Friday, May 18, 2018

NESIKIREN UMMAITHAANE AIYAA LYRICS


நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா
ஒவ்வொரு நாளும் எனது கண்முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் நீர் இருப்பதனால் – என்
அசைக்கப்படுவதில்லை – நான்
உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே – என்
நினைவெல்லாம் ஆள்பவரே
ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மை தேடணுமே
உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்

No comments: