ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம் -2
1. காரிருள் வேளைதனில் கடும்பனி சாரல் தனில்
பார்தல மீட்பை எண்ணி பரமன் பிறந்து விட்டார் – ஒப்பில்லா
பார்தல மீட்பை எண்ணி பரமன் பிறந்து விட்டார் – ஒப்பில்லா
2. ஆரிரோ என்று பாட யாருமே அங்கு இல்லை
ஏரோது மனம் கலங்க ஏகபரண் பிறந்தார் – ஒப்பில்லா
ஏரோது மனம் கலங்க ஏகபரண் பிறந்தார் – ஒப்பில்லா
3. தம்மைப் போல் நம்மை மாற்ற தாரணி வந்தவர்க்காய்
நம்மை நாம் இன்றளிப்போம் நாதன் வழி நடப்போம் – ஒப்பில்லா
நம்மை நாம் இன்றளிப்போம் நாதன் வழி நடப்போம் – ஒப்பில்லா
No comments:
Post a Comment