஷனை நினைத்து
ஏற்றதுணை கொடுத்து மகிழ்ந்தவரை

ஏதேனில் தொடங்கிய பாவத்தினை
கொல்கொதா மலையில் முடித்துவைத்து
தூய இரத்தம் சிந்தி மீட்டவர்கள்
சீயோனில் பாடி மகிழவைத்த

மீண்டுமாய் வருவேன் என்றுரைத்த
பரிசுத்த ஆவியால் எமை நிறைத்து
தூதருடன் வரும் தெய்வத்தையே
காத்து நிற்ப்போம் வழி பார்த்து நிற்போம்

ஆவியின் கனியை எமக்கு தந்து
ஆத்தும பாரத்தை எமக்குள் வைத்த
ஆண்டவர் இயேசுவின் அன்பினை சொல்லி
ஆத்தும அறுவடை செய்திடுவோம்

Visuvaasa Kappal விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது

 விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது

புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – அக்கரை நோக்கி

பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ – ஏலேலோ – ஆ – ஆ

ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ – ஏலேலோ – ஆ – ஆ

நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ – ஏலேலோ – ஆ – ஆ

Yaridam Solven Yaridam Solven யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்

 யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்

எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
உம்மிடம் சொல்வேன்

உலகம் அழைக்கிறது – உம்
நாமமும் அழைக்கிறது
உலகை வெறுக்கவில்லை
உம்மையும் மறக்கவில்லை
நானென்ன செய்யட்டும் தேவா

இச்சைகள் இழுக்கிறது – உம்
சத்தியம் தடுக்கிறது
புவியை வெறுத்திட
பிதாவை பற்றிக்கொள்ள
மனதில் பெலன் தாருமே

இரட்சிப்பு விளையாட்டா – நம்
இரட்சகர் விளையாட்டா
எத்தனை முறை விழ
எத்தனை முறை எழ
மன்னிப்பு இன்னொன்று உண்டா

Yedho Kirubaiyila Vaazhkai ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது

 ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது

உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது
எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்

சுய நீதிய கழட்டி வெச்சேன்
உங்க நீதிய உடுத்திகிட்டேன்
நீதிமானா மாத்துனீங்களே என்ன
நீதிமானா மாத்துனீங்களே
செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
மன்னிச்சு அணைக்குறீங்களே
என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே..

பசிக்கும்போது உணவு தந்து
ஜெபிக்கும்போது இரங்கி வந்து
ஆசீர்வதிக்கிறீங்களே – என்ன
ஆசீர்வதிக்கிறீங்களே
அதிசயமா நடத்துறீங்க
ஆலோசனைய கொடுக்குறீங்க
பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்ன
பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே

உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க
உள்ளங்கையில் என்ன வரையுறீங்க
தகப்பன் நீங்கதானய்யா என்
தகப்பன் நீங்கதானய்யா
தவறும்போது திருத்துறீங்க
தடுக்கும்போது புடிக்கிறீங்க
தாயும் நீங்கதானய்யா – என்
தாயும் நீங்கதானய்யா

Yesai Nambithaan Naan இயேசு நம்பி தான் நான்

 இயேசு நம்பி தான் நான்

வாழ்ந்திருக்கேன் அவர்
பேச்சை நம்பித்தான் நான்
வளர்ந்திருக்கேன் இயேசு
வாக்குத்தத்தம் என் நெஞ்சிலே அது
வந்து வந்து தேத்தும்மா

தாய் என்னை மறந்தாலும் இயேசு
நான் உன்னை மறவேன் என்றார்
தந்தை என்னை வெறுத்தாலும்
என் இயேசு தாங்கி சுமப்பேன் என்றார்
பந்தங்கள் சொந்தகள் பாரினில் மாறிடும்
பரமன் இயேசுவோ என்றென்றும் மாறிடாரே

உலகம் முடிவு பரியந்தம் நான்
உன்னோடு இருப்பேன் என்றார்
இந்த உலகம் தரக்கூடாத சமாதானம்
உன்னிலே வைப்பேன் என்றார்
உன் மேல் என் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்வேன் என்றார்
உன்னை நான் ஒரு போதும்
கைவிட மாட்டேன் என்றார்

காலங்கள் மாறிவிடும் என் இயேசு
கர்த்தரோ மாறமாட்டார்
கோலங்கள் அழிந்து விடும்
என் இயேசு
கொள்கையோ நிலைத்து நிற்கும்
வானமும் பூமியும் ஒருநாள்
ஒழிந்திடும்
தேவனின் வார்த்தையோ
எந்நாளும் ஒழிவதில்லை

Yesaiya Um Naamam இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்

 இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்

இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன்

உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா
உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா

எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர்
மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர்

பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர்
ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர்

இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா
கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா

மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற
மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற

Yesaiya Yesaiya Pasamulla இயேசையா இயேசையா

 இயேசையா இயேசையா

பாசமுள்ள இயேசையா
உங்களை விட்டா எங்களுக்கு
கதி ஏதையா

பாசமுள்ள பெற்று வளர்த்த
பிள்ளையே மறக்கலாம்
சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம்
ஒன்றாக பகைக்கலாம்
நான் உன்னை மறக்கமாட்டேன்
கைவிடமாட்டேன் என்று
நீங்க சொன்ன வார்தைய நம்பி
ஓடோடி வந்தேனையா

பத்து மாதம் சுமந்து பெற்ற
தாய்கூட மறக்கலாம்
தோள்மீது சுமந்து வர்த்த
தந்தையே வெறுக்கலாம்
நான் உன்னை மறக்கமாட்டேன்
கைவிடமாட்டேன் என்று
நீங்க சொன்ன வார்தைய நம்மி
ஓடோடி வந்தேனையா

Yesu Christhuvukku Emmadhamum இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்

 இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும் சம்மதம்

இயேசு கிறிஸ்துவுக்கு எந்த ஜாதியும் சொந்த ஜாதி
எந்த மனுஷனும் இயேசுவிடம் வரலாம்
எந்த நிலையிலும் அவரிடம் வரலாம்
யாரானாலும் இயேசப்பாவின் பிள்ளைகளாகலாம்
இலவசமாக அன்பு தெய்வத்தின் சொந்தங்கள் ஆகலாம்
இயேசுகிறிஸ்துவிற்கு எம்மதமும் சம்மதம்
இயேசு கிறிஸ்துவுக்கு எந்த ஜாதியும் சொந்த ஜாதி

குடிச்சு குடிச்சு வாழ்க்கையைக் கெடுத்த
அண்ணே உங்களுக்கு எதிர்காலம் உண்டு
கெட்ட பழக்கத்தாலே நிம்மதி போச்சுதா
தம்பி உங்களுக்கு எதிர்காலம் உண்டு
நம்பினவங்க ஏமாத்திட்டாங்கன்னு தவிக்கிறீர்களா
கொடுத்த பணம் திருப்பிக் கேட்டா மிரட்டுறாங்களா
உங்களுக்கு தேவை இயேசுநாதரு
இலவசமாக விடுதலை தருவாரு

கெட்ட சொப்பனம் காத்து கருப்புன்னு
வாழ்க்கை முழுசும் பயமாகிப்போனதோ
தீராத நோயினால் வியாபார தோல்வியால்
சங்கட வாழ்க்கையா இயேசப்பாவ புடிச்சுக்கோ
வெட்கப்பட்டு பயந்து பயந்து நடுங்கிநிக்காதே
மதத்தை பாக்காம ஜாதியை பாக்காம இயேசு நாதர பாரு
உங்களுக்கு தேவை இயேசுநாதரு
இலவசமாக விடுதலை தருவார்

கடன் தொல்லை வறுமையால வாழ்க்கையை வெறுத்த
அம்மா உங்களுக்கு எதிர்காலம் உண்டு
எதிர்காலத்தைப் பற்றி பயந்துகிட்டே இருக்கும்
தங்கச்சி உங்களுக்கு நல்ல காலம் பொறக்குது
படிப்பு முடிச்சு வேலை இல்லைன்னு கலக்குறீங்களா
கிடைச்ச வேலையில் சம்பளம் இல்லன்னு குமுறுறீங்கங்களா
உங்களுக்கு தேவை இயேசுநாதரு
இலவசமாக விடுதலை தருவாரு

Yesu Nallavar Ellam இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்

 இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்

அன்பு உள்ளவர் இரக்கமுள்ளவர்
கிருபை உள்ளவர் கருணை உள்ளவர்
அல்லேலூயா அல்லேலூயா

தூய்மை உள்ளவர் குற்றமற்றவர்
நம்பிக்கை தந்தவர் பரிவு உள்ளவர்
ஆதரிப்பவர் அரவணைப்பவர்
அல்லேலூயா அல்லேலூயா

நிம்மதி தந்தவர் எனக்குள் வாழ்பவர்
மன்னிப்பு தந்தவர் இரட்சிப்பு தந்தவர்
தூக்கி சுமப்பவர் தப்புவிப்பவர்
அல்லேலூயா அல்லேலூயா

ஜீவன் தந்தவர் அற்புதம் செய்பவர்
சாவை வென்றவர் உயிர்த்தெழுந்தவர்
ஜெபத்தை கேட்பவர் பதிலளிப்பவர்
அல்லேலூயா அல்லேலூயா

ஞானமுள்ளவர் எல்லாறிந்தவர்
நீதி உள்ளவர் எங்கும் நிறைந்தவர்
நித்தியமானவர் சத்தியமானவர்
அல்லேலூயா அல்லேலூயா

மகிமை உள்ளவர் மேன்மையுள்ளவர்
பாசம் உள்ளவர் தேற்றுகின்றவர்
சுகமளிப்பவர் வாழ வைப்பவர்
அல்லேலூயா அல்லேலூயா

Yesu Namakku Vendum இயேசு நமக்கு வேண்டும்

 இயேசு நமக்கு வேண்டும்

அவர் அன்பு நமக்கு வேண்டும்
எவரையும் ஏற்றுக்கொள்ளும்
தெய்வம் நமக்கு வேண்டும்

பிரிந்து வாழ்பவர்கள் இணைய வேண்டும்
ஒற்றுமை மலர வேண்டும்
குடும்பத்தில் பிளவுகள் ஒழிய வேண்டும்
ஒரு மனம் வளர வேண்டும்
அன்பின் எல்லையை சிலுவையிலே
காட்டிய இயேசு அதற்கு வேண்டும்

மன்னிக்கும் மனப்பான்மை வளர வேண்டும்
சமரச சிந்தை வேண்டும்
மன்னிப்பு கேட்கும் மனமும் வேண்டும்
மனத்தாழ்மை வளரவேண்டும்
அன்பின் எல்லையை சிலுவையிலே
காட்டிய இயேசு அதற்கு வேண்டும்

நீதியும் நேர்மையும் வளர வேண்டும்
தூய வாழ்வு வேண்டும்
பிறர் செய்த உதவிகளை நினைக்க வேண்டும்
நன்றியுடன் வாழ வேண்டும்
அன்பின் எல்லையை சிலுவையிலே
காட்டிய இயேசு அதற்கு வேண்டும்

Yesu Ratchagar Peyarai இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

 இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

எதுவும் நடக்குமே
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே

வாடி கிடந்த உயிர்களெல்லாம்
வாழ வைத்தாரே
அவர் வாழ்வு சத்தியம் ஜீவனுமாய்
நன்மை செய்தாரே

பரம பிதா ஒருவன் என்று வகுத்து
சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு
உலகை கண்டவர் இயேசு

எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை
வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக
விளங்குகின்றவர் இயேசு

தீமை வளரும் எண்ணம் தன்னை
அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு
பழகச் சொன்னவர் இயேசு

Yesu Saami Nallavaru இயேசு சாமி நல்லவரு

 இயேசு சாமி நல்லவரு

எல்லோருக்கும் இரட்சகரு
பாவம் யாவும் மன்னித்தாரு
நம்ம சாபங்கள் எல்லாம் தள்ளிட்டாரு
நல்லவரு நல்லவரு நன்மைகளை செய்பவரு
வல்லவரு வல்லவரு வார்த்தையிலே வல்லவரு
அற்புதரு அற்புதரு அதிசயம் செய்பவரு
இயேசு நம்ம இயேசு சாமி நல்லவரு எல்லோருக்கும் இரட்சகரு

கட்டப்பட்ட மனிதர்களின் கட்டவீழ்க்கும் கர்த்தவர்
காயப்பட்ட பிள்ளைகளின் காயங்களை ஆற்றுபவர்
கல்வாரி இரத்தத்தை ஊற்றிடுவார்
கவலை கண்ணீர் எல்லாம் மாற்றிடுவார் – நம்ம
நல்லவரு நல்லவரு நன்மைகளை செய்பவரு
வல்லவரு வல்லவரு வார்த்தையிலே வல்லவரு
அற்புதரு அற்புதரு அதிசயம் செய்பவரு
இயேசு நம்ம இயேசுசாமி நல்லவரு எல்லோருக்கும் இரட்சகரு

சேனைகளின் கர்த்தர் பெரியவராம்
சேதமின்றி நம்மைக் காப்பவராம்
சிலுவையில் சாத்தானை ஜெயித்தவராம்
மரணத்தை ஜெயமாக்கி எழுந்தவராம்
யுத்தத்தில் இயேசு வல்லவராம்
எல்லா ஜனத்துக்கும் இரட்சகராம் – இயேசு
நல்லவரு நல்லவரு நன்மைகளை செய்பவரு
வல்லவரு வல்லவரு வார்த்தையிலே வல்லவரு
அற்புதரு அற்புதரு அதிசயம் செய்பவரு
இயேசு நம்ம இயேசு சாமி நல்லவரு எல்லோருக்கும் இரட்சகரு

Yesu Seitha Nanmaigalai Maarakka Matten இயேசு செய்த நன்மைகளை

 இயேசு செய்த நன்மைகளை மறக்க மாட்டேன்

அவரை புகழ்ந்து பாடுவதை நிறுத்த மாட்டேன்
வாழ்க வாழ்க இயேசு நாமம்
வாழ்க வாழ்கவே

மரித்தி கிடந்த சடலம் எனக்குள்
உயிராய் வந்தார்
இருளில் அலைந்து தவித்த எனக்குள்
ஒளியாய் வந்தார்

சந்துகள் பொந்துகள் அனைத்தும் நுழைந்து
சாட்சி சொல்லுவேன்
சொந்தமும் பந்தமும் எதிர்க்கும் போதும்
துணிந்து செல்வேன்

Yesu Thaevanin Naamam Endrum இயேசு தேவனின் நாமம்

 இயேசு தேவனின் நாமம்

என்றும் ஜெயமே அருளும்
உன்னைக் காத்திடும் நாமம்
என்றும் துணையே நாமம்

பாவம் போக்கும் நாமமே
சாபமே நீங்கிடும்
சாந்தியே நல்கிடும்
வாழ்வின் துணையே நாமமே

தேவ நாமம் இனிமையே
தேனிலும் மதுரமே
துன்பமே நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும்

நோய்கள் யாவும் நீக்கிடும்
அதிசயம் வெளிப்படும்
வேதனை மாறிடும்
வேந்தன் இயேசு நாமமே

சாவின் கூரை ஜெயித்திடும்
பேயினை துரத்திடும்
வல்லமை வெளிப்படும்
ஓங்கி சிறக்கும் நாமம்

நாவு யாவும் துதித்திடும்
கால்களே மடங்கிடும்
இயேசுவின் நாமமே
பூவில் என்றும் உயர்ந்ததே

Yesu Thevan Ieukkum Pothu இயேசு தேவன் இருக்கும் போது

 இயேசு தேவன் இருக்கும் போது இன்னல் நமக்கேது

இருள் அகற்றும் அருள் மொழியாம் கிறிஸ்து புகழ் பாடு
கருணையுள்ள தேவன் நம்ம கர்த்தர் இயேசு ராஜன் – 2

கொல்கொதா குருசினில் பொங்கும் இயேசு
குருதியால் நம் பாவம் நீங்கும்
கல்லான இதயங்கள் மாறும் நல்ல
கனிவான உள்ளம் உருவாகும்
மனமாற்றம் மறுரூபம் மகிமையும் அடைந்திடுவோம்
புவிவாழ்வு முடிகையிலே பொன்னகரம் சேர்ந்திடுவோம்
தூதர்கள் சூழ கரம் தனிலே
துன்பங்கள் நீங்கி வாழ்ந்திடுவோம்

புயல் வெள்ளம் போல் மோதும் துன்பம்
மாறி புவி வாழ்வில் பொங்கிடும் இன்பம்
கடன் தொல்லை கஷ்டங்கள் நீங்கும்
கதிரின் ஒளிபட்ட பனிபோல நீங்கும்
வியாதிகளும் வேதனைகளும்
வறுமைகளும் மாறிவிடும்
நோய் நொடியும் பேய் பிடியும்
நொடிப் பொழுதில் ஓடிவிடும்
வல்லவன் இயேசு கிருபையினால்
வாழ்வில் வசந்தம் மலர்ந்துவிடும்

நலங்கெட்டு தடுமாறும் போதும் இயேசு
உடை தொட்டு குணமாள் மாது
தொழு நோயோர் குரல் கேட்டு நின்றார் அவரை
தொழுதோர்கள் சுகம் பெற்று சென்றார்
அருள் வழங்கும் தேவன் அவர் அன்பு வழி காட்டுபவர்
மரணமதின் கூர் உடைத்து மகிமையிலே சேர்க்கிறவர்
ஆண்டவர் இயேசு மொழியன்றோ
அகிலம் வாழும் வழியன்றோ

 

Yeshua Yeshua Endra Naamam யெஷவா யெஷவா என்ற நாமம்

 யெஷவா யெஷவா என்ற நாமம்

உனக்கும் எனக்கும் போதும் போதும்
இனிமையான நாமம் ஒரு இணையில்லாத நாமம்
முழங்கால்கள் மடங்கிடும் நாவுகள் சொல்லிடும்
அனைவரும் தொழுதிடும்

நீதியின் சூரியனே நீரே நாயகனே
ஏழைகள் காவலனே யெஷவா யெஷவா
பரமனை பிள்ளைகள் காணவே சிலுவையில் மரித்தவரே
உயிரோடு எழுந்தவர் ஆதலால் மரணத்தை ஜெயித்தவரே

கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே
மூன்றில் ஒன்றானவரே யெஷவா யெஷவா
பாரங்களை சுமந்திடும் சினேகிதன் பரமனின் தவப்புதல்வன்
பாவங்களை அகற்றிடும் தாயகன் மகிமையிலே முதல்வன்

ஆதியில் இருந்தவரே ஆவியில் நிறைந்தவரே
ஆத்துமா இரட்சகரே யெஷவா யெஷவா
ஒப்புரவை உண்டுபண்ணும் வேலையை துப்புரவாய் முடித்தவரே
முன்குறிக்கப்பட்டவரை மீட்கவே ஜீவனை கொடுத்தவரே

Yesuvai Arainthaargal இயேசுவை அறைந்தார்கள்

 இயேசுவை அறைந்தார்கள் சிலுவையிலே

ஆணி அடித்தார்கள் கரங்களிலே

முள்முடி சூட்டி வாரினால் அடித்து
குத்தினார் விலாவிலே
கொல்கதா மலையில் குமாரன் இயேசு
திருரத்தம் சிந்தினார்
என் பாவம் நீங்கி சுகமாய் நான் வாழ
ஜீவ பலியாகினார்

நல்லோர்கள் மேலும் தீயோர்கள் மேலும்
நன்மைகள் செய்யும் தேவன்
அடிமையின் ரூபம் தாழ்மையின் கோலம்
எனக்காக எடுத்து வந்தார்
என் நோய்கள் சுமந்தார் வியாகுலம் அடைந்தார்
ஆத்தும மீட்பரே
கல்வாரி அன்புக்கு நிகரொன்றும் இல்லை
என்னைத் தாழ்த்திடுவேன்

Yesuvai Nesikka Thodanginen இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

 இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

அது சுகம் மேலான சுகம்

உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே

பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே

அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

Yesuvai Thuthipaen Enn Devanai இயேசுவை துதிப்பேன் என்

 இயேசுவை துதிப்பேன் என் தேவனை துதிப்பேன்

அவர் நாமமே மேலானது
அல்லேலுயா ஒசன்னா

ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம்
நல்லவர் வல்லவர் பெரியவரே
எப்போதும் கூடவே இருப்பவரே

அதிசயமானவர் ஆலோசனை கர்த்தரவர்
வல்ரமை உள்ளவர் நம் இயேசுவே
வரங்களில் என்றும் மன்னவரே

Yesuvae Umathu Anbinaal இயேசுவே உமது அன்பினால்

 இயேசுவே உமது அன்பினால்

எங்களை நிரப்புமைய்யா
எல்லோரையும் உமது அன்பினால்
நேசிக்க உதவுமைய்யா

ஏழை பணக்காரன் என்ற
வேறுபாடு எங்களுக்குள் வேண்டாம்
படித்தவன் பாமரன் என்ற
பாகுபாடு ஒரு நாளும் வேண்டாம்
மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற
வித்தியாசம் அணுவளவும் வேண்டாம்

அழகானவன் அழகற்றவன் என்ற
அகங்காரம் எங்களுக்குள் வேண்டாம்
பழையவன் புதியவன் என்ற
பாகுபாடு திருச்சபையில் வேண்டாம்
திறமையுள்ளவன் திறமையற்றவன் என்ற
வித்தியாசம் சிந்தையிலும் வேண்டாம்

Yesuvandai Vanthiduvai Paavangal Neeki இயேசுவண்டை வந்திடுவாய்

 இயேசுவண்டை வந்திடுவாய்

பாவங்கள் நீக்கி ரட்சிப்படைந்திடவே

சிலுவையிலே உன் பாவங்கள் போக்கிடவே மரித்தார்
சிந்தனை செய்து இந்த வேளை வாராயோ

துன்பத்திலும் மாயையிலும் மாண்டழியாமலே நீ
இயேசெனும் ஜீவத் தண்ணீரண்டை வாராயோ

அன்னையிலும் தந்தையிலும் அன்புள்ள
ஆண்டவரேஇன்றுன்னைமீட்கஅன்பாய்அழைக்கிறாரே

நேற்றும் இன்றும் என்றும்மாறா இயேசுன்னை அழைக்கிறார்
நம்பிக்கையோடு தஞ்சம் பெற வாராயோ

நாளைக்கு நீ உயிருடனே இருப்பது நிச்சயமோ
நாட்களெல்லாம் வீண் தாமதம் செய்திடாதே

Yesuvin Kudumpam Onru Undu இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

 இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரன் இல்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்

இன்பமுண்டு சமதானமுண்டு
வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்

Yesuvin Naamathai sthotharippen இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்

 இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்

ஸ்தோத்தரிப்பேன்
என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான்
ஸ்தோத்தரிப்பேன்

தேவன் பாதம் அமர்ந்து அவர் வார்த்தைகள் கேட்பேன்
தினமும் அவரின் முகத்தின் தரிசனம் பெறுவேன்
இயேசு ராஜனே என் இதய கீதமே
நேசரின் அன்பை எந்நாளும் பாடுவேன்

தேவா உந்தன் கிருபை அது எனக்கும் போதுமே
என்னை வழிநடத்தும் உமது கரமே
உமது கண்களில் நான் இரக்கம் பெற்றேனே
என் ஆயுள் முழுவதும் சங்கீதம் பாடுவேன்

மனமோ தளராது தேவமகிமையைப் புகழ்வேன்
சந்தோஷம் மகிழ்ச்சி அதனால் அடைவேன்
இயேசு தேவனே என்னில் உயிர் வாழ்கிறார்
அவர் பிரசன்னத்தால் நானும் பிரகாசிப்பேன்

Yesuvukku Sonthamaana இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள்

 இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் – அவர்

அன்புக்கு அடிபணிந்த சீடர்கள்
தேவகரம் வடிவமைத்த ஜீவ சிற்பங்கள் – அவர்
ஆற்றலுக்கு வலுவான உயிர்ச்சான்றுகள்

இசாவா நாங்கள் இசாவா
இயேசுவைச் சேர்ந்தவர்கள் இசாவா – நாங்கள்

இயேசுவைப் பற்றிக்கொண்ட புத்திசாலிகள்
உன்னதத்தில் கொலுவிருக்கும் விந்தை மாந்தர்கள்
நிலைவாழ்வும் நிறைவாழ்வும் கண்ட ஞானிகள்
சாத்தானைத் தோற்கடிக்கும் வெற்றி வீரர்கள்

பாவ மாந்தர் மீட்பைக் காணும் அடையாளங்கள்
தேவ செய்தி சுமந்தலையும் இராஜ மடல்கள்
தூய்மை மணம் வீசுகின்ற நற்கந்தங்கள்
வாழ்வை பானபலியாக்கும் உயிர்த்தோழர்கள் – நாங்கள்

தேவ அரசு விடிய உழைக்கும் போராளிகள்
தேசத்தைக் கலக்குகின்ற சாவின் எதிரிகள்
இராஜநெறி பரப்புகின்ற புரட்சியாளர்கள்
தேவனுக்காய் வாழ்ந்து முடிக்கும் நித்யசாட்சிகள்

Yudha Raajasingam uyirthelundhar யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

 யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்

வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே

வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன

எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே

மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார்

உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை

கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம்

Yuthathil Vallavar Senaiyin யுத்தத்தில் வல்லவர் சேனையின்

 யுத்தத்தில் வல்லவர் சேனையின் கர்த்தர்

வல்லமையுடையவரே
துதிகளில் எல்லாம் பயப்படத்தக்கவர்
பரிசுத்தர் பரிசுத்தரே

ஜாதிகள் உம்மைச் சேவிப்பார்கள்
ஜனங்கள் உம்மிடம் வருவார்கள்
மாமிசமான யாவரின் மேலும்
ஆவியை ஊற்றும் இரட்சகரே

அற்புத தேவன் அதிசய ராஜன்
மகத்துவமுடையவர் இயேசுவே
மகிமைகள் சூழும் அவர் சமூகத்தில்
மகிழ்ந்திருப்போம் நாம் ஜெயத் தொனியாய்

சத்துரு வெள்ளம் போல் வந்தாலும்
கர்த்தரின் ஆவியே கொடியேற்றுவார்
அக்கினி ரதங்கள் அக்கினி குதிரைகள்
தூதர்கள் காற்றாய் நமக்குண்டு