Friday, May 18, 2018

NEENGA MATTUM ILLAADHIRUNDHAAL LYRICS


நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே (2)
1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2)
அக்கினியில் நடந்த போது – (கடும்) (2)
எனை மீட்டது உம் கிருபையப்பா (2) – நீங்க
2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2)
விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) (2)
எனை மீட்டது உம் கிருபையப்பா (2) – நீங்க
3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா (2)
வழிதப்பி அலைந்த போது – (உந்தன்) (2)
மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா (2) – நீங்க

No comments: