Wednesday, September 28, 2016

Enai Kaakka Karthar Undu

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Verse 1

பகல் நேரம் பறந்திடும் அம்பு
ஒன்றும் செய்ய முடியாதே
இரா ஜாம பயங்கரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே x 2
இருளில் நடமாடும் கொள்ளை
நோயும் ஒன்றும் செய்யாதே
மத்தியானப் பாழாக்கும்;
சங்காரம் ஒன்றும் செய்யாதே

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Verse 2

சிங்கத்தின் கெபியில் கூட பயந்திடவே நான் பயந்திடமாட்டேன்
தீவிரமாய் தீவிரித்தென்னைக் காத்திட வந்திடும் தேவன் உண்டே
அக்கினியின் சூளை நடுவில் எரிந்திடவே நான் எரிந்திடமாட்டேன்
கரத்திற்குள் மறைத்துக் கொண்டு கருத்தாய் காக்கும் தேவன் உண்டே

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

No comments: