Saturday, May 18, 2024

KANGALAI YERUDUPPEN MAAMERUNERAI கண்களை ஏறெடுப்பேன்



கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்

கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி
விண் மண் உண்டாக்கின வித்தகனிட மிருந்
தெண்ணிலா வொத்தசை எந்தனுக்கே வரும்

காலைத் தள்ளாட வொட்டார்,உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின் ரிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங் காரவர்.-

பக்க நிழல் அவரே -எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே 
எக்கால நிலைமையும் எனக் சேதப் படுத்தாது
முக்காலம் நின்ரென்னை நற் காவல் புரியவே .-

எல்லாத் தீமை கட்கும் என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும் ,
பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் 
நல்லாத்தூமாவையும் நாடோறும் காப்பவர்

No comments: