Tuesday, February 25, 2025

Ilaipaaruthal Inthidum Naadae இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே lyrics


இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே
இன்ப இயேசுவின் மோட்ச வீடே
புவியாத்திரை தீர்ந்திடும் போதே
பரலோகம் அழைத்திடுமே

எந்தன் வாஞ்சை உயர் சீயோன்
என்னை வந்தவர் சேர்த்துக்கொள்வார்
கண்ணீர் யாவையுமே மிக அன்புடனே
கர்த்தர்தாமே துடைத்திடுவார்

1. இந்த மண்ணுலகாசை வெறுத்தேன்
இப்புவி எந்தன் சொந்தமல்ல
இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு
இலக்கை நோக்கித் தொடருகிறேன்

2. நம் முன்னோர் பலர் அக்கரை மீதே
நமக்காகவே காத்திருக்க
விண்ணில் ஜீவ நதிக்கரை ஓரம்
வேகம் நானும் சேர்ந்துகொள்வேன்

3. அற்பமான சரீரம் அழிந்தே
அடைவேன் மறுரூபமாக
புதுராகம் குரல் தொனியோடே
புதுப்பாட்டு பாடிடுவேன்

4. பரலோகத்தில் இயேசுவே அல்லால்
பரமானந்தம் வேறில்லையே
அங்கு சேர்ந்து அவர் முகம் காண்போம்
ஆவல் தீர அணைத்துக் கொள்ளுவோம்

5. உண்மையாக உம் ஊழியம் செய்ய
உன்னத அழைப்பை ஈந்தீரே
தவறாமலே காத்த கரத்தில்

No comments: