Tuesday, December 22, 2015

Aatham purintha pavathale manudanaagi


ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
வேதம் புரிந்த சிறை விடுவித்தீரோ பரனே

ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்
பாவத்துக்காகப் பழியானீரோ பரனே

வேத கற்பனையனைத்தும் மீறிநரர் புரிந்த
பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே

தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து
மைந்தரை மீட்கமனம் வைத்தீரோ பரனே

சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழக்
கொலைஞர் அடர்ந்து கோட்டி கொண்டாரோ பரனே

வலிய பாவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்
சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே

சென்னியில் தைத்தமுடிச்சிலுவையின் பாரத்தினால்
உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே

வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்
கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே

வானம் புவிபடைத்த வல்லமைப் பிதாவின் மைந்தர்
ஈனக்கொலைஞர் கையாலிறந்தீரோ பரனே

சங்கையின் ராஜாவே சத்ய அனாதி தேவே
பங்கப்பட்டுமடிப் பட்டீரோ பரனே

No comments: