Wednesday, February 12, 2025

Kartharai Kembiramaai Paadi கர்த்தரை கெம்பிரமாய் பாடி பாடி

 Kartharai Kembiramaai Paadi

கர்த்தரை கெம்பிரமாய் பாடி பாடி
இரட்சண்ய கன்மலையை உயர்த்திடுவோம்-2

ஒஒ ஓசன்னா அல்லேலூயா
ஓசன்னா அல்லேலூயா -4

பூமியின் குடிகளே துதியுங்கள்
பெரியவரை என்றும் புகழ்ந்திடுங்கள்
இம்மட்டும் காத்தாரே இனிமேலும் காப்பாரே
இம்மானுவேலரை துதியுங்கள்

ஒஒ ஓசன்னா அல்லேலூயா

நீதிமான்களே துதியுங்கள்
நீதி தேவனை உயர்த்திடுங்கள்
உண்டாக்கினாரே உயிர் கொடுத்தாரே
சிருஷ்டிகரை என்றும் துதியுங்கள்

ஒஒ ஓசன்னா அல்லேலூயா

பரிசுத்தவான்களே துதியுங்கள்
பரிசுத்தரை என்றும் போற்றிடுங்கள்
இரட்சண்ய மகிமையும் கனமும் செலுத்தி
தூயவரை என்றும் துதியுங்கள்

ஒஒ ஓசன்னா அல்லேலூயா

No comments: