Thursday, September 24, 2015

KARTHAR EN PAKKAMAGIL

1. கர்த்தர் என் பக்கமாகில்
எனக்கு பயம் ஏன்?
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்;
அப்போதென்மேலே வந்த
பொல்லா வினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்புபோல ஆம்.

2. என் நெஞ்சின் அஸ்திபாரம்
மேலான கர்த்தரே;
அதாலே பக்தர் யாரும்
திடன்கொள்வார்களே;
நான் ஏழைப் பலவீனன்,
வியாதிப்பட்டோனே;
அவரில் சொஸ்தம்இ ஜீவன்
சமஸ்தமும் உண்டே.

3. தெய்வாவி என்னில் தங்கி
என்னை நடத்தவே,
பயம் எல்லாம் அடங்கி
திடனாய் மாறுதே;
அப்பாவே என்று சொல்ல,
அவர் என் நெஞ்சுக்கே
ஆற்றல் சகாயம்செய்ய
என் ஆவி தேறுதே.

4. என் உள்ளமே களிக்கும்
துக்கிக்கவேண்டுமோ?
கர்த்தர் என்மேல் உதிக்கும்
பகலோன் அல்லவோ?
பரத்தில் வைக்கப்பட்ட
அநந்த பூரிப்பே
என் ஆவிக்கு பலத்த
திடன் உண்டாக்குமே.

No comments: