Friday, September 23, 2022

Kaaladi Theriyaamal ponalum

காலடி தெரியாமல் போனாலும்
கர்த்தர் என்முன்னே உண்டு - 2
சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்
நம்பி நான் முன்செல்லுவேன் - 2

இயேசுவை நம்புவேன் நாளெல்லாம்
நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன் - 2

வனாந்திரமே வாழ்க்கையானாலும்
கர்த்தர் என் பக்கம் உண்டு - 2
வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார்
நம்பி நான் முன்செல்லுவேன் - 2
                    - இயேசுவை

இங்கே நான் பரதேசி ஆனாலும்
அங்கே ஓரிடம் உண்டு - 2
ஆயத்தமாக்கி அழைத்துச்செல்வார் 
நம்பி நான் காத்திருப்பேன் - 2
                   - இயேசுவை


Song Description:  - காலடி தெரியாமல்.

No comments: