Wednesday, November 13, 2019

EN YESU NAAYAGA UMMAIYE

என் இயேசு நாயகா
உம்மையே நான் பார்த்து-2
எனக்கு நியமித்த ஓட்டத்தில்
ஓடவே பெலன் தாரும்-2

பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே-2

இயேசுவை பார்த்து ஓடினால்
கிரீடம் உறுதி
மனிதனை பார்த்து ஓடினால்
விழுவதோ சடுதி-2
புனிதவரே இனியவரே இயேசுவே
உதவுமே இறுதிவரை-2

பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே

தாருமே தேவனே நாள்தோறும்
ஆத்துமாதய பாரம்
கல்வாரி சிலுவையை பாரும்
உண்டு பரிகாரம்-2
என சொல்லி யாவரையும் உம்மிடம்
ஈர்க்க வரம் தாரும்-2

பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே-2

No comments: