Saturday, April 11, 2020

ARULE PORULE AARANAME

அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே
இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந்தொடராமல்
மருண்டு மனது பிறழாமல், வஞ்சத் தொழிலிற் செல்லாமல்
கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொரு கோடி

சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்கு செய்துவந்த
நன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,
என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்து
கன்று நினைந்து கதறுதல்போல் கழறுந் துதியுனக் கொரு கோடி

பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!
வற்றாஞான சமுத்திரமே வடுவொன்றில்லா வான் பொருளே!
பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக்
கற்றில்லாத மிகச்சிறியேன் கழறுந் துதியுனக் கொரு கோடி,

பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தே யென்றும் வாழ்ந்திருக்க,
நத்தும், இரவு முழுதனைத்தும் நாதா, என்னைக்காத்தருளி
முத்தியென்னும் மோட்சநிலை முடிவிலடியேன் தன்னைச் சேர்க்கக்
கத்தியலறிப் பரவசமாய்க் கழறுந்துதியுனக் கொரு கோடி

No comments: