Wednesday, February 12, 2025

Megangal Naduve Varapogum Raajave

 Megangal Naduve Varapogum Raajave

மேகங்கள் நடுவே வரப்போகும் ராஜாவே
உம்மை நான் வாழ்த்துகிறேன்
உம்மை நான் வணங்குகின்றேன்

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
இஸ்ரவேலின் ராஜா பரிசுத்தரே

பரலோகம் திறந்திடும் நேரத்திலே மறுரூபமாகும் வேளையிலே
பரன் இயேசு உம்மை நான் பார்த்திடுவேன்
பரவசமாய் உம்மில் சேர்ந்த்திடுவேன்

நினையாத நாழிகை வரும் நாளிலே நித்தமும் காத்து விழித்திருப்பேன்
மணவாளன் உம்மை நான்
பார்க்கும் போது
மறுரூபமாகி பறத்திடுவேன்

உலகத்தின் அன்பெல்லாம் வீண்தானையா
உன்னதத்தில் எல்லாமே நீர்தானேய்யா
நான் மறைந்து போகும் நாள் மண்ணோடுதான்
என் ஏக்கம் எல்லாமே உம்மோடுதான்

No comments: