Saturday, September 19, 2015

En karam pidithu enai nadathu

என் கரம் பிடித்து எனை நடத்து
என்னுடன் நடந்து வழி நடத்து
என் கரம் பிடித்து எனை நடத்து
வருவாய் இயேசுவே வழி துணையே
என் வாழ்கை பயணம் முழுவதுமே
என் கரம் பிடித்து எனை நடத்து

1. இருளின் ஆட்சி தொடங்கிவிட
என் இதயம் சோர்ந்து தளர்ந்துவிட (2)
என்னுடன் நீயும் இல்லாமல்
வேறு எங்கோ போவது சரிதானா?
எங்கோ போவது சரிதானா?
என் கரம் பிடித்து எனை நடத்து

2. என்னுடன் நீயும் நடந்து வந்தால்
இங்கு எல்லாம் அழகாய் மாறிவிடும் (2)
என்னுடன் நீயும் இல்லையென்றால்
என் உலகே இருளில் மூழ்கி விடும்
உலகே இருளில் மூழ்கி விடும்
என் கரம் பிடித்து எனை நடத்து
என்னுடன் நடந்து வழி நடத்து
என் கரம் பிடித்து எனை நடத்து

ADIYAR VENDAL KELUM YESUVE

1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே;
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே;
நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்,
உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.

2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
பந்தியில் நீரும் கூட அமர்வீர்,
எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.

3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
எம் பாலர் முகம் பாரும்,நாயகா;
தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

4. வாலிபர் நெறி தவறாமலும்,
ஈனர் இழிஞரைச் சேராமலும்,
ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.

5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
காரும், உம் பலம் ஆறுதல் தாரும்;
நோயுற்றோர் பலவீனர் யாரையும்
தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.

6. எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
எங்கெங்கோ தங்கும் எல்லாப் பேரையும்
அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
அவரைக் காத்து அல்லும் பகலும்.

7. ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
ஆவியில் அன்பில் என்றும் பெருக,
எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.

ADAIKALAM ADAIKALAME YESU NAADHA

அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!

அனுபல்லவி

திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு --- அடைக்கலம்

சரணங்கள்

1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! ---அடைக்கலம்

2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! --- அடைக்கலம்

3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! --- அடைக்கலம்

4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? --- அடைக்கலம்

ATHI MANGALA KAARANANE THUTHI THANGIYA

அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்
வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

சரணங்கள்

1. மதி-மங்கின எங்களுக்கும்,
திதி-சிங்கினர் தங்களுக்கும்
உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிடவையாய் துங்கவனே --- அதி-மங்கல

2. முடி-மன்னர்கள் மேடையும்,
மிகு-உன்னத வீடதையும் நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
வந்தனையோ தரையில்? --- அதி-மங்கல

3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
பெற்ற நற்கோலம் இதோ? --- அதி-மங்கல

ATHIKAALAIYILUMAI THEDUVEN MULU MANATHALE

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

அனுபல்லவி

இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! --- அதிகாலை

சரணங்கள்

1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! --- அதிகாலை

2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? --- அதிகாலை

3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! --- அதிகாலை

ENTHAN ULLAM THANGUM YESU NAAYAGA

1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா

2. மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா

3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா

4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா

MAGIBANAI ANUDHINAME

மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன் - தினம்

1. என்னை அன்பில் இணைத்திடவே
கண்டிப்பா உருவாகுமுன்னே
ஜோதியாய் தேவ மகிமையை பெறவே
தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் --- மகிபனையே

2. தூதராலும் செய்யவொண்ணா
தூய பணியை அற்புதமாய்
தோசியாலும் செய்திட கிருபை
தூயன் கிறிஸ்து தந்தனரே --- மகிபனையே

3. அழைத்தாரே சுவிஷேசத்தினால்
அடைய தேவ சாயலதை
பயத்துடனே பரிசுத்தமதையே
பாரினில் பூரணமாக்கிடுவோம் --- மகிபனையே

4. ஆவலுடனே காத்திருந்தேன்
சேவை புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளன் வருவார்
சீயோனில் என்னை சேர்த்திடவே --- மகிபனையே

KANMANI NEE KANVALARAI

கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்
1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ

ANUGRAGHA VAARTHAIYODE IPPOTHU

1. அனுக்ரக வார்த்தையோடே - இப்போது
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்.

2. நின்திரு நாமமதில் - கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.

3. தோத்திரம், புகழ், மகிமை, - கீர்த்தி,
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே; அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!

ANBIN DEVA NARKARUNAIYILE

அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப குண ரசத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
நற் கருணை விஸ்வாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்

ANBIN DEVAN YESU UNNAI ALAIKIRAR

அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
அணைக்க ஏசு துடிக்கிறார்
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார்

சரணங்கள்

1. மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள் --- அன்பின்

2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே மன்னன் ஏசு பார் --- அன்பின்

3. வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதோ
மரணம் வென்ற ஏசு பார் --- அன்பின்

ANBIL ENNAI PARISUTHANAAKKA

1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ

பல்லவி

என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்

2. மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை --- என்

3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகத்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர --- என்

4. வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே --- என்

5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் எப்படி பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே --- என்

ANBURUVAAM EM AANDAVA

1. அன்புருவாம் எம் ஆண்டவா,
எம் ஜெபம் கேளும், நாயகா;
நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
பாங்குடன் கட்ட அருளும்.

2. வாலிபத்தில் உம் நுகமே
வாய்மை வலுவாய் ஏற்றுமே,
வாழ்க்கை நெறியாம் சத்தியம்
நாட்ட அருள்வீர் நித்தியம்.

3. அல்லும் பகலும் ஆசையே
அடக்கி ஆண்டு, உமக்கே;
படைக்க எம்மைப் பக்தியாய்
பழுதேயற்ற பலியாய்.

4. சுய திருப்தி நாடாதே,
உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
வேண்டாம் பிறர் பயம் தயை,
வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.

5. திடனற்றோரைத் தாங்கிட,
துக்கிப்பவரை ஆற்றிட;
வாக்கால் மனத்தால் யாரையும்
வருத்தா பலம் ஈந்திடும்.

6. எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
தீங்கற்ற இன்பம் தேடிட,
மன்னிக்க முற்றும் தீமையை
நேசிக்க மனு ஜாதியை.

VAARUMAIAH POTHAGARA VANTHEMIDAM

வாருமையா போதகரே, வந்தெம்மிடம் தங்கியிரும்
சேருமையா பந்தியினில் சிறியவராம் எங்களிடம்

ஒளி மங்கி இருளாச்சே உத்தமனே வாருமையா
களித்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய்

ஆதரையிலென் ஆறுதலே அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே பாதை மெய் ஜீவ சற்குருவே

நாமிருப்போம் நடுவிலென்றீர் நாயனுன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய தற்பரனே நலம் தருவாய்

உந்தன் மனை திருச்சபையை வையமெங்கும் வளர்த்திடுவாய்
பந்த மற பரிகரித்தே பாக்கியமளித் தாண்டருள்வாய்

பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன் திவ்ய ஆவி தந்தருள்வாய்

THUTHIYUNGAL DEVANAI

துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை (2)

1. அவரது அதிசயங்களை பாடி
அவர் நாமத்தை பாராட்டி,
அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரையே போற்றுங்கள் (2)

ஆப்ரகாமின் தேவனை
ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் --- துதியுங்கள்

2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூட்டினை போக்கினோனே
கானானின் தேசத்தை காட்டினோனே
கர்த்தரை போற்றுங்கள் (2)

ராஜாதி ராஜனை
கர்த்தாதி கர்த்தனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் --- துதியுங்கள்

ANBULLA YESAIAH

அன்புள்ள இயேசையா
உம் பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்

1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

ANBE ANBE ANBE AARUYIR

அன்பே ! அன்பே ! அன்பே !
ஆருயிர் உறவே
ஆனந்தம் ! ஆனந்தமே !

சரணங்கள்

1. ஒருநாள் உம் தயை கண்டேனையா
அந்நாளென்னை வெறுத்தேனையா
உம்தயை பெரிதையா - என் மேல்
உம் தயை பெரிதையா --- அன்பே

2. பரலோகத்தின் அருமைப் பொருளே ,
நரலோகரி லன்பேனையா ?
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ --- அன்பே

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே - எனையும்
அணைத்தீர் அன்பாலே --- அன்பே

4. பூலோகத்தின் பொருளில் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா --- அன்பே

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்
இசைக்கவும் எளிதாமொ --- அன்பே

ANBE PIRATHANAM SAGOTHARA

அன்பே பிரதானம் - சகோதர
அன்பே பிரதானம்

சரணங்கள்

1. பண்புறு ஞானம் - பரம நம்பிக்கை,
இன்ப விஸ்வாசம் - இவைகளிலெல்லாம் --- அன்பே

2. பலபல பாஷை - படித்தறிந்தாலும்,
கல கல வென்னும் - கைம்மணியாமே --- அன்பே

3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்,
அன்பிலையானால் - அதிற்பயனில்லை --- அன்பே

4. துணிவுடனுடலைச் - சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால் - பயனதில்லை --- அன்பே

5. சாந்தமும் தயவும் - சகல நற்குணமும்,
போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள --- அன்பே

6. புகழிறு மாப்பு - பொழிவு பொறாமை,
பகைய நியாயப் - பாவமுஞ் செய்யா --- அன்பே

7. சினமடையாது - தீங்கு முன்னாது,
தினமழியாது - தீமை செய்யாது --- அன்பே

8. சகலமுந் தாங்கும் - சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் - மேன்மை பெற்றோங்கும் --- அன்பே

ARASANAI KAANAMALIRUPPOMO NAMADHU

அரசனைக் காணமலிருப்போமோ? - நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

அனுபல்லவி

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? - யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத

சரணங்கள்

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! - யூத --- அரசனை

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! - மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! - யூத --- அரசனை

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! - அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! - நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! - யூத --- அரசனை

4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! - யூத --- அரசனை

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை

ARUL YERALAMAI PEIYUM

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே!
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே

பல்லவி

அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் --- அருள்

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு ! வந்தருளுமேன் !
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன் --- அருள்

4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே --- அருள்

ARPANITHEN ENNAI MUTTRILUMAI

1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

பல்லவி

அனைத்தும் கிறிஸ்துவுக்கே - எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழு தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே
2. என் எண்ணம் போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
உம் சிலுவை அன்பை சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான் புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்

ARUPPU MIGUTHI RAAJAVE ULIYAM

1. அறுப்பு மிகுதி ராஜாவே
ஊழியர் தந்திடும்
வெறுப்பில் அலையும் ஜனத்தின் மேல்
எம் பொறுப்பை உணர்த்திடும்

பல்லவி

இந்தியாவில் கோடி கோடி
உம்மை அறியாரே
என்னை அனுப்பும் ராஜாவே
நீர் என்னை அனுப்பிடும்
2. பாதாள சேனை இன்னும் இன்னும்
ஜெயிக்க விடாதிரும்?
சேனை வீரராய் வாலிபர் பலர்
எழும்பச் செய்திடும்

3. யாரை அனுப்ப யார் போவார்
என்றலையும் இயேசுவே
என்னை உந்தன் கண்கள் காண
உம்முன் நிற்கிறேன்

4. மெய் வீரனாக ராஜாவே
நான் எழுந்து வருகிறேன்
கோதுமை மணியாக மாற
என்னைப் படைக்கிறேன்

KALVAARI SILUVAI NAADHA

கல்வாரி சிலுவை நாதா
காரிருள் நீக்கும் தேவா

அனுபல்லவி

பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) --- கல்வாரி

சரணங்கள்

1. மன்னுயிர் மீட்கும் அன்பால்
தன் உயிர் மாய்த்தாய் அன்பே
மன்பதை மாந்தர் முன்னால்
தரணியை இழுத்தாய் நின்பால் (2) --- கல்வாரி

2. தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பார்
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்
வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) --- கல்வாரி

ALLELUJAH KARTHARAIYE YEGAMAI THUTHIYUNGAL

1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

பல்லவி

இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
தேவனைத் துதியுங்கள்
2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

3. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

4. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

5. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்

SANTHOSA GEETHAM ENNIL PONGUTHE

1. சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே
சர்வ வல்ல ஏசு என்னை நேசித்தார்
பெற்றதாம் நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணியே
பேரன்பு பொங்க என்றும் பாடுவேன்

ஆர்ப்பரித்து நான் ஆனந்தங் கொள்வேன்
ஆண்டவர் சமூகம் என்னைத் தேற்றுமெ
துன்பங்கள் யாவுமே துரிதமாய் நீங்குதே
இன்ப இயேசு நாமத்தில்

2. பேரின்ப கீதம் என்னில் பொங்குதே
போன நாட்கள் என்னைக் கர்த்தர் தாங்கினார்
சோதனை சூழ்ந்து என் நம்பிக்கை குன்றினும்
சோர்ந்தழியாமல் என்றும் காத்ததால் --- ஆர்ப்பரி

3. இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதே
இரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார்
மானிடர் மாறினும் அன்பை விட்டோடினும்
மாதேவ அன்பில் என்னைக் காத்ததால் --- ஆர்ப்பரி

4. ஆனந்த கீதம் என்னில் பொங்குதே
ஆரவாரத்தோடே இயேசு தோன்றுவார்
ஆவலாய் விழித்தே ராவிலும் ஜெபித்தே
ஆயத்தமாய் நான் காத்து நிற்பதால் --- ஆர்ப்பரி

5. சீயோனின் கீதம் என்னில் பொங்குதே
சீக்கிரம் வந்தென்னை சேர்த்துக் கொள்வார்
பொன்முடி வேந்தனாம் எந்தை என் இயேசுவின்
பொன் மாளிகை நான் கிட்டிச்சேர்வதால் --- ஆர்ப்பரி