Wednesday, February 6, 2019

AADHIYILE DHEVAN VAANAM BOOMI LYRICS

ஆதியிலே தேவன் வானம் பூமி படைத்தார் 
வார்த்தையினால் உலகத்தை வடிவமைத்தார் 
வெட்டாந்தரையையும் சமுத்திரங்களையும் 
வெற்றிகரமாகவே வெவ்வேறாக பிரித்தார்
பகலில் சூரியனும் இரவில் சந்திரனும்
பச்சைமரங்களும் பூ பூக்கும் செடிகளும் 
வானத்தில் பட்சிகளும் மற்ற விலங்குகளும்
மண்ணிலிருந்து நல்மனிதனையும் படைத்தாரே 

மீட்பின் செய்தி இதுதானே
மாந்தர் தெரிந்துகொள்ளட்டும்

தோட்டத்திலே ஒரு தோட்டக்காரன் போலவே 
ஆதாமை அனைத்தையும் பார்த்துக்கொள்ளச் சொன்னாரே 
ஆனாலும் நன்மை தீமை கனியினை புசித்தால் 
புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய் என்றாரே 
ஆதாமும் ஏவாளும் ஏதேனில் இருந்தனர் 
ஆனந்தமாகவே தோட்டத்தில் திரிந்தனர் 
அல்பகல் ஆண்டவரை வணங்கி மகிழ்ந்தனர் 
அல்லேலூயா என்று ஆர்ப்பரித்து வந்தனர் 

ஏதேன் தோட்டத்திலே ஒரு நாள்
சாத்தான் நோட்டமிட்டானே 

பிசாசு பாம்புக்குள்ளே
பாம்பு இப்ப தோட்டத்துள்ளே 
ஆதாமை விட்டுவிட்டான்
ஏவாளை மடக்கிவிட்டான் 
சந்தேகம் கிளப்பிவிட்டான்
சிந்தையை குழப்பிவிட்டான்
கட்டளை மறக்கவிட்டான்
கனியை புசிக்கவிட்டான் 
சாகவே சாவாய் என்று சர்வேஸ்வரன் சொன்னதெல்லாம் 
இல்லவே இல்லை என்று பொய்களை பறக்க விட்டான் 

வீழ்ந்தான் முதல் மனிதன் அன்று 
தாழ்ந்தான் அன்றுமுதலாய் 

மனிதனுள் பாவம் நுழைஞ்சாச்சு
நன்மை தீமை என்னவென்று தெரிஞ்சாச்சு
நிர்வாணி என்பதை அறிஞ்சாச்சு
ஆதாமும் ஏவாளும் விழுந்தாச்சு 
பிசாசின் தந்திரம் புரிஞ்சாச்சு
பரமனும் மனிதனும் பிரிஞ்சாச்சு
ஆசீர்வாதம் எல்லாமே குறைஞ்சாச்சு
ஆகமொத்தம் எல்லாமே நாசமா போச்சு

 பாவத்தை மறைக்க மர இலையா
அது பத்தாது உனக்கு தெரியலையா
தோல் உடை தேவை புரியலையா
அதை தேவன்தான் தரணும் அறியலையா

ஆதாமிடமிருந்து பிள்ளைகளுக்கு
அப்பிள்ளையிடமிருந்து மற்றவருக்கு 
இப்படியே பரவுது பாவ அழுக்கு 
மனிதனால் தேவனுக்கு பெரும் இழுக்கு 

பாவம் பரவுது பரவுது
தேவை பரிகாரமே

 எத்தனையோ வருஷமா என்னென்னமோ யோசிக்கிறான் 
பாவப் பழிபோக்கத்தானே மனுஷன் யாசிக்கிறான் 
மலைமேல மண்டியிட்டு மனச சுத்தப்படுத்தி
குகையில உக்காந்து தன்னையே கஷ்டப்படுத்தி 
நல்லதெல்லாம் செஞ்சு செஞ்சு தன்னையே திருப்திபடுத்தி
நல்ல எண்ணம் கொண்டு பரலோகம் போகப் பாக்குறான் 

தோல்வி படுதோல்வி தான் - உன் 
முயற்சிகள் மேல முக்காடுதான் 

கல்லையெல்லாம் தெய்வமாக்கி கண்முழிச்சு பாத்துக்குறான்
கண்டபடி மந்திரம் சொல்லி கர்த்தர ஏமாத்திக்கிறான் 
காணிக்கைய கொட்டி கொட்டி பாவங்கள மூடிக்கிறான் 
நாலுபேருக்கு நன்மை செஞ்சு நிம்மதிய நாடிக்கிறான் 

போ போ என்ன வேணுமோ செய்யி
பாவம் தீராதய்யா 
போ போ என்ன வேணுமோ செய்யி
பரிகாரம் இது இல்லய்யா

உன் சுயநீதியெல்லாம் நாத்தமடிக்குதே - உன்
நற்கிரியை எல்லாம் வீண் முயற்சியே  - உன் 
நல்ல எண்ணம் எல்லாம் நசுங்கிடுதே  - உன் 
பாவத்துக்கு முன்னாடி பொசுங்கிடுதே 

பாவம் நீங்க ரத்தபலி அவசியமே -
ஏனென்றால் அதுதான் தேவ சட்டமே 
ஆடு மாடு ரத்தமெல்லாம் கொஞ்ச காலமே 
மாசற்ற ரத்தம் இங்கு தேவைப்படுதே 

மனுஷனுக்காக மனுஷன் மரிக்க கூடுமோ 
குருடரை குருடர் வழி நடத்தக்கூடுமோ 
உத்தமமா ஒருத்தன காட்டக்கூடுமோ 
தன்னை நல்லவன்னு யாராவது சொல்லக்கூடுமோ 

அதனால,

ஆண்டவரே செய்தாரு நல்ல ஏற்பாடு 
அதுதானே உன் கையில் புதிய ஏற்பாடு
தன் மகனை தரணியில் தானமாக தந்தாரு
புதல்வனை பாவமெல்லாம் ஏற்றுக்கொள்ளச் சொன்னாரு 

கன்னி பெண்ணின் பிள்ளை 
களங்கமில்லா முல்லை 
பரிசுத்தத்தின் எல்லை 
பிசாசுக்கு தொல்லை 

ஏசு அவர் பேரு 
தாவீதின் வேரு
ஆபிரகாமின் வம்சம் 
ஆகமொத்தம் அம்சம் 

ஞானத்துல தீரன்
வல்லமையில் சூரன்
நல்ல உபகாரன் 
நம்ம யெஷீரன் 

அவர் நின்னா அற்புதம்
வார்த்தை சொன்னா அற்புதம் 
எக்கச்சக்க அற்புதம்
எச்சில் கூட அற்புதம்

இயேசு என்ற ஒரே நாமம் 
பாவம் போக்கிவிடுமே 
இயேசு என்ற ஒரே நாமம்
பரலோகம் சேர்த்துவிடுமே

மரணத்தை வென்றவரு
உயிரோடு வந்தவரு
நித்தியத்த தந்தவரு
பரலோகம் சென்றவரு

ஆலோசனை கொடுக்கும் ஆண்டவர் இவரு
அதிசயம் என்பதும் இவரோட பெயரு
வல்லதேவன் நித்திய பிதா சமாதானர் இவர்தான்
இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடுதான்

வழி சத்தியம் ஜீவன்
ஜீவனுள்ள தேவன் 
விண்ணுலக அப்பம்
ஆனாரே வெண்கல சற்பம்
அவரே ஜீவ தண்ணீர்
துடைத்திடுவாரே கண்ணீர்
உலகத்திற்கு ஒளி
பரலோகத்தின் வழி 
ஆடுகளுக்கு வாசல் 
இல்லென்னா வாழ்க்கை ஊசல்
மேய்ப்பன், திராட்சை செடி
பேசினா மின்னல் இடி
போதுமடா வாழ்ந்தது இஷ்டப்படி
மனம் திரும்பாவிட்டால் விழுமே மரண அடி
அவர் முன்னால போடு முழங்கால் படி
சாஷ்டாங்கமா விழு அவர் பாதப்படி

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.

No comments: