Tuesday, March 18, 2025

seerar vivaham ethen govile சீரார் விவாகம் ஏதேன் காவிலே

 சீரார் விவாகம் ஏதேன் காவிலே

நேராய் அமைத்த தேவ தேவனே
தாராய் மன்ற லாசியே
வாராய் சுபம் சேரவே

நேயனே மகா தூய தேவ தேவனே
சீர் மேவும் மெய்மனாசி நீதரவா
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர் மேவுமே ஆசி தா.

1. மங்கள மணமகன் ஜானுடனே
  மங்கள மணமகள் சுதா சேர்ந்துமே
  நேச தேவ தயவாய்
  பாசத்துணை சேர்த்துவை - நேயனே

2. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்
  நாடு உயர்ந்த தேவ நூலதைத்
  தேடித் துணை கொண்டன்பாய்
  நீடித்திவர் வாழ்ந்திட - நேயனே

3. வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
  வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
  வாழ்க சுற்றத்தார் அன்பர்
  வாழ்க சுபமன்றலும் - நேயனே

No comments: