Thursday, December 19, 2019

SUNDHARA PARAPARANE PARISUTHAN

சுந்தர பராபரனே பரி சுத்தன்
கிறிஸ்தேனும் நித்தியனே
மைந்தனைப் பிறந்தீரோ சுவாமி
மாங்கிஷத்தில் உருவாணீரோ

வான தூதர் போற்றிடவே உண்மை
வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே
காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி
காட்டு மடத்தில் உதித்ததென்ன ?

ஆசை மிகு ஆபிரகாம் உரு – வாகும் முன்
விண்தல மீதிருந்தும்
நேசமுடன் பிள்ளை தந்தும் அந்த
நீதிமான் வங்கிஷம் ஆனதென்ன?

பொங்கு பாவ நாசனனே விண்ணோர்? – போற்றிப்
புகழ்ஞ் சிம்மசானனே
தங்குதற்கிடம் இல்லையோ – சுவாமி
தாபரிக்க ஒரு ஊர் இல்லையோ ?

NAMBI VANTHA YAAVARUKKUM

நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் (2)
இயேசு என்றும் நல்லவர் இயேசு என்றும் வல்லவர்
இயேசு நம்மை கைவிடாதவர்
நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர்
திக்கற்றோரின் தகப்பன் இவர்
ஏழைகளின் தலைவன் இவர் (2)
நம்புவோம் இயேசு ராஜனை
பற்றிக்கொள்ளுவோம் அன்பு நேசரை (2) – இயேசு

பாவங்களை சாபங்களை
சிலுவையிலே ஜெயித்தெழுந்தார் (2)
ரத்தமே இயேசு ரத்தமே
ஜெயம் தருமே இன்றும் என்றுமே (2) – இயேசு

கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
காயமெல்லாம் ஆற்றிடுவார் (2)
நித்திய ஜீவன் தந்திடுவார்
நித்தமும் வழி நடத்திடுவார் (2) – இயேசு

IRAIVAN THANTHA VARTHTHAI

இறைவன் தந்த வார்த்தை
இயேசுவின் வடிவானதே – அவர்
பேசும் எந்த சொல்லும்
வாழ்வின் வழியானதே

சரணங்கள்

1. யாவீரு மகளான சிறுமியும்
நாயீனூர் விதவையின் மைந்தனும்
லாசரு எனும் ஓர் நண்பனும்
உயிரோடு எழுந்திட உதவினார்
ஒளியும் வாய்மையும் இயேசுவே
வழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன்

2. தொழு நோய் கொடுமைகள் தீரவே
அழிவின் பேய்கள் ஓடவே
உடலின் குறைகள் மாறவே
இறைவன் இயேசு உதவினார்
ஒளியும் வாய்மையும் இயேசுவே
வழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன்

AZHAGANAVAR ARUMAIANAVAR INIMAI

அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர்
ம‌கிமையான‌வ‌ர் மீட்ப‌ரான‌வ‌ர்
அவ‌ர் இயேசு இயேசு இயேசு

சரணங்கள்

1. சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ந‌ம் ம‌கிமையின் இராஜா
என்றும் ந‌ம்மோடிருக்கும் இம்மானுவேல‌ன்
இம்ம‌ட்டும் இனிமேலும் எந்த‌ன் நேச‌ர்
என்னுடைய‌வ‌ர் என் ஆத்ம‌ நேச‌ரே

2. க‌ன்ம‌லையும் கோட்டையும் துணையுமான‌வ‌ர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமான‌வ‌ர்
என்றென்றும் ந‌ட‌த்திடும் எந்த‌ன் இராஜா
என்னுடைய‌வ‌ர் என் நேச‌ க‌ர்த்த‌ரே

3. க‌ல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே
நேச‌ர் இர‌த்த‌ம் சிந்தியே என்னை மீட்டார்
பாச‌த்தின் எல்லைதான் இயேசு இராஜா
என்னுடைய‌வ‌ர் என் அன்பு இர‌ட்ச‌க‌ர்

ALAIKUM SATHAM KETKALAIYO

அழைக்கும் சத்தம் கேட்கலையோ
அழைக்கும் இயேசுவை பார்க்கலையோ
அனு
மழைக்கும் ஆழிக்கும் மேலானவர்
தழைக்கும் விருட்சத்தின் கருவானவர் – அவர

சரணங்கள்

1. காணாத ஆட்டை தேடினவர்
கானகத்தில் குளிர் நீரானவர்
மலைக்கும் நடுவில் நீர் உண்டு பண்ணி (2)
மலைக்கும் விதமாய் இரட்சித்தவர் (2) – அவர்

2. குஷ்டரோகியைக் குணமாக்கினவர்
கஷ்ட நோய்களை எல்லாம் நீக்கினவர்
துஷ்டனாய் நடந்த சவுல் என்ற நபரை (2)
இஷ்டமாய் பவுலாய் மாற்றியவர் (2) – அவர்

3. சீஷர்கள் கால்களைக் கழுவினவர்
பாசமாய் சிறுவரை நேசித்தவர்
நீசராம் நம்மை திருத்திட எண்ணி (2)
கசையடி வசை மொழி ஏற்றிட்டவர் (2) – அவர்

4. வருந்திய மக்களை மகிழ்வித்தவர்
திருந்திய மக்களை இரட்சித்தவர்
வேதனையோடு தொங்கிய போதும் (2)
வேதனை செய்தவரை மன்னித்தவர் (2) – அவர்

Wednesday, December 18, 2019

AADHIPITHA KUMARAN AAVI THIRIYEGARKU

ஆதிப்பிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம் – திரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம்
அனு
நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர,
உறைந்த நித்திய வேத குணாசர
நீடு வாரி திரை சூழு மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் — ஆதி

சரணங்கள்

1. எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்,
துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு
சோதனை செய் அதி நீதர்
பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான்,
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய்க யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனத்தையும்பண் பாய் நடத்தி, அருள் — ஆதி

2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு – நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து,
தீதறு நரகில் தள்ளுண்டு – மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
பரன் எங்கள் மிசை தயை வைத்தனர் இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் — ஆதி

ANANTHA NAAL VARUME

ஆனந்த நாள் வருமே – எந்தன்
ஆண்டவன் ஏசுவைப்பாடி மகிழ நல்ல – ஆனந்த

அனுபல்லவி

கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால்
பாடிப் பாடித் தினம் மகிழ நல்ல – ஆனந்த
தேவ சித்தம் நிறைவேறும் – திரு
மந்தை யாவும் ஒன்று சேரும் – ஆனந்த
மேவி நடுத்தீர்க்க மேன்மை அன்பு காட்ட
பூவின் மக்கள் ஒன்று கூடிக் கீதம் பாடும் – ஆனந்த