Tuesday, October 22, 2019

PESUM DEIVAM NEER TAMIL LYRICS


பேசும் தெய்வம் நீர்
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல

என்னைப் படைத்தவர் நீர்
என்னை வளர்த்தவர் நீர்
என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி
என்னோடிருப்பவர் நீர்
-இயேசுவே -4

என் பாரம் சுமப்பவர் நீர்
என் தாகம் தீர்ப்பவர் நீர்
என்னைப் போஷித்து என்னை உடுத்தி
என்னோடிருப்பவர் நீர்
-இயேசுவே -4

என் குடும்ப வைத்தியர் நீர்
ஏற்ற நல் ஒளஷதம் நீர்
எந்தன் வியாதி பெலவீனங்களில்
என்னோடிருப்பவர் நீர்
- இயேசுவே -4

என்னை அழைத்தவர் நீர்
என்றும் நடத்துபவர் நீர்
என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து
என்னோடிருப்பவர் நீர்
- இயேசுவே -4

எனக்காய் வருபவர் நீர்
என் கண்ணீர் துடைப்பவர் நீர்
எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்து
என்னோடிருப்பவர் நீர்
- இயேசுவே -4

No comments: