Thursday, August 27, 2015

THUNGANIL OTHUNGUVON PANGAMINDRI THANGUVAN

துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான்

அனுபல்லவி

கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால் --- துங்கனில்

சரணங்கள்

1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே --- துங்கனில்

2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண் --- துங்கனில்

3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம் --- துங்கனில்

4. தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்,
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே --- துங்கனில்

5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே --- துங்கனில்

6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள் --- துங்கனில்

THUTHI GANAM MAGIMAIYUMAKKE

துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஓ ! நீரே ராஜாவே

துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே

THUTHI THANGIYA PARAMANDALA SUVISEDAGA NAAMAM

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்

1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் --- துதி

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் --- துதி

3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் --- துதி

4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் --- துதி

5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் --- துதி

6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் --- துதி

THUTHI MAGIMAI GANAM VALLAMAI

துதி மகிமை கனம் வல்லமை
அனாதி தேவனுக்கே
எல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும்
தேவனை பணிந்திடுமே

சகல நாவும் போற்றும் தேவா - வானம் பூமி
எங்கும் முழங்கால்கள் முடங்கிடுமே - பணிந்து
நீரே என்றும் உயர்ந்திடுவீர் - உம் ராஜ்யம்
என்றென்றும் நிலைத்திருக்கும்
அனாதி தேவா

THUTHITHU PAADIDA PAATHIRAME LYRICS

1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே
3. அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே
4. இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே
5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே

THUTHIPPEN YESUVIN PAATHAM THUTHIKKA

1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் --- துதி

2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை --- துதி

3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர் , அற்புதர் , அற்புதர் , அவர் நாமமே அதைத் --- துதி

4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே , ஜொலிப்பாரெ , ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் --- துதி

5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே , மகத்துவமே , மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் --- துதி

6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன் , மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் --- துதி

THUKKAM KONDADA VAARUME LYRICS

1. துக்கம் கொண்டாட வாருமே,
பாரும்! நம் மீட்பர் மரித்தார்
திகில் கலக்கம் கொள்ளுவோம்
இயேசு சிலுவையில் மாண்டார்.

2. போர் வீரர், யூதர் நிந்தித்தும்,
மா பொறுமையாய்ச் சகித்தார்
நாமோ புலம்பி அழுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

3. கை காலை ஆணி பீறிற்றே,
தவனத்தால் நா வறண்டார்;
கண் ரத்தத்தாலே மங்கிற்றே;
இயேசு சிலுவையில் மாண்டார்.

4. மும்மணி நேரம் மாந்தர்க்காய்,
தம் மெளனத்தாலே கெஞ்சினார்;
நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
இயேசு சிலுவையில் மாண்டார்.

5. சிலுவையண்டை வந்துசேர்,
நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

6. உருகும் நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும் தாரும், இயேசுவே;
மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
நீர் சிலுவையில் மாண்டீரே!