Thursday, March 13, 2025

Poovin Pavangal yavum pokida பூவின் பாவங்கள் யாவும் போக்கிட

 



பூவின் பாவங்கள் யாவும் போக்கிட

தேவ மைந்தன் யேசு பிறந்தார்

பெத்லகேம் ஊரில் புல்லணை மீது

பாலனாக தவழ்ந்தார்.



  பாடுவோம் பாடுவோம்

  பாலனை நாம் போற்றுவோம்

  துதிப்போம் துதிப்போம்

  ஆனந்தமாய் ஆர்ப்பரிப்போம்



வானில் விந்தையாய் விண்மீன் தோன்றிட

வாடைக் காற்று மெல்ல வீசிட

கன்னி மாpயாள் மைந்தனாகவே

யேசு பாலன் பிறந்தார் பாடுவோம்



வானில் தூதர்கள் கீதம் இசைக்க

ஆட்டிடையர் செய்தி கூறிட

மன்னன் ஏரோது எண்ணி கலங்க

மண்ணில் தேவன் தோன்றினார் பாடுவோம்

No comments: