Wednesday, February 5, 2020

KIRUBAIKKAAGAVAE KENJI NIRKINDREN

கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன்
என் மேல் மனமிரங்கி வாழ வையுமே
வாழ வைங்கப்பா வாழ வைங்கப்பா
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா

மனிதர்கள் முன்பாக தலை குனியாமல்
யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே 

கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமே
அன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே 

சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும்
விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ 

தள்ளாட்டம் தடுமாட்டம் நிறைந்த உலகிலே
உம்மை போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே

UN THALAYAI UYARTHTHUVAAR

உன் தலையை உயர்த்துவார்
உன்னை நிலை நிறுத்திடுவார்
உன் தடைகளை தகர்த்திடுவார்
உனக்கு முன்னே நடந்திடுவார்

புது கிருபைகள் புது நன்மைகள்
இந்த ஆண்டிலும் காண செய்வாரே
வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே
உன்னை மகிமைப்படுத்துவார்

நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை மகிழ்ச்சியாக்குவார்
நீ தலை குனிந்து போவதில்லை
நீ தலை குனிந்து போவதில்லையே

துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்
இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார்
இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் உன்னை மறப்பதில்லை

EN DHEVANE NEER PATHIRAR

என் தேவனே நீர் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேனே
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
நீரே என் தேவனே

செட்டையின் நிழலில் அடைக்கலம்
கூடார மறைவில் காத்திடும்
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் 

உதிரம் சிந்தி என்னை மீட்டவர்
சிலுவை சுமந்தென்னை சுமப்பவர்
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் 

கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்
கேட்கின்ற யாவையும் கொடுப்பவர்
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம்

EN THEVAI NINAITHU KALANGINA POTHU

என் தேவை நினைத்து கலங்கின போது
உம் ஆசியை பொழிந்தீர்
உனக்காக இருக்கிறேன் என்று சொல்லி
என் உள்ளத்தை தேற்றினீர்-2

என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2
அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே-2

நான் நினைப்பதை விடவும்
கேட்பதை விடவும்
அதிகமாய் தருகிறீர்
உம் கரத்தால் என்னை
இழுத்து அணைத்து
பாசத்தால் நனைக்கிறீர்-2

என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2
அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே-2

உம்மை ஆராதிப்பேன்
என் அழகே என் அமுதே
உம்மை ஆராதிப்பேன்
என் அரணே என் கோட்டையே
உம்மை ஆராதிப்பேன்
என் சுவாசமே என் ஜீவனே
உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே ஆருயிரே
உம்மை ஆராதிப்பேன்-2

THAAI MARANDHALUM AVAR UNNAI

தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை-2

ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா
பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை கைவிட்டாலும்-2

உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
உன்னை ஒருபோதும் மறப்பதில்லை 
நம்பினோர் கைவிட்டாலும்
நண்பர்கள் விலகிட்டாலும்-2

நல்ல நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே
உண்மை நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே 

அன்பானவர் மறைந்தாரோ
ஆதரவை இழந்தாயோ-2
ஆறுதலின் தேவன் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்

உண்மை தேவன் நம் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் 
தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை

உள்ளங்கையில் நம்மை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை
அவர் ஒருபோதும் மறப்பதில்லை
இயேசு ஒருபோதும் விடுவதில்லை

Thursday, January 23, 2020

MATTRIDUM UM SAYALAY

மாற்றிடும் உம் சாயலாய் – என்னை
மாற்றிடும் உம் சாயலாய்

உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும்
உம் சாயலாக உருமாற்றிடும்

அசுத்தமான உலகில் உம் சாயலாக
பரிசுத்தமாக உருமாற்றிடும்

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
உம் சாயலாக உருமாற்றிடும்

எனது சுபாவங்கள் எனது நினைவுகள்
உம் சாயலாக உருமாற்றிடும்

இயேசுவைப் போல இயேசுவைப் போல
என் சாயல் மாற உருமாற்றிடும்

MATRUM ENNAI UNTHAN

மாற்றும் என்னை உந்தன் சாயலாய்
ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்
சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்
நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே

யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர்
சவுலைப் பவுலாய் மாற்றினீரே
எந்தன் பாவச் செயல் நினையாமல்
என்னை நேசித்த உந்தன் அன்பு

சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும்
நிலைவர ஆவியே என்னில் தந்திடும்
இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும்
உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும்

தண்ணீரை ரசமாக மாற்றினீரே
தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே
தற்பரா உந்தன் பொற்பாதத்தை நான்
தாழ்ந்து பணிந்து வருகின்றேன்

கல்வாரி சிலுவையின் தேவ அன்பு
கல்லான என்னுள்ளத்தை மாற்றினதே
தூரமாய் இருந்து என்னைத் தம் கரத்தால்
தூக்கி அணைத்த தேவ அன்பு