மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்
மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்
மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் - நாம்
ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்
வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப்பாடுவோம்
1. வானத்தில் பறந்திடும் பறவைகளாய்
விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய்
என்றும் ஜொலித்து என்றும் பறந்து
சந்தோஷமாய் வாழ்ந்திட கீதம் பாடுவோம் - மலர்
2. ஆவியின் கனிகளால் நிறைந்திடவே
அன்பின் வழிதனில் நடந்திடவே
அல்லும் பகலும் ஜெபம் செய்திட
ஆண்டவரை நாமும் வேண்டிடுவோம் - மலர்
3. செல்வங்கள் பல பெற்று செழிப்புறவே
நன்மைகள் தினமும் நாடி வரவே
மீட்பர் பாதத்தில் நன்றி கூறியே
நல்லவரை வல்லவரை என்றும் துதிப்போம் - மலர்
No comments:
Post a Comment