Saturday, May 19, 2018

KURAIYATHA ANBU KADAL POLA VANTHU LYRICS


குறையாத அன்பு கடல் போல வந்து 
நிறைவாக என்னில் அலைமோதுதே - அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே - 2

கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் - 2
உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றாய் .... நான் - 2

அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே - 2
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே - 2

இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் - 2
தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ... நான் - 2

No comments: