Wednesday, February 12, 2025

Naan Ummidathil Naan Ummidathil vantha pothellam நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்

நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே

உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்

உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
ஏக்கத்தோடு வாழ்ந்தேன்
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா

இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
உண்மையான அன்பை நான் கண்டேனையா
தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
தாங்கியே நடத்தினீர்
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா

அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன்
ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
உந்தன் அன்பை சொல்வேன்
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா

No comments: