Sunday, July 26, 2015

AKKINI NERUPPAI IRANGIVAARUM

அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும்
அபிஷேகம் தந்து வழி நடத்தும்
முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்துப் பேசினீரே
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே (யாத் 3:2)
எங்களை நிரப்பி பயன்படுத்தும்
எலியாவின் ஜெபத்துக்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே (1 இரா 18:38)
எங்களின் குற்றங்களை எரித்துவிடும்
ஏசாயா நாவைத் தொட்டது போல‌
எங்களின் நாவைத் தொட்டருளும்
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே (ஏசா 6:7,8)
எங்களை அனுப்பும் தேசத்திற்கு
அக்கினி மயமான நாவுகளாக‌
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
அந்நிய மொழியை பேச வைத்தீரே (அப் 2:3)
ஆவியின் வரங்களால் நிரப்பீனிரே 
இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட ( யாத் 13:21)
எங்களை நிரப்பும் ஆவியினால்

No comments: