நான் உம்மை பாடிட, பாத்திரன் அல்லவே
நீர் என்னை தேடிட, பரிசுத்தன் அல்லவே X 2
தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமே
மார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே
(Chorus)
என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
என்ன புதுமை இது என்னை பாட செய்தது X 2
ஓ ஓ ஓ! ஓசன்னா… ஆ ஆ ஆ! அல்லேலூயா – 2
1 ஒவ்வொரு நாளிலும், கிருபைகள் புதியதே
வாழ்ந்திடும் நாள் எல்லாம், அது மிக நல்லதே X 2
குருசில் தொங்கி இரத்தம் சிந்தி மீட்பு தந்த இயேசுவே
பிள்ளை என்னை உந்தன் பாதம் சேர்த்து கொள்ளும் தகப்பனே
என்ன கிருபை இது… (Chorus)
2 பாவத்தில் வாழ்ந்த என்னை, பரிசுத்தமாக்கினீர்
அன்புடன் தேடி வந்து, கிருபையால் காக்கின்றீர் X 2
கனிந்து உருகி பரிந்து பேசி மீட்டுக்கொண்ட இயேசுவே
பிள்ளை நானும் புவியில் வாழ இந்த கிருபை போதுமே
என்ன கிருபை இது… (Chorus)
Naan Ummai Paadida, Paaththiran Allave
Neer Ennai Thedida, Parisuththan Allave X 2
Thedi Odi Aatri Thetri Azhzhi Anaiththa Dheivame
Maarbil Ennai Serthu Konda Maaridaadha Raajane
(Chorus)
Enna Kirubai Idhu, Ennai Vaazha Seidhadhu
Enna Pudhumai Idhu, Ennai Paada Seidhadhu X 2
Oh oh oh! Hosanna… Ah Ah Ah! Alleluya – 2
1 Ovvoru Naazhilum Kirubaigazh, Pudhiyadhe
Vaazhndhidum Naazhellam, Adhu Miga Nalladhe X 2
Kurusil Thongi Raththam Sindhi Meetpu Thandha Yesuve
Pizhzhai Ennai Undhan Paadham Saerthu Kozhzhum Thagappane
Enna Kirubai Idhu… (Chorus)
2 Paavaththil Vaazhndha Ennai, Parisuththamaakkineer
Anbudan Thedi Vandhu, Kirubayaal Kaakkindreer X 2
Kanindhu Urugi Parindhu Pesi Meettu Konda Yesuve
Pizhzhai Naanum Buviyil Vaazha Indha Kirubai Podhume
Enna Kirubai Idhu… (Chorus)
No comments:
Post a Comment